பார்லிமென்ட்லயும் அய்யா போட்டா வச்சாங்க... தெறிக்கவிடும் குரலால் அம்பேத்கர் பாடலை வைரலாகும் இசைவாணி
சென்னை: தன்னுடைய கானா பாடல் மூலமாக அம்பேத்கரின் புகழைப் பாடி இருக்கும் இசைவாணிக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
சமூக வலைத்தளத்தில் இசைவாணியின் லேட்டஸ்ட் பாடல்கள் வைரலாக பரவி வருகிறது.

பாடல்களால் புரட்சி
சாதாரண குடும்பத்தில் பிறந்து கானா பாடல்கள் மூலமாக திரைப்படத்தின் பின்னணி பாடகியாக பறந்துகொண்டிருக்கும் இசைவாணி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வரும் பாடல்களை பாடி வருகிறார். இவருடைய லேட்டஸ்ட் பாடல்கள் பல இளைஞர்களை கவர்ந்துள்ளது. சமுதாயத்தில் மாற்றத்தை வேண்டி எதிர் பார்க்கும் ரசிகர்கள் பலர் இவருடைய பாடலுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். ஏற்றத்தாழ்வுகளை தன்னுடைய பாடலால் பலருக்கும் புரிய வைத்து வருகிறார்.

பின்னணி பாடகியாக கலக்கல்
கானா பாடல்களில் அதிகமாக ஆண்களே கோலோச்சி கொண்டிருக்கும் இந்த காலத்தில் பெண்களாலும் சாதிக்க முடியும் என்று மேடைகளில் பல ஆண்களுக்கு மத்தியில் தனித்து தனது திறமையை நிரூபித்து வருகிறார். இவருடைய குரல் கானா பாடலுக்கு சரியாக பொருந்தி இருப்பதால் இவருடைய பாடல்கள் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறது. பாடல்களின் மூலமாக தான் இவருக்கு பெரிய அளவில் வெற்றி பெற்ற சார்பட்டா திரைப்படத்தில் பாட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவர் பாடிய பச்ச கல்லு மூக்குத்தி பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் கவர்ந்துள்ளது.

பிக்பாஸில் அறிமுகம்
இவருடைய திறமைக்கு அங்கீகாரமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக இவர் அதிக அளவில் பிரபலமடைந்து தன்னுடைய கானா பாடல்களை உலக அளவில் எடுத்துச் செல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அங்கு இவருடைய திறமையை அந்த அளவிற்கு எடுபடவில்லை. ஆனாலும் 50 நாட்களுக்கு மேலாக இந்த வீட்டிற்குள் தாக்குப் பிடித்துக் கொண்டார். இவருடைய வெளியேற்றம் இவருடைய தீவிரமான ரசிகர்கள் பலருக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தது.

அம்பேத்கரின் அசத்தல் பெருமை
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு மீண்டும் தன்னுடைய கலைப் பயணத்தை தொடங்கி இருக்கிறார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருந்த மார்கழி மக்கள் இசையில் பல பாடல்களை பாடியுள்ளார். அதில் இவர் பலருக்கும் பிடித்த தலைவராக இருக்கும் அம்பேத்கர் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளார். அந்த பாடல்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் பார்லிமென்டில் ஐயா போட்டோ வச்சாங்க...என்று தொடங்கும் பாடல் ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து உள்ளதாம். இந்த பாடலுக்கு அதிகமான லைக்குகள் கிடைத்து வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications