வரலாற்று சாதனை செய்த ஜெயிலர் 2 வசூல் வேட்டை.. 11 நாளில் இத்தனை கொடியா?
சென்னை: ரஜினிகாந்த் ரசிகர்கள் இப்போது கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள். அதற்கு காரணம் ஜெயிலர் 2 படத்தின் வசூல் தான். படம் வெளியாகி 11 நாட்கள் முடிந்திருக்கும் நிலையில் உலகம் முழுவதும் ரூ.710.35 கோடி வசூலித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதன் மூலம் ரஜினிகாந்த் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான 2.0 படத்தின் மொத்த வசூலையும் முந்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் ஒரு படம் 100 கோடி வசூலிப்பதே பெரிய விஷயமாக பார்க்கப்பட்ட காலம் இருந்தது. ஆனால் இப்போது 500 கோடி, 600 கோடி கடந்து 700 கோடியை தாண்டும் படங்கள் பற்றி பேசும் அளவுக்கு நிலவரம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசைகள் ஜெயிலர் 2 இப்போது ஒரு புதிய மைல் கல்லை தொட்டிருக்கிறது.
அக்டோபர் 15ஆம் தேதி தியேட்டரில் வெளியான ஜெயிலர் 2 முதல் நாளிலிருந்து நல்ல வசூலை பெற்றிருக்கிறது. ஆனால் இரண்டாவது நாள் படத்தின் வசூல் குறைய தொடங்கியதும் படத்தின் நிலைமை அவ்வளவுதானா? என்று சிலர் கலாய்த்து வந்தனர். ஆனால் அடுத்தடுத்த நாட்களிலேயே மீண்டும் வசூல் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இப்போது 11வது நாள் முடிவில் உலக அளவில் மொத்த வசூல் 710.35 கோடியை எட்டி உள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது.

ஜெயிலர் 2 வசூல் நிலவரம்
இதில் இந்தியாவில் மட்டும் மொத்த வசூல் 466.85 கோடி, இந்திய நெட் வசூல் 398.70 கோடி என்றும் கூறப்படுகிறது. வெளிநாடுகளிலும் நல்ல வசூல் கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் ஞாயிற்றுக்கிழமையான 11 வது நாளில் இந்தியாவில் மட்டும் 25. 70 கோடி நெட் வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 2வது வார இறுதியில் மீண்டும் வசூல் உயர்ந்திருப்பது பெரிதாக பார்க்கப்படுகிறது.
வரலாற்று சாதனை
இந்த வசூல் சாதனையில் ரசிகர்களுக்கு இன்னொரு விஷயமும் ஸ்பெஷல். ரஜினிகாந்த் அக்ஷய் குமார் இணைந்து நடித்த இயக்குனர் ஷங்கரின் 2.0 படம் உலக அளவில் சுமார் 691 கோடி வசூலித்ததாக கூறப்பட்டது. அந்த வசூலை ஜெயிலர் 2 வெறும் 11 நாட்களிலேயே முந்தி இருக்கிறது. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இது வெறும் 2ம் பாகங்களுக்குள் மட்டும் நடந்த போட்டி கிடையாது, எல்லா தமிழ் படங்களில் உலகளாவிய மொத்த வசூலையும் கணக்கில் எடுத்து பார்க்கும்போது ஜெயிலர் 2 முதல் இடத்துக்கு வந்திருக்கிறது. அதனால் தான் இந்த சாதனை இப்போது வரலாற்று சாதனை என்ற அளவிற்கு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
வரவேற்புக்கு காரணம்
நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் முதல் பாகமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பிடித்து விட்டது. அதே படத்தின் அடுத்த தொடர்ச்சி என்பதால் 3வது பாகத்திலும் என்ன சொல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே இருந்தது. ஆனால் முதல் நாள் காட்சியை பார்த்த ரசிகர்களே மிரண்டு போய்விட்டார்கள். காமெடி வேண்டுமா? காமெடி இருக்கு, சண்டை வேண்டுமா? அதுவும் இருக்கு, மோஷனல் வேண்டுமா, அதுவும் இருக்கு.. என்று சொல்வது போல எல்லாமே கலந்த கலவையாக இந்த படத்தை கொடுத்து நெல்சன் ரசிகர்களை மீண்டும் தன் வசப்படுத்தி விட்டார். ஒரு சில குறைபாடுகளை ரசிகர்கள் சுட்டிக்காட்டி வந்தாலும் மொத்தமாக பார்க்கும் போது படம் தியேட்டருக்கு சென்று பார்க்கும் அளவிற்கு நல்ல அனுபவம் கொடுக்கிறது என்பதுதான் பலருடைய கருத்து. அதனாலையே படத்திற்கு நாளுக்கு நாள் வசூல் அதிகரித்து வருகிறது.



Click it and Unblock the Notifications
