இனி கல்யாணத்தை பத்தி பேசாதீங்க, திருமணத்தை நிறுத்திய இர்பான்...இப்படி ஒரு காரணத்தை எதிர்பார்க்கலையே
சென்னை: யூடியூப் பிரபலமான உணவு விமர்சகர் இர்பான் தற்போது தனது திருமணத்தைப் பற்றி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
திருமணத்தைப் பற்றி கேள்வி கேட்ட ரசிகர்களுக்கு இவருடைய பதில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்திருக்கிறது.

யூடியூப் பிரபலம்
யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவு விமர்சகர் இர்பான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு அதனுடைய டேஸ்ட் குறித்தும், உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவு இடுவார். இதனாலே இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார் என்று கூட சொல்லலாம். இவர் பல ஊர்களுக்கு சென்று பல ஓட்டல்களில் சாப்பிட்டு அதற்கான கருத்துக்களை போடுவார். மேலும், இவர் எப்போதும் அரை டவுசர் போட்டுக்கொண்டு தான் சந்து கடை முதல் வெளிநாடுகளில் உள்ள காஸ்ட்லி ஹோட்டல் வரை சென்று உணவை சாப்பிட்டு விமர்சனம் செய்து வீடியோ போடுவார். இதன் மூலம் இவருக்கு பல விருதுகள் கிடைத்திருக்கிறது.

இர்பான் நிச்சயதார்த்தம்
இப்படி உணவுகளை விமர்சித்து வந்த இர்பானுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது என்று இவருடைய நண்பர்கள் நிச்சயதார்த்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார்கள். இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பின் உடனே இர்பான் இதற்கு விளக்கம் கொடுத்து பதிவு போட்டு இருந்தார்.அதில் அவர், எனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது. என்னுடைய ஃபுல் காஸ்டியூம் உடன் இருக்கும் புகைப்படத்தை பாருங்கள் என்று பகிர்ந்து இருந்தார். இதற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து இருந்தார்கள். மேலும், இவருடைய நிச்சயதார்த்தம் முடிந்து 4 மாதத்தில் திருமணம் நடக்க இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து ரசிகர்களும் நெட்டிசன்களும் உங்களுடைய திருமணம் எப்போது என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தார்கள். அதோடு இர்பான் சொன்னதுபோல் நாலைந்து மாதம் முடிந்தும் இவருடைய திருமணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இது குறித்து ரசிகர்கள் பல்வேறு கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இர்பான் கருத்து
இர்பான் ஒரு பிரபலமாக இருப்பதால் ரசிகர்களின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க விரும்பி தற்போது வெளிப்படையாக பேசி இருக்கிறார். அதில் தன்னுடைய திருமணம் நின்று போய்விட்டது, காரணம் என்னுடைய எண்ணங்களும் அவர்களுடைய எண்ணங்களும் சரியாக பொருந்தவில்லை. நான் எல்லாம் சரியாக பொருந்தனும் என்று ஆசைப்படவில்லை. திருமணம் என்பது ஒரு முறை தான் கடைசி வரைக்கும் நான் அவருடன் பயணிக்க வேண்டும். ஆனால் எனக்கு செட் ஆகவில்லை என்று தெரிந்து நான் நிறுத்திவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

இதுதான் இறுதியான முடிவு
அது மட்டுமல்லாமல் இவர் தன்னுடைய திருமணத்தை நிறுத்துவது பற்றி வீட்டில் முதலில் பேசிய போது இவரை மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று இருக்கிறார்கள். ஆனால் அதற்கு பிறகும் தன்னுடைய முடிவில் இவர் இறுதியாகவும், உறுதியாகவும் இருந்ததால் வேறு வழியின்றி வீட்டில் சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் பெண் வீட்டில் பேசும் போதும் கூட அவர்கள் ஆரம்பத்தில் தயங்கினாலும் பின்பு சூழ்நிலையை புரிந்து கொண்டு திருமணத்தை நிறுத்தி விட்டார்களாம். அதனால் இனி தன்னுடைய திருமணத்தை பற்றி யாரும் பேச வேண்டாம் அதை விட்டுவிட்டு ஜாலியாக ஏதாவது பேசலாம் என்று பெயர் கூறி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications