தப்பு பண்ணிட்டேன் பிரியங்கா.. என்னை மன்னிச்சிடுங்க.. ரசிகர்களை ஃபீல் பண்ண வைத்த ஐக்கி பெர்ரி வீடியோ
சென்னை: முதல்முறையாக தான் செய்தது தவறு என பிரியங்காவிடம் ஐக்கி பெர்ரி மன்னிப்பு கேட்டுள்ளார்.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு சமூக வலைத்தளத்தில் இப்படி ஒரு செயலை ஐக்கி செய்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கவில்லையாம்.

பன்முகத் திறமையாளர்
பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் ஒரு போட்டியாளராக அறிமுகமான ஐக்கி பெர்ரி சமூக வலைத்தளத்தில் பலருக்கும் பரிச்சயமான ஒரு நபராக தான் இருந்துவருகிறார். சோசியல் மீடியாவில் இவருடைய ஆக்டிவ் பார்த்து பலர் இவருக்கு சப்போர்ட் கொடுத்து வருகின்றனர். இவர் ஒரு டான்சர் ஆகவும், ராப் பாடகரகவும், மாடலிங் பெண்ணாகவும், ஒரு மருத்துவராகவும் இருந்து வருகிறார். இத்தனை திறமைகளை தனக்குள் வைத்திருக்கும் பன்முகத் திறமையாளர் ஆக இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய விளையாட்டு பலரையும் கவர்ந்து இருந்தது.

ஃபீல் பண்ண வைத்த வீடியோ
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு ஏற்கனவே எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் அனைவரையும் சந்தித்து அடிக்கடி போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தற்போது பிரியங்காவை பற்றி உருக்கமாக தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்ததும் ரசிகர்கள் பலர் உருகி போய் இருக்கின்றனர். என்ன தான் இவர் ஜாலியாக பெண்ணாக இருந்தாலும் தற்போது இவர் செய்த செயல் பலரையும் பீல் பண்ண வைத்துள்ளது.

பிரியங்காவின் பாசம்
பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள அனைவரிடமும் சகஜமாக பேசி பழகி எப்போதுமே குழந்தைபோல துறுதுறுப்பாக இருந்து வந்த ஐக்கி பெர்ரி அதிகமாக பிரியங்காவிடம் பேசி பழகவில்லையாம். ஒருசில நாட்களுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா இதைப்பற்றி பேசியிருந்தார். அதைப் பார்த்து பல ரசிகர்களும் ஐக்கியிடம் பிரியங்கா உங்களை நினைத்து உருக்கமாக பேசியிருந்தார், அதற்கு நீங்கள் என்ன பதில் சொல்கிறீர்கள் என்று கேள்விகளை எழுப்பி வந்தார்களாம். அதற்குப் பிறகுதான் அந்த எபிசோடுகளை ஐக்கியே பார்த்து உள்ளாராம். அப்போது இந்த வீட்டிற்குள் தான் அதிகமாக கனெக்ட் ஆக முடியாமலிருந்தது ஐக்கியிடம் தான். ஐக்கிய எனக்கு ரொம்பவே பிடிக்கும் ஆனால் அவர் என்னிடம் அந்த அளவிற்கு பழகியது இல்லை என்று பிரியங்கா தெரிவித்திருந்தார்.

மன்னிப்பு கேட்ட ஐக்கி
பிரியங்காவின் வார்த்தைகளைக் கேட்டதும் ஐக்கி பெர்ரி ரொம்பவே ஃபீல் பண்ணி விட்டார். எப்போதுமே யாரையும் கவலை பட விடக்கூடாது என்று நினைக்கும் ஐக்கிய பெர்ரி தற்போது பிரியங்காவின் பேச்சை கேட்டதும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு போனாராம். இந்த நிலையில் அதற்கு பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் தான் வீட்டிற்குள் முதல்முறை வந்ததிலிருந்து, வீட்டிற்குள் இருக்கும் போது அதிகமாக உங்களிடம் பேசி பழகவில்லை என்றாலும் எனக்கு ரொம்ப பிடிக்கும். பிரியங்காவிற்கு நான் தான் பிக்கு என்று பெயர் வைத்தேன். காரணம் என்னுடைய உறவுப் பெண் ஒருவரைப் போலவே இவர் இருப்பதால் என்று கூறியிருக்கிறார். இந்த செயலை பார்த்ததும் ரசிகர்கள் ஐக்கிக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications