என்ன ஒரு பிற்போக்கு தனம்! 2024லும் இப்படி தற்குறிகளா? பிஜேபி மணிகண்டனை சூசகமாக தாக்கிய ஜேம்ஸ் வசந்தன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இன்று தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு போஸ்ட் வெளியிட்டு பிரபல பட்டிமன்ற பேச்சாளரை தாக்கி இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் இது பிஜேபி மணிகண்டனை தாக்கி தான் இப்படி பதிவு வெளியிட்டு இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு பிஜேபி மணிகண்டன் மோடிக்கு நீங்கள் ஓட்டு போடவில்லை என்றால் நான் தற்கொலை செய்வேன் என்று மிரட்டும் தோனியில் பேசியிருந்தார். அது பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகிய நிலையில், ஜேம்ஸ் வசந்தன் இன்று தன்னுடைய பதிவில் தன்னுடைய தலைவனுக்கு ஓட்டு போடவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுவது எவ்வளவு முட்டாள்தனம் என்று கடுமையாக விளாசி இருக்கிறார்.

James Vasanthan about BJP Manikandan video

திரைப்பட இசை அமைப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று பல முகங்களைக் கொண்ட ஜேம்ஸ் வசந்தன் சுப்பிரமணியபுரம், பசங்க, நாணயம், ஈசன், நாகராஜ சோழன் எம் எல் ஏ போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அதுபோல நிறைய ஆல்பம் பாடல்களுக்கும் கூட இசை அமைத்திருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஒரு வார்த்தை ஒரு லட்சம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலம் அடைந்திருந்தார். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியையும் ரிவ்யூ செய்து வரும் ஜேம்ஸ் வசந்தன் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கிறார். அதிலும் சமூக வலைத்தளத்தில் அதிகமாக சமூக பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார்.

James Vasanthan about BJP Manikandan video

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும் போது மோடி இந்த நாட்டின் பிரதமராக பதவி ஏற்ற பிறகுதான் பிற நாட்டினர்கள் நம் நாட்டைப் பார்த்து பயப்படுகிறார்கள். நம்முடைய நாட்டை காப்பாற்றுவது மோடி தான் அவருக்கு ஓட்டு போட்டு எல்லோரும் அவரை மீண்டும் ஜெயிக்க வைக்க வேண்டும். அப்படி நீங்கள் ஜெயிக்க வைக்கவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் இன்று ஜேம்ஸ் வசந்தன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில், அண்மையில் ஒரு அரசியல் பரப்புரைக் காணொலி பார்த்தேன். ஒரு குறிப்பிட்டப் பேச்சாளர். முன்பே எனக்கு இவரைத் தெரியும். பட்டிமன்றங்களிலெல்லாம் பேசுபவர். இப்போது வெறிபிடித்தப் பட்டி போல ஒரு கூட்டத்தில் பேசியதை (குரை குரை என்று குரைத்ததை) கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.

James Vasanthan about BJP Manikandan video

படித்தவர் என்பவர்க்கு பண்பு இல்லாமல் போகலாம், பகுத்தறிவு இல்லாமல் போகாதே; போகக்கூடாதே. இவர் தன் தலைவரை புகழ்ந்தால் பிரச்சனையில்லை; அவருக்காக சாவேன் என்கிறார். அவருக்கு நீங்கள் வாக்களிக்கவில்லையென்றால் தற்கொலை செய்துகொள்வேன் என்கிறார். என்ன ஒரு பிற்போக்குத்தனம்! தலைவனை ஆராதிக்க ஒரு அளவில்லையா?

அந்த ஆளுக்குத் தகுதி இருக்கிறதா? இல்லையா? என்பது வேறு விஷயம். ஆனால் ஒரு ஆதரவாளர் என்பவர் இப்படியா நிலைகெட்டுப் போவது?

2024-லிலும் இப்படி தற்குறிகள் இருப்பதை நம்பமுடியவில்லை. ஆனால், கண்டேன்! கேட்டேன்! இருக்கிறார்கள்! என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

இந்த பதிவுக்கு கீழே ரசிகர்கள் பலரும் ஜேம்ஸ் வசந்தன் பிஜேபி மணிகண்டனை தான் தாக்கி இந்த பதிவு வெளியிட்டிருக்கிறார் என்று கூறி வருகிறார்கள். ஆனால் ஜேம்ஸ் வசந்தன் எந்த இடத்திலும் மணிகண்டன் பெயரை குறிப்பிடவில்லை. ஆனால் அந்த வீடியோவில் மணிகண்டன் நாக்கை மடித்து துரத்திக் கொண்டு திமுக காரர்களை திட்டி இருந்தார். அதையும் ஜேம்ஸ் வசந்தம் மறைமுகமாக தன்னுடைய பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+