ஜூலிக்கு வெக்கமா இல்லையா? அவங்கள ஒரு ஆளாவே மதிக்கிறது இல்ல! விஜய்க்காக வனிதா கேட்ட கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவரைச் சுற்றி பல்வேறு விமர்சனங்களும் ஆதரவுகளும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில், ஜூலி தொடர்ந்து வெளியிட்டு வரும் வீடியோக்கள் சமீபமாக அதிக கவனம் பெற்றுள்ளன. இதே விஷயத்தைப் பற்றி வனிதா விஜயகுமார் தற்போது ஓபன் ஆக பேசியிருக்கிறார். அந்த வீடியோ தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Vijay Vanitha Vijayakumar Julie

பிக் பாஸ் ஜூலி விமர்சனம்

விஜய் அரசியல் மேடைகளில் பேச ஆரம்பித்ததிலிருந்தே, அவரது பேச்சுகள் குறித்து ஜூலி விமர்சனம் செய்து வந்தார். குறிப்பாக, ஜல்லிக்கட்டு காளையைப் பற்றி விஜய் சொன்ன ஒரு "குட்டி ஸ்டோரி" தான் இந்த விவாதத்துக்கு தொடக்கமாக அமைந்தது. அந்த பேச்சில், ஒரு சிறுவன் புல்லுக்கட்டை காட்டி ஜல்லிக்கட்டு காளையை அடக்கினான் என்று விஜய் கூறியிருந்தார்.

விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி

இதற்கு எதிராக ஜூலி வெளியிட்ட வீடியோவில், "நீங்கள் சொல்லுறதை நம்பி, உங்கள் மைனாரிட்டி ரசிகர்கள் ஜல்லிக்கட்டு காளையிடம் புல்லுக்கட்டை காட்ட முயற்சி செய்தால் பெரிய ஆபத்து நடக்கும். உயிரிழப்புகள் கூட அதிகரிக்கலாம். உங்களால் போன உயிர் 50 ஆக இருக்கட்டும், அதை 500 ஆக்கிடாதீங்க" என்று கடுமையாகவே பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார்.

குவிந்த கமெண்ட்ஸ்

இந்த வீடியோவுக்குப் பிறகு ஜூலிக்கு எதிராக சமூக வலைதளங்களில் பல நெகட்டிவ் கமெண்ட்கள் வந்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து, அவர் விஜய்க்கு எதிராக தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட தொடங்கியதுடன், விஜய்க்கு எதிராக ஆர்ப்பாட்டங்களிலும் கலந்து கொண்டார்.

வனிதா விஜயகுமார் பேட்டி

இந்த சூழலில், இதைப்பற்றி பேசிய வனிதா விஜயகுமார், விஷயத்தை கொஞ்சம் வேற கோணத்தில் பார்த்திருக்கிறார். அவர், "ஜூலி வீடியோ போட ஆரம்பிச்சதுக்கப்புறம் அவருக்கு நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ் வந்ததாம். அது எல்லாம் விஜய் ரசிகர்கள்தான் என்று அவர் சொல்றாங்க. ஆனால் அதுக்கு என்ன ஆதாரம்?" என்று கேள்வி எழுப்புகிறார்.

அதோடு, "இப்போ சோசியல் மீடியால யாரு வேண்டுமானாலும் அக்கவுண்ட் ஓபன் பண்ணலாம். ஒரு முகமூடி போட்டோ வைச்சுக்கிட்டு யாரு வேணாலும் என்ன வேணாலும் பேசுற நிலைமை தான் இருக்கு. அதை எப்படி நேராக விஜய் ரசிகர்கள்னு சொல்ல முடியும்?" என்று விளக்குகிறார்.

வனிதா கேட்ட கேள்வி

மேலும், ஜூலியின் பின்னணி பற்றியும் அவர் நேரடியாகச் சொல்கிறார். "இவருக்கு இப்போ தான் இப்படி பேசுறாங்கன்னு இல்ல. பிக் பாஸ்க்கு போனப்பவே இதே மாதிரி விமர்சனங்கள் வந்துச்சு. அத தெரிஞ்சு தானே அந்த ஷோக்கு போனாங்க. அப்போ அவங்களுக்கு அது வெக்கமா இல்லையா" என்று கேள்வி எழுப்புகிறார்.

விஜயை குறிவைத்து ஜூலி பேசுவது பற்றி வனிதா பேசுகையில், "விஜய் உட்கார்ந்து இவர்களை திட்டுங்கன்னு சொல்லுற மாதிரி பேசுறாங்க. அவருக்கு வேற வேலை இல்லையா? அவர் எங்களைப் பற்றியே கவலைப்பட மாட்டார். மக்களுக்காக தான் வந்திருக்கிறார். அவரைப் பற்றி எவ்வளவோ பேர் விமர்சனம் பண்ணுறாங்க. அதுக்கெல்லாம் அவர் உட்கார்ந்து ரியாக்ட் பண்ணிக்கிட்டே இருக்காரா?" என்று சற்று கடுப்போடு பேசுகிறார்.

அதே நேரத்தில், ஜூலியின் கருத்துரிமையையும் வனிதா மறுக்கவில்லை. "ஜூலி பேசுவது தப்பு என்று நான் சொல்ல மாட்டேன். அவருக்கு கருத்து சொல்ல உரிமை இருக்கு. அவர் திமுகவில் சேர்ந்திருக்கிறார் என்று சில வீடியோக்களில் பார்த்தேன். அது அவருடைய தேர்வு. ஆனால் அடுத்தவர்கள்மேல் பழி போடக் கூடாது" என்று சமநிலையாக முடிக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+