பாவனியின் அடுத்த டார்கெட் ராஜு தானா??...என்ன இப்படி பண்றீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னைக் காப்பாற்றிக்கொள்ள பாவனி யாரை கை காட்டப் போகிறார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

இந்த வாரம் எலிமினேஷனில் சிறப்பு சலுகை கொடுத்து பிக்பாஸ் மிரட்டி விட்டார்.

போன வாரமும் போட்டியாளர்களால் எலிமினேஷன் செய்யப்படாத ராஜு இந்த வாரமும் தப்பிவிட்டார், ஆனால் அது பொறுக்கலையா என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

எதிர்பார்க்காத சலுகை

எதிர்பார்க்காத சலுகை

காயின் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு சலுகை அறிவித்த பிக் பாஸ் சக போட்டியாளர்கள் வயிற்றில் புளியைக் கரைக்க செய்திருக்கிறார் . மனதில் இருக்கும் குறைகளை எல்லாம் கொட்டிய ஒருசில போட்டியாளர்களை மட்டுமே தான் இந்த வாரத்தில் எலிமினேஷனுக்கு போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்து இருக்கும் நிலையில் பிக் பாஸ் செய்த அதிரடி மாற்றம் தான் ரசிகர்களை குழம்ப வைத்திருக்கிறது.

மூன்றாவது எலிமினேஷன்

மூன்றாவது எலிமினேஷன்

பிக் பாஸ் 5 வது சீசனில் மூன்று வாரங்கள் முடிவடைந்த நிலையில் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்து வெளியேற்றப்பட்டார்கள். இந்த நிலையில் மூன்றாவது எலிமினேஷன் போட்டியாளர்கள் ஒருவரை மாற்றி ஒருவர் நாமினேஷன் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த வாரத்தில் பாவனி, இசைவாணி, அபிநவ், இமான், வருண் மற்றும் பிரியங்கா எலிமினேஷனில் இருக்கும் போட்டியாளர்கள். டாஸ்க்கில் ஜெயித்த காயின்களை வைத்திருந்தால் அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொண்டு தங்களுக்கு பதிலாக வேறு ஒரு போட்டியாளரை நாமினேட் செய்துகொள்ளலாம் என்று புது ஐடியா கொடுத்திருக்கிறார் பிக்பாஸ்.

பாவனியின் முடிவு

பாவனியின் முடிவு

இதில் ஏற்கனவே பாவனி, இசைவாணி, வருண், அபினவ் இவர்கள் அனைவரும் காயின்களை வைத்திருக்கின்றனர். இதில் இவர்களுக்கு பதிலாக யாரை எலிமினேஷனில் சேர்க்க போகிறார்கள் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அதில் பாவனி, ராஜு பெயரைத்தான் சொல்வார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ராஜு மீது பாவனிக்கு சிறு மனக்கசப்பு இருப்பதால் அவர் பெயரை தான் சொல்வார் என்று ரசிகர்கள் அடித்துக் கூறி வருகின்றனர்.

என்டர்டைன்மென்ட் இருக்கு

என்டர்டைன்மென்ட் இருக்கு

ஏற்கனவே போன வாரம் எலிமினேஷனிலும் தன்னுடைய பெயர் இல்லாத நேரத்தில் இந்த வாரமும் ராஜு பெயர் இல்லாமல் இருந்தது. இது ராஜுவின் ரசிகர்களுக்கு சந்தோசத்தை தான் கொடுத்திருந்தது. ஆனால் திடீரென்று இப்படி ஒரு ட்விஸ்ட் கொடுத்து அதையே டோட்டலாக மாற்றிவிட்டார் பிக்பாஸ். அதனால் இந்த வாரம் என்ன நடக்க போகிறதோ!!?? என்று ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இன்றைய எபிசோடை பார்ப்பதற்கு பலரும் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+