நிலாவோட அம்மா இவங்கதானா?
சென்னை: சன் டிவியின் நிலா சீரியலில் இன்னிக்கு ஒரு உண்மை வெளியாகி இருக்கு. நிலா வளர்ப்பு பொண்ணுதான்னு முதலில் தெரிஞ்சுது. இப்போ நிலா அம்மா யாருன்னு தெரிஞ்சு இருக்கு.
நிலா சீரியலில் ஆரம்பத்தில் இருந்தே பல கேள்விகள் எழுந்துகிட்டே இருந்து வருது.நிலாவை மட்டும் ஒரு விதமாக நடத்தும் அம்மாவைப் பார்க்கையில், நிலா இவங்க பொண்ணு இல்லையான்னு கேள்வி வந்துச்சு.
இப்போ நிலா இவங்க வளர்ப்பு பொண்ணுதான்னு தெரிஞ்சப்போ.. நிலாவோட அப்பா அம்மா யாருன்னு தெரியலைன்னு ஒருகேள்வி வந்துச்சு..

சஞ்சய்
இப்போ, நிலாவோட அம்மா நீ அசோக்கைத்தான் கல்யாணம் செய்துக்கணும்னு சொல்றாங்க.
நான் கார்த்திக்கை காதலிக்கறேன்னு தெரிஞ்சும் சஞ்சய்க்கு என்னை பேசினீங்க...இப்போ அசோக்கை கல்யாணம் பண்ணிக்கோன்னு கொண்டு வந்து நிறுத்துறீங்க... ஏம்மா.. ஸ்வேதாவுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தா செய்வீங்களான்னு நிலா அழறா.

பொண்ணு இல்லை
மாட்டேன்..நிச்சயமா மாட்டேன்னு சொல்றாங்க அம்மா.அப்புறம் என்னை மட்டும் ஏன்மா இப்படி பண்றீங்க..அவளை மாதிரி நானும் உங்க பொண்ணுதானேன்னு கேட்கறா. நீதான் என் பொண்ணு இல்லைன்னு சொல்லிட்டேனேடின்னு சொல்றாங்க.

யாரும்மா அம்மா
அப்போ என் அம்மா யாரும்மா..உங்களுக்கு தெரியும்தானேன்னு கேட்கறா. அவ உங்க அப்பாவோட தங்கச்சிதான்..முறை தவறி பொறந்த உன்னை என் தலையில கட்டிட்டு ஓடிட்டான்னு சொல்றாங்க.

தப்பா அம்மாவை
அம்மாவைப் பத்தி தப்பா பேசாதீங்கம்மா.. இப்போ அவங்க எங்க இருக்காங்கன்னு கேட்க, அவ எங்கேயாவது விழுந்து செத்து போயிருப்பா.. ஒழுக்கம் கெட்டவ உயிரோடயா இருப்பான்னு சொல்றாங்க.

யாரும்மா அப்பா
அம்மாவைப் பத்தி தப்பா பேசாதீங்கம்மா.. என் அப்பா யாரும்மா நிலா கேட்கறா..அவன் எங்க இருக்கானோ...அவன் மட்டும் உயிரோடயா இருப்பான்..எனக்கு தெரியாது போடின்னு சொல்றாங்க. ஆனா, நீ நீலாம்பரி வீட்டுக்குத்தான் மருமகளா போகணும்னு சொல்றாங்க.

நீலாம்பரி வீட்டில்
இவ்வளவும் ராஜசேகர் நிலாவின் வளர்ப்பு அப்பா ஆஸ்பத்திரியில இருக்கும் போது நடக்குது. கடைசியில் நிலாவின் அம்மா, நீலாம்பரி வீட்டில் வேலைக்காரியா இருக்காங்க. அண்ணன் பொண்ணு நிலா தன் பொண்ணுதான்னு இன்னும் நீலாம்பரி வீட்டு வேலைக்காரிக்கு தெரியலை.
இப்படி பல விஷயங்கள் இருந்தாலும், நீலாம்பரி நிலாவை எப்படியாவது தன் வீட்டு மருமகளாக்க நினைக்கறாங்களே ஏன்னு இன்னும் தெரியலை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications