ஜெயிலரில் தமன்னா கேரக்டர் இதுதான்.. "மாரிமுத்து” சொன்ன ரகசியம்.. காவாலயா கூட இப்படி தான் வருமாம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர் மாரிமுத்து இந்த திரைப்படம் குறித்து சில தகவல்களை கூறி இருக்கிறார்.
நடிகர் மாரிமுத்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டராக அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கும் நிலையில் இப்போது ஜெயிலர் திரைப்படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறாராம்.

இந்த நிலையில் "காவாலயா" பாடல் எப்படி வரும் என்றும் அதில் நடிகை தமன்னாவின் கேரக்டர் என்ன மாதிரி இருக்கும் என்றும் மாரிமுத்து சில தகவல்களை கூறி இருக்கிறார். அதை குறித்து விரிவாக பார்க்கலாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் இந்த சீரியலில் குணசேகரன் கேரக்டர் அதிகமான ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது. அதனால் ட்ரெண்டிங் ஸ்டாராக குணசேகரன் மாறிக் கொண்டிருக்கிறார். இதற்கு முன்பு நடிகர் மாரிமுத்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் முதல் முறையாக நடித்த சீரியல் மூலமாக புகழின் உச்சத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்திலும் நடிகர் மாரி முத்து முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். அது குறித்து நடிகர் மாரிமுத்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசுகையில், நடிகர் ரஜினியோடு நடிப்பது எனக்கு ரொம்பவே சந்தோஷம். அவரோடு நான் சில விஷயங்களை பேசி கொண்டு இருக்கும் போது எனக்கு பெருமையாக இருக்கும். அதிலும் சூட்டிங் ஸ்பாட்டில் கூட நீங்க எதிர்நீச்சல் சீரியலில் நடிச்சுக்கிட்டு இருக்கீங்களா? நான் ஒரு சில முறை பார்த்திருக்கிறேன் வீட்டில் தொடர்ச்சியாக பார்ப்பாங்க என்று சொன்னார். எனக்கு அப்போ பெரிய பாராட்டு கிடைத்தது போன்று இருந்தது.
ரஜினியுடைய உழைப்பு மற்றும் அவருடைய ஸ்டைல் வேற யாருக்கும் வந்து விடாது. அவர் சின்ன வயதில் இருக்கும் போது என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று கூட சூட்டிங் ஸ்பாட்டில் வைத்து என்னிடம் பேசி இருக்கிறார். நான் அப்போது அவரைப் பார்த்து வியந்து போயிருந்தேன். என்று மாரிமுத்து பேசி இருக்கிறார். மேலும் ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற காவாலயா திரைப்பட பாடல் ட்ரெண்டிங்காக இருக்கும் நிலையில் அது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கும் மாரிமுத்து பதில் கொடுத்திருக்கிறார்.
அதில்," ஜெயிலர் திரைப்படத்தில் தமன்னா தமன்னாவாகவே நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் தமன்னா ஒரு நடிகை. அவரை நாங்க சந்திக்க போவோம். அதாவது ரஜினியோடு சேர்ந்து நானும் போவேன். அப்படி நாங்க போகும்போது சூட்டிங்கில் தமன்னா டான்ஸ் ஆடிக் கொண்டிருப்பார். அந்த பாட்டு தான் காவாலயா பாடல். அந்த படத்தில் நடிகை தமன்னாவின் டான்ஸ் பார்த்து நான் கூட மிரண்டு இருந்தேன். அந்த அளவிற்கு அழகாக ஆடி இருக்கிறார் என்று மாரிமுத்து பேசியிருக்கிறார்.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications