உதயநிதி அப்படி பேசியது தப்பு.. ஆனா! கைது விவாகரத்தில் விஷால் சொன்ன விஷயம்.. வந்தாச்சு விவாதம்!
சென்னை: விஷால் இயக்கி நடிக்கும் மகுடம் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அதன் பிரமோஷனில் பிஸியாக சுற்றி வருகிறார். அப்போது படம் குறித்த கேள்விகளை விட சமீபத்திய அரசியல் பரபரப்பு பற்றிய கேள்விகள் தான் அவரை அதிகமாக சந்தித்து வருகிறது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம் குறித்து விஷால் சொன்ன கருத்து தற்போது இணையத்தில் அதிகமாக பேசப்படுகிறது.
நடிகர் விஷால் பேட்டி
சமீபத்தில் அளித்த பேட்டியில் உதயநிதி ஸ்டாலின் பேசிய சர்ச்சை குறித்து கேட்கப்பட்ட போது, அரசியலில் சில விஷயங்களை தவிர்க்கலாம், சில விஷயங்களை தவிர்க்க முடியாது. ஆனால் உதயநிதி அப்படி பேசியது தவறு. அதனால்தான் காவல்துறை கைது செய்தார்கள். அதற்கு பிறகு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அதை எடுத்திருக்கிறார்கள் என்று கூறினார்.
அதோடு அவர் சொன்ன இன்னொரு விஷயம் தான் பலர் கவனத்தை எடுத்து இருக்கிறது. லயோலா கல்லூரியில் நான் படித்த காலத்தில் இருந்தே உதயநிதி எனக்கு சீனியர். அவரை நன்றாக தெரியும். ஒரு நாள் அவரை போலீசார் கைது செய்வார்கள் என்று அப்போது நினைத்ததே இல்லை. ஆனால் அரசியல் என்பது யாருடைய வாழ்க்கையையும் எந்த நேரத்தில் மாற்றிவிடும் என்று விஷால் பேசி இருப்பது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் கருத்து
இந்த பேட்டி வெளியான பிறகு ஒரு சிலர் விஷால் ஆரம்பத்தில் இருந்து உதயநிதி ஸ்டாலினுக்கு சப்போர்ட் பண்ணி வந்தார், ஆனால் இப்போ விஜய் வெற்றி பெற்றதும் மாற்றி பேசுகிறார் என்று சொல்லி வருகிறார்கள். அதே நேரத்தில் உதயநிதி ஸ்டாலின் இன்னும் சர்ச்சைக்குரிய விஷயத்தை நான் பேசவே இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார், ஆனால் அவர் பேசியது தப்பு என்பது போல விஷால் சொல்வது சரியா என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
மகுடம் படம்
இதற்கிடையில் மகுடம் படம் விஷாலின் திரை பயணத்தில் மிக முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது. நடிப்புடன் சேர்த்து இயக்குனராகவும் களமிறங்கியுள்ள விஷால் இந்த படத்தை முடிக்க பல சவால்களை சந்தித்ததாக பலபேட்டிகளில் கூறியிருக்கிறார். இயக்குனர் மாற்றம், படப்பிடிப்பு தாமதம், பைனான்ஸ் சிக்கல் என பல பிரச்சனைகளை தாண்டி இந்த படம் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
மகுடம் ஸ்பெஷல்
அதுபோல இந்த படத்தில் மூன்று கேரக்டரில் விஷால் நடித்திருக்கிறாராம். அதோடு இந்த படத்தில் துஷாரா விஜயன், அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்த படம் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துடன் அடுத்த வாரம் நேரடியாக மோத உள்ளது. பெரிய படத்துடன் போட்டிக்கு வருவது குறித்து கேட்கப்பட்ட போதும் கண்டன்ட் மீது நம்பிக்கை இருந்ததால் இந்த தேதியை தேர்வு செய்தோம் என்று விஷால் நம்பிக்கையுடன் கூறியிருக்கிறார்.
கல்வெட்டில் விஜய் பெயர்
என்னதான் படம் பிரமோஷன் ஒரு பக்கம் இருந்தாலும் அதில் அவர் முதல்வர் விஜய் குறித்தும், உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசியது தான் இப்போது இணையத்தில் வைரல் ஆக வருகிறது. ஏற்கனவே அதே பேட்டியில் நடிகர் சங்க கட்டடத்தின் கல்வெட்டில் யார் யார் பெயரோ வரும் என்று நினைத்தேன், ஆனால் முதல்வராக சி ஜோசப் விஜய் பெயர் இடம் பெறுவது 100 ஆண்டுகளுக்கு பிறகும் வரலாறாக இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications
