ஜீ தமிழ் சீரியல் திடீர்னு முடிக்க காரணம் இதுதான்! பல மாதமாக வலி! நடிகர் ஜெய் ஆகாஷ் எமோஷனல் வீடியோ
சென்னை: ஜீ தமிழ் சேனலில் நடிகர் ஜெய் ஆகாஷ் மற்றும் ரேஷ்மா முரளிதரன் நடித்த நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் நேற்றுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த சீரியல் எதற்காக திடீரென்று முடிவுக்கு வந்தது என்பது பற்றி ஜெய் ஆகாஷ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு வெளியிட்டிருக்கிறார்.
நடிகர் ஜெய் ஆகாஷ் தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருக்கிறார். தமிழில் ரோஜாவனம் திரைப்படத்தின் மூலமாகத்தான் காலடி எடுத்து வைத்தார். அதற்குப் பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் அந்த திரைப்படங்கள் அவர் எதிர்பார்த்த அளவிற்கு பிரபலத்தை கொடுக்கவில்லை.

இதனால் மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார். பொதுவாக தமிழ் சினிமாவில் நிறைய நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான வாய்ப்புகளும் அங்கீகாரமும் கிடைக்காமல் இருக்கிறது. அப்படி சினிமாவில் சாதிக்க முடியாதவர்கள் சின்னத்திரை பக்கம் வருகிறார்கள். அதுபோல ஜெய் ஆகாஷ் சின்னத்திரையில் களம் இறங்கி இருந்தார்.
அதே நேரத்தில் சினிமாவிலும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். கடந்த ஆண்டில் அவர் நடித்த யோக்கியன் திரைப்படம் வெளியானது. அதுபோல ஜீ தமிழில் ஒளிபரப்பான நீ தானே எந்தன் பொன்வசந்தம் என்ற சீரியலில் ஜெய் ஆகாஷ் நடித்து வந்தார். இந்த சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. அதை தொடர்ந்து நெஞ்சத்தை கிள்ளாதே என்று சீரியலில் நடிக்க தொடங்கி இருந்தார்.
இந்த சீரியல் தொடங்கி ஆறு மாத காலம் தான் ஆகிறது. இந்த சீரியலில் ஜெய் ஆகாஷுக்கு ஜோடியாக ரேஷ்மா முரளிதரன் நடித்து வந்தார். நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியல் ஏற்கனவே ஒளிபரப்பான உள்ளம் கொள்ளை போகுதடா என்ற சீரியலை தழுவி எடுக்கப்பட்டது தான். ஆனால் தற்போது இந்த சீரியல் 6 மாதத்திற்குள் முடிவடைய வந்துவிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.
இதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கும் நிலையில் youtube சேனல்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. இந்த நிலையில் இதற்கு ஜெய் ஆகாஷ் விளக்கம் கொடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து எல்லோரும் பல்வேறு வதந்திகள் பரப்பி வருகிறார்கள் அதுவெல்லாம் உண்மை கிடையாது.

அதற்கான உண்மையான காரணம் என்னுடைய உடல்நிலை தான். என்னை இன்ஸ்டாகிராமில் பாலோ பண்ணுபவர்களுக்கு என்னுடைய உடல்நிலை தெரிந்து இருக்கும். சீரியல் தொடங்குவதற்கு முன்பே எனக்கு ஏற்பட்ட விபத்தில் காலில் அடிபட்டு இருந்தது. அதற்கு மேஜர் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள். ஆனால் குறிப்பிட்ட நாளில் சீரியல் தொடங்க வேண்டும் என்பதற்காக நான் ஆபரேஷன் செய்யாமல் அந்த வலியோடு தான் சீரியலில் நடிக்க தொடங்கினேன்.
அதுவும் முதலிலேயே ஞாயிற்று கிழமை எபிசோடு தொடர்ந்து ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக வேண்டும் என்பதற்காக ஒரு நாள் முழுக்க சூட்டிங் நடந்தது அப்போது கதாநாயகி ரேஷ்மாவை தூக்கிக் கொண்டு நான் ஓடுவது போன்ற காட்சிகள் இருந்தது. அந்த காட்சிகளை எடுத்து முடித்ததும் எனக்கு கால் வலி அதிகமாகிவிட்டது. ஆனால் அதை அட்ஜஸ்ட் பண்ணி கொண்டு இருந்தேன்.
பிறகு டிசம்பர் மாதத்தில் லண்டனுக்கு என்னுடைய குடும்பத்தை பார்க்க போயிருந்த போது என்னுடைய உடல் நிலையை பார்த்து என்னுடைய மனைவி கண்டிப்பாக ஆபரேஷன் செய்து ஆக வேண்டும் என்று சொல்லிவிட்டார். ஆனால் ஆபரேஷன் செய்தால் குறைந்த பட்சம் இரண்டு மாதங்கள் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனாலும் நான் வேறு ஏதாவது செய்யலாமா என்று முயற்சி எடுத்தேன்.
ஆனால் இது இப்போதைக்கு ஆபரேஷன் செய்யாமல் போனால் இது பெரிய பிரச்சனையாகிவிடும் என்பதால் நான் ஆபரேஷன் செய்து கொண்டேன் ஒரு வாரம் நான் சீரியலில் இல்லை என்பதால் கதாநாயகன் இல்லாமல் கதை நல்லா இல்லை என்பது பலருடைய கருத்தாக இருந்தது. சேனல் தரப்பினரும் அதை விரும்பவில்லை.
அதனால் வேறு வழியில்லாமல் தான் சீரியலை முடிக்கிறோம். அது ஆனால் இணையத்தில் பரவி வருவது போன்று வேறு காரணங்கள் இல்லை. உண்மையான காரணம் என்னுடைய உடல் நிலை மட்டும் தான். எனக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை வைத்து நடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன் ஆனாலும் அவர்கள் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.
அதனால் தான் இந்த சீரியல் முடிவுக்கு வருகிறது. அதே நேரத்தில் என்னுடைய உடல்நிலை சரியானதும் மீண்டும் ஒரு சீரியலில் நான் கண்டிப்பாக நடிக்க வருவேன். அதுபோல சில திரைப்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். அது குறித்த அப்டேட் சீக்கிரமாக தருகிறேன் என்று ஜெய் ஆகாஷ் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications