பிக் பாஸ் 8ல் என்ட்ரியாகும் இன்ஸ்டா பிரபலம்.. இவர் காதல் மன்னன் ஆச்சே! கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் இதில் இன்ஸ்டா பிரபலமான டாக்டர் திவாகர் கலந்து கொள்ள போவதாக சில செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில் இது பற்றி அவரே பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்து இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பெயர் வாங்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் 7 சீசன்கள் முடிவடைந்து இருக்கிறது. எட்டாவது சீசன் விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. அதற்கு முன்பே பஞ்சாயத்து தொடங்கிவிட்டது. இதுவரைக்கும் 7 சீசன்களாக தொகுப்பாளராக இருந்த கமல்ஹாசன் இந்த சீசனில் தான் விலகி இருப்பதாக கூறி இருக்கிறார். அதோடு தனக்கு அதிகமான வேலைப்பளு இருப்பதால் இந்த நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக ரெஸ்ட் எடுத்துக் கொள்வதாகவும் கமல்ஹாசன் கூறியிருந்தார்.

Vijay TV Bigg Boss Entertainment

கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்றதும் ஆரம்பத்தில் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. ஆனால் கடந்த சீசனில் அவர் அதிகமான விமர்சனத்திற்கு உள்ளானார். அதனால் தான் இந்த சீசனில் கமல் விலகி விட்டாரா? என்று கேள்விகள் வருகிறது. ஆனாலும் ஆரம்பத்தில் இருந்தே கமல்ஹாசன் தன்னுடைய வாழ்க்கையில் பல்வேறு விமர்சனங்களை சந்தித்திருக்கிறார்.

அதற்கெல்லாம் பின்வாங்காத நிலையில் இந்த முறை பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் இருந்து அவர் விமர்சனங்களுக்காக பின்வாங்கி இருக்க மாட்டார், அவருக்கு ஏற்கனவே கமிட்டான படங்களில் நடிக்க வேண்டிய வேலை இருப்பதால்தான் அவரால் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க விரைவில் எட்டாவது சீசனுக்கான சூட்டிங் தொடங்கப்பட இருக்கிறது.

Vijay TV Bigg Boss Entertainment

அதிலும் இந்த சீசனில் யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்ற பெரும் பஞ்சாயத்தும் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இறுதியாக விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்க இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த சீசனில் யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று உத்தேச பட்டியலும் இணையத்தில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதில் ஒவ்வொரு முறையும் பல்வேறு கேட்டகிரியில் இருந்து போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அந்த வகையில் இந்த முறையும் அதுபோலத்தான் தேர்ந்தெடுக்க போகிறார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் சமூக வலைதளத்தில் பிரபலங்களாக இருக்கும் நபர்கள் இந்த முறையும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் இன்ஸ்ட்டாவில் பலருக்கும் பரிட்சயமான டாக்டர் திவாகர் இந்த சீசனில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும்போது ஆமாம் நானும் அந்த செய்தியை கேள்விப்பட்டேன்.

என்னுடைய நண்பர்கள் உன்னுடைய பெயரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான போட்டியாளர்கள் பெயரில் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார்கள். அப்படி இருந்தால் எனக்கு சந்தோசம் தான். நான் கண்டிப்பாக பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தால் போவேன். நான் ஒரு டாக்டராக இருந்தாலும் எனக்கு கலைத்துறையில் அதிகமான ஆர்வம் இருக்கிறது. அதனால் தான் நான் அதிகமான ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுகிறேன்.

என்னை பார்த்து பலரும் நீங்க அடுத்த சிவாஜி என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய திறமையை நிரூபிப்பதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு பெரிய சப்போர்ட்டாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதோடு அவரிடம் நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்பு கிடைத்தால் போவீர்களா என்று கேட்ட கேள்விக்கு அதற்கும் அவர் பதில் அளித்திருக்கிறார்.

அதில் நான் எப்படி வேண்டாம் என்று சொல்வேன்? எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதை நான் செய்வேன். எதையும் என்னால் முடியாது என்று கிடையாது என்று அதிரடியாக அவர் கூறியிருக்கிறார். சும்மாவே இவர் சூர்யா போல வெளியிட்ட வீடியோ பெரிய அளவில் இப்ப வரைக்கும் இணையத்தில் மீம்ஸ்களாக வலம் வந்து கொண்டிருக்கும்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டால் கண்டென்ட்டுக்கு பஞ்சமே இருக்காது. அவர் தன்னைத்தானே காதல் மன்னன் என்று அழைத்துக் கொள்ளும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் வந்தால் மீம்ஸ் வெளியிடுபவர்களுக்கு அதிகமான வேலை இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+