ஜெகதீஷ், ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுங்க! விஜய் கரூரில் கூப்பிட்ட நபர் யார் தெரியுமா? அவரா இந்த பிரபலம்
சென்னை: கரூர் சம்பவ அதிர்வலைகள் இன்னும் அடங்காத நிலையில், தவெக விஜய் குறித்த விமர்சனங்களும் பெருகி கொண்டே இருக்கிறது.. தவெக கட்சியை பெரும்பாலான இணையவாசிகளும் வறுத்தெடுத்து வருகிறார்கள்.. இந்நிலையில், விஜய் தற்போது என்ன மனநிலைமையில் உள்ளார் என்று, மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தன்னுடைய வீடியோவில் தெரிவித்துள்ளார். அத்துடன் தவெகவிலுள்ள ஜெகதீஷ் யார் என்பது குறித்தும் விவரித்துள்ளார்.
Cheyyaru Balu என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு, "கரூர் சம்பவத்துக்கு காரணம் என்ன? யார் மீது தவறு? என்ற விவாதமெல்லாம் இன்னும் நடந்தபடியே உள்ளது..

எனக்கு தெரிந்த நபர் ஒருவர், கண்திருஷ்டி, ஏவல், போன்ற விவகாரங்களில் நம்பிக்கை உள்ளவர்.. அவர் என்னிடம் பேசும்போது விஜய்க்கு பயங்கரமான கண் திருஷ்டி பட்டுவிட்டது என்கிறார். அப்படி பார்த்தால் எல்லா பிரபலங்களுக்கும்தான் கண்திருஷ்டி இருக்கும்.
2 ஆண்டுகளில் 2 மாநாடு
தவெக ஆரம்பித்து 2 வருடங்களில் 2 மாநாடு நடத்திவிட்டார் விஜய்.. செயற்குழு, பொதுக்குழு, பனையூரில் கொடியேற்றம், பரந்தூர் விமான நிலையத்துக்கு வந்தபோதும் கூட்டம், ஒரு நூல் வெளியீட்டு விழாவில் 15 நிமிடத்தில் அவ்வளவு பெரிய பேச்சு, இந்தியாவிலேயே முதல்முறையாக ஆப் மூலமாக கட்சி உறுப்பினராகுங்கள் என்று விஜய் அறிவித்ததுமே, 1 கோடி பேர் இணைந்தது, என இவை அத்தனையும் சேர்ந்து விஜய்க்கு ஒரு பெரிய மாஸ் உருவாயிற்று..
அப்படியானால் எங்கே தவறு நடந்தது? சரியான திட்டமிடல் இல்லையா? அதிகப்படியான முன்னேற்பாடுகள் இல்லையா? விஜய்க்கு வழிகாட்டுதல்கள் இல்லையோ? சுற்றுப்பயணத்தை விஜய் தவிர்த்திருக்கலாமோ? என்றெல்லாம் இப்போது கேட்கிறார்கள்.. ஆனால், விஜய்யே எதிர்பார்க்காத கூட்டம்தான் அன்றைய தினம் வந்தது.
விஜய் கரூர் சம்பவம்
மதியம் 3 மணிக்கு விஜய் பேசுவதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் எதுக்காக பில்லர் லைட்டுகள், டியூப் லைட்டுகளை ஏராளமாக தவெகவினர் கட்டி வைத்திருந்தார்கள்? அப்படியானால் விஜய் தாமதமாக வரப்போகிறார் என்று முன்கூட்டியே முடிவு தவெக முடிவு செய்துவிட்டதா? என்றெல்லாம் கேள்வி எழுப்புகிறார்கள்.
விஜய்க்கு இது முதல் அனுபவமாகும்.. மிகவும் பதட்டமாகிவிட்டதால், உடனே கரூரிலிருந்து கிளம்பி வந்துவிட்டார்.. ஆனால், அதுவரை விஜய்யை சுற்றியிருந்தவர்கள் எல்லாருமே பிச்சிக்கிட்டு ஓடிவிட்டார்கள்.. அவர்கள் எல்லாரும் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
இப்போது விஜய் என்ன மனநிலையில் இருக்கிறார்? என்பது அவரது நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம்.. "இவர்களை நம்பி எப்படி கட்சி ஆரம்பித்தோம்?" என்ற மனநிலையில் கடந்த 10 நாட்களாகவே விஜய் உள்ளாராம்.. அவர்களை எல்லாம் அதீதமாக நம்பியிருந்த நிலையில், தற்போதுதான் தெளிவடைந்து உள்ளாராம்.
ஜெகதீஷ், ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுங்க
அதேபோல, கரூரில் வேனிலிருந்து கூப்பிட்டு, ஜெகதீஷ் ஆம்புலன்ஸுக்கு போன் பண்ணுங்க என்று விஜய் சொன்னார்.. அப்போதிருந்தே யார் அந்த ஜெகதீஷ் என்று பலரும் என்னிடம் கேட்கிறார்கள்..
ஜெகதீஷ் என்பவர் ரூட்டு என்ற சினிமா நிறுவனம் வைத்திருக்கிறார்.. இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷிடம், சோஷியல் மீடியாவை கையாளக்கூடிய அட்மினாக வந்தவர் இந்த ஜெகதீஷ்.. அந்த நேரத்தில் "தலைவா" படத்தின் பட வேலைகள் நடந்தபோது, ஜிவி பிரகாஷின் ஸ்டுடியோவுக்கு சென்று வந்துள்ளார் விஜய்..
சோஷியல் மீடியா ஹேண்டிலிங்
அப்போதுதான், ஜிவி பிரகாஷிடம், தன்னுடைய சோஷியல் மீடியாவை ஹேண்டில் செய்வதற்கும், ஜெகதீஷ் போல ஒருவர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று விஜய் சொல்ல, அதற்கு ஜிவி பிரகாஷ், இவரையே உங்களுடன் வைத்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டாராம்.
கோவையை சேர்ந்தவர் ஜெகதீஷ்.. பரியேறும் பெருமாள் படத்தில் நடித்திருந்த கதிர் என்ற ஹீரோ இவரது உறவினர்தான்.. தற்போது ஜெகதீஷூக்கு தவெகவில் முக்கிய பொறுப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுக்கும், நடிகர்களுக்கும் ஜெகதீஷ்தான் மேனேஜராக உள்ளார்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications