சன் டிவியில் ஜெயிலர் ஆடியோ லான்ச்.. நெல்சனை வைத்து "சிலருக்கு” குட்டு வைத்த நடிகர் ரஜினிகாந்த்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் திரைக்கு வர இருக்கும் ஜெய்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் ஒளிபரப்பாகி இருக்கிறது.
இந்த நிலையில் தற்போது ஜெய்லர் இசை வெளியீட்டு விழா வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.
அதற்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் தன்னிடம் கேட்ட கேள்விக்குறித்து மேடையில் பேசி அனைவரையும் சிரிக்க வைத்திருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த், நடிகை தமன்னா போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரமாண்டமாக திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் தான் இந்த திரைப்படத்திற்கான ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சில வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் சொன்ன குட்டி கதை கூட பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் முழு வீடியோவும் சன் டிவியில் வெளியாக இருக்கிறது.
அதுவும் சன் டிவியில் வரும் ஆகஸ்ட் ஆறாம் தேதி மாலை 6:00 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான ப்ரோமோ இப்போது அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கிறது. இதனால் இது வெள்ளித்திரைக்கு முன்பே சின்னதிரையிலும் பெரும் பரபரப்பையும் தாக்கத்தையும் ஏற்படுத்த காத்திருக்கிறது. நடிகர் ரஜினிகாந்தின் தீவிரமான ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ஆர்வத்தோடு காத்திருப்பதாக கமெண்ட் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது வெளியான ப்ரோமோவில் ஆரம்பத்தில் நடிகை தமன்னா காவாலா பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கும் நிலையில் அதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அதில் பேசியிருக்கிறார். அப்போது "ஒருமுறை நெல்சன் என்கிட்ட வந்து உட்கார்ந்தார். உங்க லவ் பத்தி சொல்லுங்க சார் என்று சொன்னார். என்னது லவ் பத்தியா..? என்று நான் கேட்க, அதற்கு நீங்க யாரெல்லாம் ஹீரோயினியை லவ் பண்ணுனிங்க...? எந்த ஹீரோயின்கள் எல்லாம் உங்களை லவ் பண்ணுனாங்க என்று கேட்டார்.
எதுக்கு இதை கேக்குறீங்க என்று நான் கேட்க, அதற்கு நெல்சன் இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டு நான் சார்ஜ் எடுத்துக்கணும் சார் என்று சொன்னார். இவங்க சார்ஜ் எடுத்துக்கிறதுக்கு நாங்க லவ் பண்ணுனதை எல்லாம் சொல்லனுமாம்...? என்று சொல்ல, அதை கேட்டு அங்கிருந்த அனைவரும் சிரிக்கின்றனர். இப்படியாக தற்போதைய பிரமோ வெளியாகி இருக்கிறது.
இதற்கு ரசிகர்கள் சிலர் நடிகர் ரஜினிகாந்த் நெல்சன் பற்றி சொல்வது போல சொல்லி, சிலர் தங்களுடைய குடும்ப பிரச்சனையை தெரிந்து கொள்வதில் ஆவலாக கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு குத்தி காட்டுவது போன்று பேசி இருக்கிறாரோ என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஏற்கனவே ஆடியோ வெளியீட்டு விழாவில் சொன்ன காகம் கழுகு கதைக்கு இன்னும் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இதுவும் புது பிரச்சனையாக இருக்கிறதே என்றும் இணையவாசிகள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications