அத்தனையும் நடிப்பா? 2 நடிகர்கள் ஓவர் நெருக்கம்.. ஒரே தட்டில் சாப்பிட்டு.. கிள்ளி தராத ஹீரோ: பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சினிமா வட்டாரத்தில், தூய்மையான சினிமாக்கார நட்பு என்பதே கிடையாது என்றும், நட்பு, விசுவாசம், நன்றிக்கடன், பாராட்டு இதெல்லாம் சினிமாவுக்கு ரொம்ப தூரம் என்றும் பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு வேதனை தெரிவித்துள்ளார்.

AramNaadu யூடியூப் சேனலுக்கு தந்துள்ள ஒரு பேட்டியில் பாலாஜி பிரபு சொல்லும்போது, "சினிமாவில் நட்பு என்பதே கிடையாது.. எல்லாமே நடிப்பு நடிப்புதான்.. மேடையில் அப்படியெல்லாம் நட்பாய் பேசுவார்கள்.. ஆனால், திரையைவிட நிஜத்தில் நடிக்கக்கூடியவர்களே அதிகமாக இருக்கிறார்கள்..

actor actress

எல்லாருமே அப்படி இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. நிறைய பேர் தான தர்மங்களை செய்கிறார்கள்.. எனவே, அவர்களை எல்லாம் குறை சொல்ல முடியாது. ஆனால், நட்பு என்பது சினிமாவை பொறுத்தவரை, போலி மூடிதான்.. உண்மையான உணர்வுகள் எதுவுமே அவர்களிடம் இருக்காது.

மச்சான், மச்சி:
2 பெரிய நடிகர்கள் ஒன்றாக நடிக்கிறார்கள் என்றால், அந்த படம் முடிய 6 மாத காலத்திற்கு, மச்சான், மச்சி என்று நெருக்கமாக பேசிக் கொள்வார்கள்.. ஒன்றாக ஒரே தட்டில் சாப்பிட்டுக்கொள்வார்கள், ஒரே டீயை 2 பேரும் மாறி மாறி குடிப்பார்கள், சீட்டு விளையாடுவார்கள், தண்ணி அடிப்பார்கள்.. ஆனால், 2 பேருமே ஒருவருக்கொருவர், உள்ளுக்குள் நடித்துக் கொண்டுதான் இருப்பார்கள்

அடுத்த முறை நேரில் எங்காவது பார்த்தால் மட்டும், ஓடிவந்து 2 பேரும் கட்டிப்பிடித்து கொள்வார்கள்.. அப்போதும், ஒருவருக்கொருவர் உள்ளுக்குள்ளே ஈகோ, பொறாமை இருக்கும். இப்படி வேஷம் போடுபவர்கள் சினிமாக்காரர்கள்.

புரமோஷன்:
பாடல் வெளியீட்டு விழா, வெற்றி விழாக்களுக்கு சிலர் போவதே இல்லை. நாம எதற்காக போய், அந்த ஹீரோ படத்தை புரமோட் செய்ய வேண்டும்? நாம ஏன் அந்த ஹீரோவை பெரிய ஆளாக்க வேண்டும்? என்று நினைத்து பலரும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தவிர்த்து விடுவார்கள். அப்படியே நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினாலும், பெரும்பாலும் அந்த புகழ்ச்சியும், பாராட்டும் அவ்வளவும் வேஷம்.. அத்தனையிலும் செயற்கைத்தனம் இருக்கும்.

பழிப்பது போல புகழ்வது, புகழ்வது போல பழிப்பது என்பது வஞ்சப்புகழ்ச்சி அணி என்பார்கள் இதனை சினிமாக்காரர்கள் அருமையாக பயன்படுத்துகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு, யார் யாரை பார்த்தாலும் "தலைவா" என்று பேசிக் கொண்டார்கள்.. "தலைவா" என்று சொல்லி கொள்வது, சினிமாவில்தான் ஆரம்பமானது. இப்போது லேட்டஸ்ட்டாக "ஜி" என்று பேசிக்கொள்கிறார்கள்.

நாய்கள்:
அதேபோல, ஒன்றிரண்டு ஹீரோக்கள் தவிர, அறிமுகப்படுத்தின தயாரிப்பாளர்களுக்கு எந்த நடிகர்களுமே கால்ஷீட் தந்ததாக இதுவரை சரித்திரமே கிடையாது.. கால்ஷீட் தராவிட்டாலும் பரவாயில்லை. தன்னை அறிமுகப்படுத்தின தயாரிப்பாளர் வீட்டுக்கு வந்தால், வாசலிலேயே நாய்களை அவிழ்த்து விட்டுவிடுகிறார்கள். 5 நிமிடம்கூட அவர்களை சந்திப்பதற்கு அனுமதி தருவதில்லை.. இதற்காகவே 6 அடி உயர நாய்களை தங்கள் வீடுகளில் சில நடிகர்கள் வளர்க்கிறார்கள்.

இன்னொரு பிரபல நடிகர் இருக்கிறார்.. அவரது படம்கூட அடுத்த வாரம் திரைக்கு வரப்போகிறது. அவரை யாருமே அவரது வீட்டுக்கு சென்று பார்க்கவே முடியாது.. தயாரிப்பாளர் யாராவது, தங்கள் வீட்டு கல்யாண பத்திரிகை தர வேண்டும் என்றால்கூட, நடிகர் வீட்டு செக்யூரிட்டிகிட்டதான் பத்திரிகையை தந்துட்டு வருவாங்க..

நடிகர், நடிகைகள்: இதுபோல, மனிதர்களாகவே பார்க்க முடியாத நடிகர்களை எல்லாம், தெய்வங்களாக ரசிகர்கள் பாவிப்பது கவலையை தருகிறது.. வெறும் நடிகர்கள், நடிகைகளாகவே அவர்களை பார்க்க வேண்டும்.. ஏனென்றால், இவர்கள் என்றால், யாருக்கும் எதுவுமே கிள்ளி தர போவதில்லை.. எதுக்கு அவங்களை குரங்கு கூட்டமாக கூடி, வேடிக்கை பார்க்கணும்? இதை ரசிகர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+