டிசம்பர் 4ல் நாகசைதன்யா- சோபிதா திருமணம்! ஒளிபரப்பு உரிமத்தை ரூ 50 கோடிக்கு வாங்கியதா நெட்பிளிக்ஸ்?
ஹைதராபாத்: நடிகை நயன்தாராவை போல் நடிகர் நாகசைதன்யா- நடிகை சோபிதா திருமண ஒளிபரப்பு உரிமம் நெட்பிளிக்ஸிற்கு ரூ 50 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
அண்மைக்காலமாக பிரபலங்கள் வீட்டு திருமண விழாக்களை சில யூடியூப் சேனல்களோ, அல்லது ஓடிடி தளங்களோ அதை ஒளிபரப்பு செய்யும் உரிமையை வாங்குகிறார்கள். இதற்காக அந்த செலிபிரட்டி தரப்புக்கு கணிசமான தொகை கொடுக்கப்படுகிறது. இதை பிரபலங்கள் மட்டும் இல்லாமல் சேனல்கள் தரப்பும் வணிக ரீதியில் கையாள்கிறது.

இப்படித்தான் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம், ரோபோ சங்கர் மகள் இந்திரஜா- கார்த்திக் திருமணம், அண்மையில் நடந்த நெப்போலியன் மகன் தனுஷ்- அக்ஷயா உள்ளிட்டோரின் திருமணங்களும் இப்படித்தான் ஒரு சேனலுக்கு விற்கப்பட்டன.
நயன்தாரா திருமணம் நெட்பிளிக்ஸிற்கும் ரோபோ சங்கர்- நெப்போலியன் வீட்டு திருமணம் பிஹைண்ட்வுட்ஸுக்கும் விற்பனை செய்யப்பட்டது. இது போன்ற நேரங்களில் அந்த திருமணம் குறித்த கிளிப்பிங்ஸ், வீடியோக்களை யாரும் பயன்படுத்த முடியாது.
நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் நெட்பிளிக்ஸில் கடந்த 18ஆம் தேதி ஒளிபரப்பானது. இந்த நிகழ்வுகள் நெட்பிளிக்ஸிற்கு குறிப்பிட்ட கோடிக்கு விற்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் நாகசைதன்யா- சோபிதா திருமண ஒளிபரப்பும் நெட்பிளிக்ஸிற்கு வழங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களுடைய திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறுகிறது. இவர்களது திருமணம் பாரம்பரிய முறைப்படி அன்னப்பூர்ணா ஸ்டூடியோவில் நடத்தப்படுகிறது.
இவர்களது திருமண ஒளிபரப்பு உரிமையை ரூ 50 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் வாங்கியதாக சொல்லப்படுகிறது. இதனால் இவர்களது திருமணத்திற்கு வருவோருக்கு சில கட்டுப்பாடுகள் இருக்கும் என தெரிகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் நாக சைதன்யா- நடிகை சோபிதா துலிபாலா ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. சைதன்யாவும் சோபிதாவும் ஆடம்பரத் திருமணம் வேண்டாம் என்று தெரிவித்ததால் இந்த திருமணத்திற்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருமணத்திற்காக சோபிதாவுக்கு காஞ்சிபுரம் பட்டுப் புடவை, தங்க ஜரிகையால் ஆன ரவிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த திருமணம் சுமார் 8 மணி நேரம் நடக்கும் என தெரிகிறது. திருமண அழைப்பிதழை ஒரு கூடையில் துண்டு துணி, ஒரு மரச்சுருள், இனிப்பு, மிட்டாய்கள் வைத்து வழங்கப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications