Azhagu Serial: அழகம்மா உத்யோகம் புருஷ லட்சணம் இல்லையாம்மா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அழகு சீரியலில் வேலை இல்லாத திருநாவுக்கு இரண்டு காதல். அதையும் ஆதரிச்சு குடும்பத்தினர் சாய்ஸ் கொடுக்கறாங்க,.

என்ன கொடுமை இது... உத்யோகம் புருஷ லட்சணம் இல்லையா? வேலையே இல்லாத திருநாவுக்கு அர்ச்சனாவின் குடும்பம் பொண்ணை குடுக்க முன் வந்து இருக்காங்க.

இப்போ அது மணமேடை வரை வந்து இருக்குது. இப்போ அர்ச்சனாவா, நிவியான்னு சாய்ஸில் வேற இருக்கான் திருநா.

வெறும் பயல்

வெறும் பயல்

வேலை வெட்டி இல்லாத வெறும் பயல் திருநா நிவியை லவ் பண்ணும்போதே குடும்பத்தினர் ஒரு வேலையை தேடிக்க சொல்லாமல், நிவியையும் வீட்டோடு வச்சுக்கிட்டு, நிவியும், திருநாவும் அடிக்கும் காதல் கூத்தை வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கறது நல்ல அம்மாவா இருக்கும் அழகு குடும்பத்துக்கு நல்லாவா இருக்கு?

நிவி இல்லை

நிவி இல்லை

சரி நிவிதான் சிங்கப்பூர் போயி படிக்கறேன்னு செத்துட்டான்னு அவ அக்கா புருஷன் சொல்லிட்டான். அத்தோட ஒரு வேலையை தேடிகிட்டு செட்டில் ஆகுடான்னும் சொல்லலை. அடுத்து அர்ச்சனா திருநாவை லவ் பண்றான்னு வீட்டினர் சொல்ல, திருநாவும் அர்ச்சனாவை லவ் பண்றான்.

கல்யாணம் அர்ச்சனாவுடன்

கல்யாணம் அர்ச்சனாவுடன்

அர்ச்சனாவுடன் கல்யாணம் பண்ணி வைக்க அர்ச்சனா குடும்பம் முடிவு செய்து கல்யாண ஏற்பாடுகள் செய்யும்போது நிவி வந்துடறா. உடனே நிவியா, அர்ச்சனாவான்னு திருநா முடிவு எடுக்கட்டும். பின்னால அவன் வந்து நம்மை கேட்டுட்ட கூடாதுன்னு அழகம்மை சொல்றது சுத்தமா நல்லாயில்லை. காதலுக்கு மரியாதை குடுக்க வேண்டியதுதான். அதுக்குன்னு இவ்ளோவா? ஒருத்தனுக்கே எத்தனை காதலுக்கு?

குடும்ப பெண்மணி

குடும்ப பெண்மணி

ஒரு குடும்ப பெண்மணி.. எல்லாத்தையும் அறிஞ்சவங்க...தெரிஞ்சவங்க...மணமேடை வரை வந்து ஒரு பெண் கல்யாணம் நின்னு போனா அந்த குடும்பம் எப்படி இருக்கும்னு தெரிஞ்சும் திருநா முடிவு எடுக்கட்டும்னு சும்மா இருக்கறதா? நீ அர்ச்சனா கழுத்தில்தான் தாலி கட்டணும்னு திருநா கன்னத்தில் ஓங்கி ஒரு அடி விட வேணாம்? இந்த இடத்தில் இப்படி செய்திருந்தால் ரேவதி கேரக்டர் நின்னு இருக்கும்.

விக்கி விக்கி

விக்கி விக்கி

திருநா விக்கி விக்கி அழறது கண்ராவியா இருக்குது. இப்படி அழறவனுக்கு எப்படி இன்னொரு காதல் மனசில் முளைச்சு இருக்கும்? முதலில் தாலி கட்டி வரும் ஒரு பெண்ணை வச்சு காப்பாத்த உருப்படியா ஒரு வேலை கையில் இருக்காடா உனக்கு?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+