Sundari Neeyum Sundaran Naanum: ஒரு அரசியல்வாதியைப் பார்த்து கேட்கற கேள்வியாம்மா இது?
சென்னை: விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் தமிழ் வேலுவைப் பார்த்து கேட்கும் கேள்விக்குத்தான் ஒரு அரசியல்வாதியைப் பார்த்து கேட்கற கேள்வியாம்மா இதுன்னு பதிலுக்கு கேட்கிறான்.
தமிழ் அப்படி என்ன பெரிய கேள்வி கேட்டு இருப்பா வேலுவிடம்? திருமணம் ஆகி வேலுவும் தமிழும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். வேலு ஒரு அரசியல்வாதி.. தமிழ் தனியார் உதவி பெறும் பள்ளியை நடத்தி வருகிறாள்.
வேலுவின் பாட்டியாக நடிகை லதா நடிச்சு இருக்காங்க. இவங்கதான் தமிழை வீட்டில் இருக்கக் கூடாதுன்னு வீட்டை விட்டு வெளியில் அனுப்பிடறாங்க.

பாட்டி சொல்லைத் தட்டாதே
சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியல் பாண்டியராஜன், ஆச்சி மனோரமா நடித்து புகழ்பெற்ற பாட்டி சொல்லைத் தட்டாதே படம் போல ஒரு கதை. எப்போதும் தன்னை வளர்த்த பாட்டியின் மீது உயிரையே வச்சு இருக்கான் வேலு. பாட்டிதான் ஆசையா தமிழை வேலுவுக்கு கல்யாணம் செய்து வச்சாங்க. ஆனால், துரோகம் பண்ணிட்டா தமிழ்னு இப்போ வீட்டை விட்டு வெளியில் அனுப்பிட்டாங்க.

ஆசை மனைவி
ஆசை மனைவி தமிழுடன் சேர்ந்து வாழ ஆரம்பிக்கும் முன்னரே பிரிச்சு வச்சுட்டாங்க பாட்டி. ஆனால், பாட்டி சொல்லையும் தட்ட முடியலை. ஆசை மனைவியையும் ஒதுக்கி வைக்க முடியலை. தமிழிடம் ஒரு காதலன் போல துரத்தி துரத்தி வந்து பேச முயல்கிறான். ஆனால், சித்தி பாட்டி முன்னால் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போகிறான்.

மனைவியை கடத்தி
ஆசை மனைவி தமிழிடம் மனம் விட்டுப் பேச எத்தனையோ முயற்சி செய்தும் முடியவில்லை. அவளை வாயைப் பொத்தி காரில் தூக்கிப் போட்டு கடத்திகிட்டு வந்து தோட்டத்து வீட்டில் அவளிடம் பேச முயல்கிறான்.அவள் கையில் தேங்காயை வைத்துக்கொண்டு, இவனை அடிப்பது போல நிற்கிறாள்.

படக்கென்று காலில்
தமிழ் உன்கிட்டே கொஞ்சம் பேசணும்...உலகத்தில் பொண்டாட்டியை கார் வச்சு கடத்தின முதல் புருஷன் நானாத்தான் இருப்பேன்.. தயவு செய்து என்னை கொஞ்சம் பேசவிடுன்னு கெஞ்சினவன்.. இப்போதும் நீ முரண்டு பண்ணினே..என்று அதட்டல் போடறான். என்னடா பண்ணுவே.. என்னடா பண்ணுவேன்னு தமிழ் கேட்க...படக்குன்னு காலில் விழுந்துட்டான்.

வெட்கம் மானம்
கொஞ்சம் கூட வெட்கம், மானம் சூடு சொரணை இல்லையா உனக்குன்னு தமிழ் கேட்கிறாள். அதற்குத்தான் ஒரு அரசியல் வாதியைப் பார்த்து கேட்கற கேள்வியாம்மா இதுன்னு கேட்கிறான்..கேட்க கூடாத கேள்வியைத்தான் ஒரு கட்சியில் இருக்கும் இளைஞன் வேலுவை பார்த்து தமிழ் கேட்டுவிட்டாளோ...?
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications