ஜெய் பீம் மணிகண்டன் ஞாபகம் இருக்கா? விஜய் டிவியில் அவர் பெற்ற வெற்றி தெரியுமா?வெளியான புகைப்படம்
சென்னை: ஜெய் பீம் திரைப்படம் மூலம் பிரபலமடைந்த நடிகர் மணிகண்டன் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நான்காவது சீசன் ரன்னர் ஆப் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம் தான்.
நடிகர் மணிகண்டன் தற்போது குட் நைட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் பலர் அறிமுகம் ஆகி பிரபலம் அடைந்து கொண்டிருக்கின்றனர். அதுவும் குறிப்பாக விஜய் டிவியில் போட்டியாளர்களாக அறிமுகமான பலர் வெள்ளித் துறையில் கொடிகட்டி பறந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஜெய் பீம் திரைப்படம் நடிகர் மணிகண்டனும் இணைந்து இருக்கிறார்.

ஜெய் பீம் திரைப்படத்தில் மணிகண்டன் பாவமான ஒரு கேரக்டரில் நடித்திருப்பார். இப்போது குட் நைட் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகி இருக்கிறார். இப்படத்தை விநாயக் சந்திரசேகர் என்கிற புதுமுகை இயக்குனர் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக முதல் நீ முடிவும் நீ படத்தின் கதாநாயகி மீதார் ரகுநாத் நடித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்திற்கான ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். இதில் ரமேஷ், திலக், பகவதி பெருமாள், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படம் குறட்டையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படமாக இருக்கிறது.
ஏற்கனவே இந்த திரைப்படத்திற்கான டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்திருந்த நிலையில் தற்போது அந்த படமும் வெளியாகி ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறது. படம் வெளியாவதற்கு முன்பே இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் பட குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.

கலக்கப்போவது யாரு சாம்பியன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தனர். அதில் கலந்து கொண்ட மணிகண்டன் நான் என்னுடைய கேரியரை கலக்கப்போவது யாரு மேடையில் தான் ஸ்டார்ட் பண்ணினேன். எனக்குள் இருக்கிற மிமிக்ரி திறமையை இங்கே தான் நான் வெளிப்படுத்தினேன் என்று தெரிவித்திருக்கிறார்.
இது பலருக்கும் இன்ப அதிர்ச்சியாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இவர் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அவருடைய பழைய புகைப்படங்கள் மற்றும் இப்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இவருடைய திறமைக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications