விஜய் மகளா இது? பிறந்தநாளில் வைரலாகும் போட்டோஸ்.. ஆனால் இதை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் தமிழ்நாடு முதலமைச்சருமான விஜயின் குடும்பத்தை பொருத்தவரை அவரைப் பற்றிய ஒரு சின்ன விஷயம் வெளியானாலே அது பெரிய அளவில் பேசுபொருளாகிவிடும். குறிப்பாக மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் இயக்குனராக களம் இறங்கிய பிறகு மகள் திவ்யா சாஷா தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது.

அந்த வரிசையில் இப்போது இன்ஸ்டாகிராமில் ஒரு பக்கம் வைரலாகி வருகிறது. d. shasaa என்ற பெயரில் இருக்கும் அந்த இன்ஸ்டா பக்கத்தில் விஜயின் மகன் திவ்யா சாஷா பெயருடன் புகைப்படங்களும் வீடியோக்களும் தொடர்ந்து பதிவாகி வருகின்றது. குறிப்பாக தற்போது திவ்யா ஹோட்டலில் சாப்பிடுவது போல சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதை பார்த்ததும் உண்மையில் இதுதான் விஜய் மகளா? அல்லது இது ஏஐ போட்டோவா என்று குழப்பம் ரசிகர்களுக்கு வருகிறது.

விஜய் மகள் இன்ஸ்டால் பக்கம்

காரணம் அந்த போட்டோவில் இருக்கும் பெண் மார்டன் உடையில் இருக்கிறார். அதுபோல அதே ஸ்டோரியில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என்று சொல்வது போலவும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அந்த பக்கத்திலேயே அண்ணன் என்று ஜேசன் ஐடி டேக் செய்யப்பட்டிருக்கிறது. அதுபோல அப்பா என்று முதல்வர் விஜயின் ஐடி டேக் செய்யப்பட்டு இருக்கிறது அதனால் ஒருவேளை இதுதான் விஜய் மகளின் நிஜ ஐடியா என்ற குழப்பமும் ரசிகர்களுக்கு இருக்கிறது.

Vijay Daughter

குழப்பமான பதிவு

இது பொய்யான பக்கமாக இருந்தால் குடும்பத்தினர் ஆக்சன் எடுத்திருப்பார்களே அப்போ இதுதான் விஜய் மகளாக இருக்கும் என்றும் சிலர் கூறி வருகிறார்கள். விஜய் மகள் ஐடியா? இல்லையா? என்பதே இப்போ பெரிய பஞ்சாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஜேசன் ஒரு பேட்டியில் பேசும் போது என்னுடைய அதிகாரப்பூர்வமான இன்ஸ்ட்டா ஐடியை என்னுடைய குழுவினர் தான் கவனித்து வருகிறார்கள். அவர்களிடம் தான் பாஸ்வேர்டு இருக்கிறது.

ஜேசன் விளக்கம்

நான் எப்பவாவது தான் அதில் பார்ப்பேன் மத்தபடி நான் ஒரு ஐடி வைத்திருக்கிறேன். அது ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியும். அதில் சிலர் மட்டும்தான் பாலோ பண்ணுகிறார். நான் இன்ஸ்டாவில் கணக்கு தொடங்கிய காரணம் கூட சிக்மா படத்தைப் பற்றிய அப்டேட் போஸ்ட் போடுவதற்காக தான். மத்தபடி எனக்கு சோசியல் மீடியாவில் போஸ்ட் போட அவ்வளவு பெரிய விருப்பம் கிடையாது என்று சொல்லி இருந்தார்.

Vijay Daughter

காணாமல் போன ஐடி

அப்படி இருக்கும்போது அவருடைய தங்கச்சி மட்டும் இவ்வளவு ஆக்டிவாக போஸ்ட் போட்டு கொண்டு இருப்பாரா? என்று கேள்வியும் எழுந்து வருகிறது. இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதத்தில் கூட விஜய் மகள் பெயரில் ஒரு ஐடி பெரிதாக வைரல் ஆனது. ஆனால் சில நாட்களிலே காணாமல் போய்விட்டது. அந்த ஐடியில் விஜய்க்கு மகள் வாழ்த்து சொல்வது போலவும், தன்னுடைய பழைய குடும்ப போட்டோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு வருவதாகவும் இருந்தது. ஆனால் கடைசியில் அந்த ஐடி காணாமல் போய்விட்டது.

இப்போது திவ்யா பெயரில் வைரலாகும் இன்ஸ்ட்டா பக்கத்தை ரசிகர்கள் அதிகமானோர் பாலோ பண்ணி வருகிறார்கள். ஆனால் அதன் உண்மை தன்மை குறித்து விரைவில் தெளிவான விளக்கம் வரவேண்டும் என்றும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+