ஜெயிலர் 2 வசூலில் மீண்டும் வேகம்.. ஒரே நாளில் இவ்வளவு கோடியா? மொத்த கலெக்சன் எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் வசூல் சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் சனிக்கிழமையான நேற்று மீண்டும் கணிசமாக அதிகரித்து இருக்கிறது. முதல் வாரத்தில் நல்ல வசூலை குவித்த படம் 2வது வாரத்தில் தொடக்கத்தில் சற்று குறைய தொடங்கியது. ஆனால் வார இறுதியில் வசூலில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் ரஜினி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அக்டோபர் 24ஆம் தேதியான நேற்று ஜெயிலர் 2 இந்தியாவில் 24.15 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Jailer 2 box office

பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்

பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை வெளியிடும் சாக்னிக் வெளியிட்டுள்ள தகவலில்தான், 24 தேதி ஜெயிலர் 2 இந்தியாவில் 24.15 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு முந்தைய நாளான வெள்ளிக்கிழமை வசூல் 14.50 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது சனிக்கிழமை வசூல் அதிகமாகவே உயர்ந்து இருக்கிறது. வார நாட்களில் படம் பார்க்கவரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில் சனிக்கிழமை கிடைத்த வசூல் படத்துக்கு நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழ் ரிலீஸ் தான் நேற்றைய இந்திய வசூலின் அதிகமாக இருந்திருக்கிறது. தெலுங்கு, ஹிந்தி, கன்னட ரிலீஸ்களிலும் வசூல் கிடைத்திருக்கிறது.

வசூல் நிலவரம்

இதுவரை ஜெயிலர் 2 இந்தியாவில் நிகர வசூல் சுமார் 373 கோடி வசூலித்ததாகவும், இந்தியாவில் மொத்த வசூல் 436.80 கோடியை எட்டி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் கிடைத்த 229.50 கோடியையும் சேர்த்தால் உலகம் முழுவதும் படத்தின் மொத்த வசூல் ரூ 666.30 கோடியாக உயர்ந்திருக்கிறது. இங்கே 3 விஷயத்தை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் இன்றைய நிகர வசூல், இந்திய மொத்த வசூல், உலகளாவிய மொத்த வசூல் ஆகியவை மூன்றும் வெவ்வேறு கணக்குகள். அதனால் ஒவ்வொரு செய்திகளிலும் வரும் வசூல் தொகையை ஒப்பிடும்போது எந்த கணக்கு குறிப்பிடப்படுகிறது என்பதை கவனிக்க வேண்டியது அவசியம்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படம் அக்டோபர் 15ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆனது. முதல் பாகத்தில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற முத்துவேல் பாண்டியன் கேரக்டரில் மீண்டும் ரஜினிகாந்த் திரைக்கு வந்ததால் படத்தின் மீது வெளியீட்டுக்கு முன்பு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்ப முதல் சில நாட்களில் வசூலும் ஸ்ட்ராங்காகவே இருந்தது. இப்போது ரசிகர்கள் கவனிப்பது ஒரே விஷயம் வார இறுதியில் கிடைத்திருக்கும் வசூல் அடுத்த நாட்களிலும் தொடருமா? என்பதுதான். படம் ஏற்கனவே உலக அளவில் 600 கோடி வசூல் எல்லையை கடந்திருக்கும் நிலையில் அடுத்து 1000 கோடி வசூலை நோக்கி எவ்வளவு வேகமாக போகும் என்றுதான் சோசியல் மீடியாவில் பேசப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+