இர்பான் வெளியிட்ட அடுத்த வீடியோ.. தன் மகளுக்கு வைத்த வித்தியாசமான பெயர்.. அதற்கு காரணம் இதுதானாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : யூடியூபரவாகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காகவும் பிரபலமடைந்த இர்ஃபான் தன்னுடைய மனைவியின் பிரசவ வீடியோவை வெளியிட்டு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அந்த சர்ச்சை பரபரப்பாக இருக்கும் போதே தன்னுடைய மகளுக்கு பெயர் சூட்டி அந்த வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய மகளின் பெயர் மற்றும் அதற்கான அர்த்தத்தையும் கூறியிருக்கிறார்.

யூடியூப்பர் இர்ஃபான் சாப்பாடை ரிவ்யூ செய்து பிரபலம் அடைந்ததை விடவும் சர்ச்சைகளால் அதிகமாகவே பிரபலம் அடைந்து கொண்டிருக்கிறார். சில மதங்களுக்கு முன்பு அவருடைய கார் ஏற்படுத்திய விபத்து பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த பிரச்சனை அடங்குவதற்குள் இர்ஃபான் தன்னுடைய மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து ஒரு பார்ட்டி கொண்டாடி அதை வீடியோவாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

cook with comali irfan

அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மன்னிப்பு கேட்டு அந்த வீடியோவையும் டெலிட் செய்திருந்தார். அதைத்தொடர்ந்து இப்போது அடுத்த சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அதாவது சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய குழந்தையின் முகத்தை முதல் முறையாக காட்டி இருந்தார்.

அதோடு தன்னுடைய குழந்தையின் வீடியோ youtube பக்கத்தில் வெளியாகும் என்று கேப்ஷன் கொடுத்து ரசிகர்களுக்கு அறிவிப்பு கொடுத்திருந்தார். அவர் சொன்னது போல அடுத்த நாள் அவருடைய குழந்தையின் வீடியோ வெளியானது அதை பார்த்தது தான் ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். தன்னுடைய குழந்தை பிறக்கும் போது மனைவி பட்ட கஷ்டங்கள் மற்றும் தன்னுடைய பதட்டத்தை காட்டிய இர்ஃபான் கடைசியில் தன் குழந்தை பிறக்கும்போது தொப்புள் கொடியை தானே கட் செய்திருக்கிறார். அதையும் அந்த வீடியோவில் காட்டி இருக்கிறார்.

cook with comali irfan

இதுதான் பெரிய அளவில் பஞ்சாயத்தை கூட்டி இருக்கிறது. இர்ஃபான் செய்தது தவறு, இவர் இதுபோல வீடியோ போட்டால் இவரை போலவே இருக்கும் யூடியூபர்களும் இனி நாங்களும் என்னுடைய மனைவியின் பிரசவத்தை வீடியோவாக வெளியிட போறோம் என்று டாக்டரோடு பிரச்சனை செய்தால் என்ன ஆகும் என்பது பலருடைய கேள்வியாக இருந்தது.

அதுபோல மருத்துவர் தான் குழந்தையின் தொப்புள் கொடியை கட் பண்ண வேண்டும். அதற்காகத்தான் வீட்டில் கூட யாரும் பிரசவம் பார்க்க கூடாது எல்லோரும் மருத்துவமனையில் பிரசவம் பார்க்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்துகிறது. ஆனால் இவர் குழந்தையின் தொப்புள் கொடியை துணிக்கடை ரிப்பனை கட் பண்ணுவது போல கட் பண்ணுகிறாரே என்று பலர் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் உட்பட பலரும் கண்டனங்களையும் தெரிவித்திருந்தனர். இப்படியான நிலையில் இந்த பிரச்சனைகளுக்கு மத்தியிலும் இர்ஃபான் புதிய வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில் அவருடைய மகளுக்கு பெயர் சூட்டி இருக்கிறார்கள். அந்த பெயர் சூட்டு விழா வீடியோவில் தன்னுடைய மகளின் பெயரை அறிவித்திருக்கிறார்.

அதாவது தன்னுடைய மகளுக்கு இஃபா (Ifa) என்றும் இதற்கு ஆங்கிலத்தில் Richness, தமிழில் மதிப்புமிக்க என்ற அர்த்தம் வரும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+