ஜெயிலர் 2 "அலா போலேலோ” பாடலா இது? ரஜினிக்கு வந்த சோதனை! இப்படி கிண்டி வச்சிருக்காங்களே! என்ன ஸ்டெப்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் படம் என்றாலே எதிர்பார்ப்பு எகிர்வது புதிதல்ல. அதிலும் ஜெயிலர் படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு உருவாகி இருக்கும் ஜெய்லர் 2 என்றால் கேட்கவே வேண்டாம். படம் எப்போது வரும்? ரஜினியின் மாஸ் காட்சி எப்படி இருக்கும்? அனிருத் என்ன சம்பவம் செய்யப் போகிறார்? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இந்த நிலையில் படத்தின் முதல் சிங்கிலான அலாபோலேலோ பாடலின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஆனால் பாடல் வெளியான வேகத்தில் அதைப்பற்றி பாராட்டுக்கள் வருவதை விட வேற ஒரு விஷயம் தான் சோசியல் மீடியாவில் சூடு பிடித்திருக்கிறது.

ஜெயிலர் படத்தில் மலையாள நடிகர்கள் முக்கியத்துவம் பெற்றிருந்த நிலையில் ஜெயிலர் 2 பாடலிலும் மலையாள வார்த்தைகள் இடம் பெற்றிருப்பது இயல்பாகவே கேரளா ரகசியர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் அந்த வார்த்தைகள் உச்சரிக்கப்படும் விதத்தை கேட்டால் சிலர் இது மலையாளமா? இல்லை மலையாளத்தை தமிழில் நினைத்து பேசுறாங்களா? என்ற ரீதியில் கேள்வி எழுப்ப தொடங்கி விட்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் பாடலை ரசிக்க வந்தவர்கள் இப்போது பாடலில் வரும் ஒவ்வொரு வார்த்தையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

Jailer 2

புரியாத பாடல் வரிகள்

பாடலை கேட்கலாம்னு வந்தோம் இங்கே மலையாள வகுப்பு நடக்குது போல.. ஒரு வார்த்தை புரியலானாலும் பரவால்ல, இங்க உச்சரிப்பு ஏன் இப்படி இருக்கு என்பது தான் புரியல.. என்று நெட்டிசன்கள் தங்களுக்கே உரிய பாணியில் கலாய்த்து வருகின்றனர். ஜெயிலர் படத்தில் காவலா பாடல் வெளியான போது தமன்னாவின் டான்ஸும் பாடலின் துள்ளலான இசையும் சேர்ந்து சமூக வலைத்தளங்களில் ஒரு கலக்கு கலக்கியது. அந்த பாடலின் வெற்றியை மனதில் வைத்து ஜெயிலர் 2 படத்தின் முதல் பாடலும் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்.

Jailer 2

டான்ஸ் ஸ்டெப்

அதனால்தான் அலாபோலேலோ ப்ரோமோ வெளியானதும் அடுத்த காவால்லாம் இதுதானா? என்று எதிர்பார்ப்புடன் பலரும் பார்க்க ஆரம்பித்தனர். பாடலில் பூர்ணாவின் டான்ஸும், ரஜினியின் ஸ்டைலான தோற்றமும் கவனம் பெற்றுள்ளது. ஆனால் அதில் போட்டு இருக்கும் ஸ்டெப்பு தான் இப்போ சோசியல் மீடியாவில் கலாய்க்கப்பட்டு வருகிறது. என்ன நடந்தாலும் ஒரே ஸ்டெப் என்பது போல இங்குட்டு அங்குட்டுமாக நடிகை ஆடிக் கொண்டிருப்பதும், பின்னாடி இருக்கிற குரூப் டான்ஸரில் ஒரு பொண்ணு நான் கேமராவை பார்க்க மாட்டேன்... அப்படியே ஆடிட்டே... இருப்பேன், என்று ஆடிக் கொண்டிருக்கிறார்.

Jailer 2

ரசிகர்கள் வருத்தம்

அதையும் இப்போது நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த பாடலை எப்படி உச்சரிக்கணும்? என்ற ஒரு குழப்பம் ஒரு பக்கம் வந்து கொண்டிருக்கிறது. பாடல் ஸ்டெப்பு இன்னொரு பக்கம் கலாய்க்கப்பட்டு வருகிறது. அனிருத் என்னய்யா இப்படி கிண்டி வச்சிருக்கிற.. உன்னை நம்பி காத்திருந்ததுக்கு இப்படி பழிவாங்கிட்டியே என்று சிலர் நொந்து கமெண்ட் போட்டு வருகிறார்கள். மொத்தத்தில் ஜெயிலர் 2 பாடல் எப்படி இருக்கு என்ற கேள்விக்கு இன்னும் முழுமையான பதில் கிடைக்கவில்லை என்றாலும் பாடல் வெளியாவதற்கு முன்பே அதை பற்றிய விவாதம் மட்டும் நல்ல "ஓப்பனிங்" கொடுத்து விட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+