நடிகர் சந்தானத்தின் மகனா இவரு? அடுத்த ஹீரோ ரெடி.. லீக்கான போட்டோஸ்.. குவியும் கமெண்ட்ஸ்
சென்னை: நடிகர் சந்தானம் சின்னத்திரைையிலிருந்து வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்து தமிழ் சினிமாவில் காமெடி டைமிங்கால் ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். இப்போது சந்தானமும் அவருடைய மகனும் எடுத்த புகைப்படம் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

லொள்ளு சபாவிலிருந்து ஹீரோ வரை
பொதுவாக திறமையும் உழைப்பும் இருந்தால் அதற்கான அங்கீகாரம் கண்டிப்பாக ஒருநாள் கிடைக்கும் என்று பலரும் சொல்வார்கள் அதுபோல தன்னுடைய திறமையால் ஜெயித்தவர்தான் சந்தானம். லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான சந்தானம், தன்னுடைய காமெடி டைமிங், உடல் மொழி, மற்றவர்களை கலாய்க்கும் ஸ்டைல் ஆகியவற்றால் ரசிகர்களை ஈர்த்தார்.
அதன்பிறகு மன்மதன் படத்தின் மூலம் சினிமாவில் காலடி வைத்த அவர், தொடர்ந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் மின்னினார். சிம்பு உடன் நடித்த படங்களும், மற்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்ததும் அவரை விரைவில் பிரபலமாக்கின.
ரஜினிகாந்த், அஜித் குமார், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் என்ற பெயரும் அவருக்கு வந்தது.

காமெடி நடிகர் ஹீரோ
காமெடி ரோல்களில் மட்டும் நின்று விடாமல், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் மூலம் ஹீரோவாக மாறிய சந்தானம், தில்லுக்கு துட்டு, A1, டிடி ரிட்டர்ன்ஸ் போன்ற படங்களில் நகைச்சுவையை மையமாக வைத்து தொடர்ந்து வெற்றிப் பாதையில் சென்றார்.

குடும்பம் வாழ்க்கை
சந்தானம் தனது குடும்பத்தை பொதுவாக வெளியில் அதிகமாக காட்டாமல் வைத்திருந்தவர். அவரது மனைவி, குழந்தைகள் குறித்து பெரிய அளவில் பேசாமல் இருந்ததால், ரசிகர்களுக்கு அவரின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதுமே ஒரு சஸ்பென்ஸாகவே இருந்தது.
வைரலான புகைப்படம்
இந்நிலையில், அவரது மகன் நிபுன்- னின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதை பார்த்த ரசிகர்கள், "சந்தானத்தை விட உயரமா வளர்ந்துட்டாரே!" "அடுத்த ஹீரோ ரெடி ஆகிட்டாரா?" என்று கமெண்ட் செய்து வருகின்றனர். பொதுவாக தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு மட்டும் பேரன் பேத்தி எடுத்தாலும் அவங்க இன்னும் காலேஜ் படிக்கும் கேரக்டரில் நடிப்பார்கள். அதேபோல சந்தானத்தின் மகனும் இப்போ ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டார். ஆனால் சந்தானம் இன்னமும் தொடர்ந்து ஹீரோவாகவும், ஹீரோ பிரண்டாகவும் தான் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்போதே ரசிகர்கள் "சந்தானம் மகன் சினிமாவுக்கு வருவாரா?" என்று கேள்வி கேட்க தொடங்கி விட்டனர். அதற்கு இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்ல. ஆனா தமிழ் சினிமாவில் பல ஸ்டார்களின் குழந்தைகள் வருவது போல, இது கூட நடக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
சிவகார்த்திகேயனால் 120 கோடி கடன்? தயாரிப்பாளர் கண்ணீர்... "இன்னும் 2 படம் பாக்கி இருக்கு" என உருக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications