கும்கி பட நடிகை லட்சுமிமேனா இது? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே? லீக்கான போட்டோஸ்
சென்னை: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த லட்சுமிமேனனை அவ்வளவு சித்திரத்தில் யாராலும் மறந்து விட முடியாது. சுந்தரபாண்டியன், கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, கொம்பன் என அடுத்தடுத்து வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமான நடிகை இப்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய போட்டோ தான் சோசியல் மீடியாவில் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.
லட்சுமிமேனன் சில வருடங்களாகவே சினிமாவில் பெரிதாக தலை காட்டாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் இமான் அண்ணாச்சி பக்கத்தில் பச்சை நிற புடவையில் கையில் குழந்தையுடன் லட்சுமிமேனன் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதை பார்த்ததும் இது லட்சுமிமேனனா? என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடன் கேள்வி கேட்கின்றனர். காரணம் அந்த அளவிற்கு உடல் எடை கூடி ஆலய அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.

லட்சுமிமேனனின் லேட்டஸ்ட் போட்டோ
சிலருக்கு இது லட்சுமிமேனா? அல்லது ஏஐ போட்டோவா? என்ற சந்தேகம் வருகிறது. காரணம் இப்போதுதான் இணையத்தில் எதையும் நம்பவே முடியவில்லையே? அதனால் இவர் கூட உண்மையில் லட்சுமி மேனனா என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஆனால் இந்த போட்டோஸ் நேற்று செப்டம்பர் 17ஆம் தேதி முதல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நிஜ போட்டோ
கோவையில் நடைபெற்ற ஒரு கடை திறப்பு விழாவில் லட்சுமிமேனன் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்டது என்று சிலர் கூறி வருகிறார்கள். லட்சுமிமேனன் என்றாலே பலருக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவது கும்கி தான். அந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த பிறகு தமிழ் ரசிகர்களிடம் அவருக்கு தனி வரவேற்பு கிடைத்தது. அந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அவர் 9ம் வகுப்பு தான் படித்துக் கொண்டிருந்தார்.

லட்சுமிமேனன் நடித்த படங்கள்
அப்போது ஹீரோயினியாக ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டார். பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போன்று இருந்த அவரை ரசிகர்களுக்கு பிடித்து போக அதற்கு பிறகு குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், மிருதன், றெக்க என்று தொடர்ந்து பல படங்களில் நடித்தார். வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாகவும் நடித்திருந்தார். ஆனால் திடீரென்று சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார்.

ரசிகர்கள் கமெண்ட்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு லக்ஷ்மி மேனனும் அவருடைய தோழியும் சாலையில் வாகனத்தில் போன ஓட்டுநரை தாக்கிய வீடியோ ஒன்று வைரல் ஆனது. அப்போது கூட அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே என்று சிலர் சொல்லி வந்தனர். காரணம் அந்த நேரத்தில் அவர் பழைய படங்களில் நடித்ததை விட உடல் எடை கூடி இருந்தார். ஆனால் இப்போது ரொம்பவும் மாற்றம் தெரிகிறது. அதனால் ரசிகர்கள் கும்கி படத்தில் பார்த்த லட்சுமிமேனா இவர்? இப்படி மாறிவிட்டாரே? என்று தான் கமெண்ட்களை போட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
