நீ வாலு பையன்னு நினைச்சேனே.. தப்பான வீடியோ போட்டதே இல்லை.. மெனக்கெட்ட இன்ஸ்டா ராகுல் டிக்கி: பிரபலம்
சென்னை: ராகுல் டிக்கி இன்ஸ்டாவில் வந்தபிறகு, எத்தனையோ லட்சம் பேர் அவரை பாலோ செய்கிறார்கள்.. அப்படியிருக்கும்போது, கவனமாக இருக்கணும் இல்லையா? இன்றைய இளைஞர்கள், வாகனங்களை கவனமாக ஓட்ட வேண்டும் என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா அறிவுறுத்தியிருக்கிறார்.
ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த 27 வயதான ராகுல், இன்ஸ்டாவில் பிரபலமானவர்.. இவருக்கு இன்ஸ்டாவில் 8 லட்சம் பார்வையாளர்களும், யூடியூபில் 4 லட்சம் பார்வையாளர்களும் உள்ளனர்.

நேற்றுமுன்தினம் இரவு, தலைப்பொங்கலுக்காக மனைவியை அழைத்து வருவதற்காக, மாமியார் வீட்டுக்கு சென்றாராம் ராகுல்.. பல்சர் பைக்கில் சென்றபோது கவுந்தம்பாடி பாலத்திலுள்ள சென்டர் மீடியனில் மோதி, கோர விபத்துக்கு ஆளானார்.. தலையில் ஹெல்மெட் போடாததால், மண்டை உடைந்து, கிட்டத்தட்ட 50 மீட்டர் தூரத்துக்கு பைக்கிலிருந்து இழுத்து செல்லப்பட்டார்.. ஆனாலும், அவரை காப்பாற்ற முடியவில்லை.
ராகுல் விபத்து: ராகுலின் மரணம் ஒட்டுமொத்த இணையவாசிகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. கடந்த 2 நாட்களாகவே அவரது வீடியோக்கள் இணையத்தில் அவரது ரசிகர்கள் ஷேர் செய்து வருகிறார்கள். குறிப்பாக, அவர் கடைசியாக பதிவிட்டிருந்த வீடியோவில் தன்னுடைய விருப்பத்தையும், தந்தை பற்றின தன்னுடைய ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியிருந்தார்..
அதில், "எனக்கு அப்பா கிடையாது, அம்மாதான் என்னை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க.. அப்பான்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்.. அவரது அன்புக்காக ஏங்குறேன்.. அப்பாவின் கதகதப்பு எப்படி இருக்கும்னு எனக்கு தெரியாது.. ஒருவேளை அப்பா அட்வைஸ் எனக்கு கிடைச்சிருந்தால், என் வாழ்க்கை இன்னும் சிறப்பா இருந்திருக்கும். என் அம்மாவையும், என் மனைவியையும் விட்டுட்டு என்னால தனியா இருக்கவே முடியாது" என்றெல்லாம் பேசியிருக்கிறார்.
ராகுல் டிக்கி: இந்நிலையில், Kingwoods யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தந்துள்ள பேட்டியில், "ராகுலை இன்ஸ்டாவில் ஃபாலோ செய்பவர்களில் நானும் ஒருவன்.. தப்பான வீடியோ எதுவும் போட்டதில்லை.. ஜாலியான வீடியோக்களை மட்டுமே போடுவார்..
இன்ஸ்டாவில் ராகுலின் காமெடி வித்தியாசமாக இருக்கும்.. இதுக்காகவே மெனக்கெடுவார்.. அவரது பாடிலேங்குவேஜ், சேட்டைகள், யாரையும் புண்படுத்தியதில்லை.. டபுள் மீனிங் இல்லாமல் வீடியோ போடுவார்.. வீடியோக்கள் ஒவ்வொன்றும் மறுபடியும் மறுபடியும் பார்க்க தூண்டும்.. வித்தியாசமான கெட்டப்பில் வருவதும் பலரையும் கவர்ந்தது.
வால் பையன்: யாருமே இந்த விபத்தை எதிர்பார்க்கவில்லை. அந்த பைக் புதுசா வாங்கினதா சொல்றாங்க, தானாகவே எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டதாகவும் சொல்கிறார்கள்.. போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் தெரியும். நான் இதுவரை 30 வீடியோ பார்த்திருப்பேன்.. அதில் எதுவுமே தப்பான வீடியோ கிடையாது.. அருவெறுப்பும் இருக்காது.. வால் பையன்னுதான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனால் சமீபத்தில் கல்யாணம் ஆனது இப்போதுதான் தெரியும்.
இன்ஸ்டாவில் எத்தனையோ குப்பைகளும் இருக்காங்க.. ஆனால், ராகுல் போன்றவர்கள், உழைப்பை கொட்டுகிறார்கள். சிலர் உடலை வருத்தியும் வீடியோ செய்கிறார்கள்.. சிலரை பார்த்தாலே நமக்கு சிரிப்பு வரும்.. லொள்ளு சபாவில் யாரை பார்த்தாலும் சிரிப்பு வருமே, அப்படித்தான் ராகுல் டிக்கியும். ராகுல் டிக்கி இன்ஸ்டாவில் வந்தபிறகு, எத்தனையோ லட்சம் பேர் அவரை பாலோ செய்கிறார்கள்.. அப்படியிருக்கும்போது, கவனமாக இருக்கணும் இல்லையா?
எலும்பு சதை: பிரபலங்கள் என்றில்லை, ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து இளைஞர்களுக்கு சொல்கிறேன், தங்களுக்கு விருப்பப்பட்ட வண்டியை இந்த இளைஞர்கள் வாங்கி கொள்ளட்டும், ஆனால், கவனமாக ஓட்டணும்.. பட்டி டிங்கரிங் பார்த்துட்டு வேலை பார்க்க இதுவொன்றும் மிஷின்இல்லை, எலும்பும் சதையுமுள்ள உடம்பு.. ஒவ்வொரு நாளும் உடல்நிலை தேயுது.. 25 வயதுக்கப்பறம் தேய்மானம்தான்.. அதனால் வண்டி ஓட்டும்போது, பத்திரமாக போகணும்.
வண்டி ஓட்டும்போது, உங்களை டிராபிக் போலீஸ் நிறுத்தினால், உங்களுக்கு வரப்போகிற ஆபத்தை தடுக்கக்கூடிய கடவுளாக அவரை நினைத்துக் கொள்ளுங்கள்" என்றெல்லாம் அறிவுறுத்தியிருக்கிறார்












Click it and Unblock the Notifications