தெய்வானை மேல சண்முகத்துக்கு ஆசையா இல்லை... அருந்ததிக்கு ஆசையா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியல் நிஜமா கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு. அருந்ததி பேயிடம் இருந்து கிணற்றில் இருந்த சண்முகத்தை காப்பாத்தினவள் தெய்வானை.

அப்போ தெய்வானையை கண்டால் அருந்ததிக்கு பயம்தானே வரணும். இப்போ சண்முகம் உடம்புக்குள்ள போயிருக்கறது அருந்ததிதானே...

இந்த அருந்ததி எப்படி தெய்வானையை சண்முகம் கல்யாணம் செய்துக்க சம்மதிக்கும்? கொஞ்சம் புரியற மாதிரி கதையை கொண்டு போங்க டைரக்டர் சார்.

முருகன் டாலர் கழுத்தில்

முருகன் டாலர் கழுத்தில்

முருகன் டாலர் தெய்வானையின் கழுத்தில் இருந்தால் பேய்க்கு ஆகாது. முக்கியமாக முருகனின் அருள் பெற்ற முருகன் பக்தை தெய்வானை. பூஜை, புனஸ்காரம், முருகனுக்கு பாலாபிஷேகம்...அர்ச்சனை இப்படி இருப்பவளை சண்முகத்தின் உடலில் இருக்கும் இவளை அருந்ததி பேய் கல்யாணம் செய்துக்க எப்படி சம்மதிக்கும்.

இது ரொம்ப இடிக்குது....இதை கொஞ்சும் புரியும்படி கதையை சொன்னால் நன்றாக இருக்கும்.

பிடிக்கலை தெய்வானையை

பிடிக்கலை தெய்வானையை

தெய்வானையை ஈஸ்வரியின் அண்ணனுக்கு பிடிக்கலை.நீ இந்த குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு இல்லைன்னு முகத்தில் அடிச்ச மாதிரி சொல்லிடறார். தெய்வானை அழுதுகிட்டே வந்து அவங்க வீட்டு பூஜையறையில் இருக்கும் பெரிய முருகனிடம் அழுது புலம்பறா.

பெரிய இடத்தில் எனக்கு கல்யாணம்

பெரிய இடத்தில் எனக்கு கல்யாணம்

பெரிய இடத்தில் எனக்கு கல்யாணம் நடக்கும்னு கிடைக்காததை கிடைக்கும்னு ஆசை கட்டி கடைசியில இப்படி பண்ணிட்டியே முருகா...நான் என்ன தப்பு செய்தேன்.. எனக்கு ஏன் இந்த தண்டனைன்னு அழறா.

சண்முகம் பூஜை ரூமில்

சண்முகம் பூஜை ரூமில்

அருந்ததி பேய் புகுந்து இருக்கும் சண்முகம் பூஜை ரூமுக்கு வர்றான். கற்பூர ஆரத்தி எடுத்துக்க மாட்றான்..தெய்வானை கழுத்தில் இருக்கும் ஓம் முருகா போட்ட டாலரை தொட முடியலை... எப்படி பூஜை ரூமுக்கு வர முடியும்?

என் கல்யாணம் நான்தான்

என் கல்யாணம் நான்தான்

எதுக்கு அழறே தெய்வானை...என் மாமா இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொன்னா நடக்காமப் போகாது. என் கல்யாணத்தை பத்தி நான்தான் முடிவு செய்யணும்னு சொல்றான்.சண்முகம் நாம் ஸ்கூல் படிக்கும்போது உன்கிட்ட நான் ஒரு சாமி பொருள் குடுத்தேன்.அதை நீ இப்போ எங்க வச்சு இருக்கே..அது என்னன்னு நீ சொன்னனாதான் முருகன் குடுத்த வாக்கை நான் நம்ப முடியும்னு சொல்றா.

அருந்ததி பேய் மாதிரி

அருந்ததி பேய் மாதிரி

சண்முகம் தெய்வானையின் இந்த கேள்வியால் அருந்ததி பேய் மாதிரி முழிக்கறான்.அவனுக்கு தெரியாது.. சின்ன வயசில் புத்தகத்தில் வச்சுக்க சொல்லி தெய்வானை அவனுக்கு குடுத்தது மயிலிறகு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+