பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவு தேதி இதுதானா? அப்போ 8 மணிக்கு அந்த சீரியலா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் சமீப காலமாகவே வலம் வருகிறது.
இந்த நிலையில் எப்போதில் இருந்து இந்த சீரியல் முடிவுக்கு வருகிறது என்ற தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கிறது.

அதே நேரத்தில் 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவடைந்ததும் அந்த நேரத்தில் இனி எந்த சீரியல் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. அது குறித்தும் விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 5 வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் அண்ணன் தம்பி கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு இருந்தாலும் இந்த சீரியலில் அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வந்த வண்ணமாகவே இருக்கும். அதை வீட்டில் இருக்கும் அண்ணன் தம்பிகள் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பது பற்றி தான் கதை இத்தனை வருடங்களாக நகர்ந்து கொண்டிருந்தது.
ஆனால் சமீபத்தில் இந்த சீரியலில் கதை சுவாரஸ்யம் குறைந்துவிட்டது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது என்ற தகவல்கள் பரவி வருகிறது. அதைத்தொடர்ந்து இந்த சீரியலில் இரண்டாவது பாகம் தொடங்கப்பட இருக்கிறது அதில் தனமாக நடிக்கும் நடிகை சுஜிதா மற்றும் கதிராக நடிக்கும் குமரன் இருவரும் தொடர்ந்து நடிப்பார்களா? என்பது இன்னும் சரியாக தெரியவில்லை.
இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் வரும் செப்டம்பர் 30-ம் தேதியோடு முடிவுக்கு வரும் என்று புதிய தகவல் ஒன்று வலம் வருகிறது. அதே நேரத்தில் இது உண்மைதானா? என்பது இனிவரும் எபிசோடுகளின் அடிப்படையில் தெரியும். ஏற்கனவே இப்போது பெரிய அளவில் கதையில் முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறது. அதே நேரத்தில் எல்லா பிரச்சனைகளும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் முடிவுக்கு வந்திருக்கிறது.
தனத்திற்கு புற்று நோய்க்கான ஆபரேஷன் செய்து அவரும் நல்லபடியாக திரும்பி வந்து இருக்கிறார். அதுபோல கண்ணனும் தான் குற்றம் செய்யவில்லை என்று நிரூபித்து வந்திருக்கிறார். பாண்டியன் ஸ்டோர் குடும்பமும் நிம்மதியாக இருக்கின்றனர். இந்த நிலையில் இனி இத்தனை நாட்களாக பணத்திமிரில் ஆடி கொண்டிருந்த ஜனார்த்தனன் தன்னுடைய இளைய மருமகன் பேச்சைக் கேட்டு சூப்பர் மார்க்கெட் பிசினஸை சரியாக கவனிக்காமல் இருப்பதால் இனி அடுத்து அவர்தான் பிரச்சனையில் மாட்டுவதாக கதை நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதுபோல ஜனார்த்தனனுக்கு வழக்கம் போல பாண்டியன் ஸ்டோர் குடும்பத்தினர் உதவி செய்து ஜனார்த்தனன் மனம் மாறி தன்னுடைய மருமகன் மற்றும் அவருடைய குடும்பத்தின் மீது மரியாதை ஏற்படும். அதோடு இந்த சீரியல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒருவேளை இந்த சீரியல் விரைவில் சொன்னது போலவே செப்டம்பர் 30-ம் தேதியோடு முடிவுக்கு வந்தால், இது ஒளிபரப்பாகி வரும் எட்டு மணிக்கு ஒருவேளை பாண்டியன் ஸ்டோர் சீரியலின் இரண்டாவது பாகம் தொடங்கப்பட்டால் அது ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஏற்கனவே சீரியல் நடிகர்களின் தரப்பில் பிரச்சனை இருப்பதால் ஒருவேளை இந்த சீரியல் இதோடு முடிக்கப்பட்டு இருந்தால் சிறகடிக்க ஆசை அல்லது மோதலும் காதலும் இந்த இரண்டில் ஒரு சீரியல் 8 மணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் என்ன நடக்கப்போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
சிறகடிக்க ஆசை அப்டேட்: சிந்தாமணி செய்த சூழ்ச்சி, ஜெயிலுக்கு போகும் முத்து- மீனா.. ஸ்ருதி செய்த சம்பவம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications