இன்னிக்காச்சும் ஏதாச்சும் காட்டுவாங்களா.. ரொம்ப காஞ்சு போய்க் கிடக்கே!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 4 சீசனில் ரசிகர்கள் ரொம்பவே அதிருப்தியில் இருக்கிறார்கள். இதற்கு முன்பு ஒளிபரப்பப்பட்ட மூன்று சீசன்களிலும் காதலுக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் போய்க்கொண்டு இருந்தது.
ஆனால் இந்த சீசனில் எப்போதும் ஒரே சண்டை போட்டுக்கொண்டே ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் .இது பார்க்கும் ரசிகர்களுக்கு ரொம்பவே போர் அடிக்கிறதாம்.
அதுவும் இந்த கேம்ஸ் எதுவும் இப்ப வரைக்கும் இன்னும் வரவில்லை அதுவும் ரசிகர்களுக்கு பெரிய மனக்குறையாக தான் இருக்கிறதாம். ஆனால் இன்றைய ப்ரோமோ வில் முதல்முறையாக ஒரு கேம் தொடங்கி இருக்கிறார்கள்.

ஒரு சீன் கூட இல்லையே
இதை பார்த்ததும் ரசிகர்கள் இன்றுதான் பிக்பாஸ் தூங்கி விழித்த மாதிரி இருக்கிறது என்று கிண்டல் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நாலாவது சீசனில் தினமும் பிரமோவில் சண்டைக் காட்சிகளை காட்டி கொண்டிருக்கிறார்கள். ரசிகர்களும் ஆர்வமாக நிகழ்ச்சியைப் பார்த்தால் அங்கு ஒன்றும் இல்லாமல் சப்பென்று ஆகி விடுகிறதாம் .அதனால் ரசிகர்கள் இதனை கலாய்த்து கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.

ஹீரோவான சுரேஷ்
இந்த நிகழ்ச்சியில் அறிமுகமாகும்போது இவர் எல்லாம் இங்கு என்ன செய்யப் போகிறார் என்று நினைத்த சுரேஷ் சக்கரவர்த்தி தான் இப்போ ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் இன்றைய நிகழ்ச்சியில் அரக்கன் வேஷமிட்டு அங்கு இருப்பவர்களை மட்டுமில்லாமல் ரசிகர்களையும் மிரட்டுகிறார்கள். பத்து பொருத்தமும் பக்காவா பொருந்துகிற அவருக்கு கூட இருப்பவர்களை மேலும் பாடாய் படுத்துவதற்கு பிக்பாஸ் நல்லாவே டாஸ்க் கொடுத்து இருக்கு என்று கூறி வருகிறார்கள்.

ரியோ மீசை போச்சு
அதுவும் பிரோமோவில் ரியோ மீசையெல்லாம் எடுத்து புது கெட்டப்பில் ரெடி ஆகிக் கொண்டிருக்கிறார். அவருடைய முகத்தை அவரே கண்ணாடியில் பார்த்து மீசையோடு இருக்கும் போதுதான் கொஞ்சம் கெத்தா இருக்கு இப்ப அதை எடுத்ததும் குழந்தை மாதிரி இருக்கு என்று கூறியிருக்கிறார். இந்த கேள்வி கேட்டதும் ரசிகர்கள் கமெண்டுகள் ஆக போட்டு வறுத்து எடுத்து வருகிறார்கள். அதிலும் சில அவருடைய ரசிகர்கள் அவரை புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

தயாராகி வரும் ராணிகள்
இவர்களின் கொண்டாட்டம் ஒரு பக்கம் என்றால் ஷிவானி , ரம்யா பாண்டியன் ,சனம் எல்லாம் வேற லெவலில் ரெடி ஆகிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களைப் பார்த்து தான் ரசிகர்கள் இன்று இந்த நிகழ்ச்சியில் தரமான சம்பவம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள். என்னதான் ப்ரோமோ வில் காட்டினாலும் எதிர்பார்த்த அளவிற்கு இந்த நிகழ்ச்சியில் ஒன்றுமில்லாமல் தான் சப்பென்று ஆகிவிடுகிறது இன்னைக்காவது ஏதாவது கிடைக்குமா என்று காத்திருக்கிறார்களாம்

இனிக்காச்சும் ஏதாச்சும் காட்டலாமே
அதிலேயும் சிலருக்கு இதற்கு முன்பு உள்ள 3 சீசன் களிலும் கட்டிப்பிடி வைத்தியம் முதல் கவர்ச்சி ஆட்டம் வரைக்கும் இல்லாமல் காதல்களும் சில முக்கோண காதல்களும் இருந்தது. இதனால் இதனை பார்க்கும் ரசிகர்களும் இன்ட்ரஸ்ட் ஆக இருந்தது. ஆனால் தற்போது இதில் எதுவும் இல்லாமல் சப்பென்று இருந்துகொண்டிருக்கிறது. இன்றாவது எதையாவது காட்டுங்கள் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications