மேடையில் அஜய் கிருஷ்ணாவை அவமானப்படுத்திய ஜேம்ஸ் வசந்தன்.. சொன்ன காரணம் தான் நெருடல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமூக வலைத்தளத்தில் எப்பவோ நடந்த நிகழ்வுகள் அரிதாக பல வருடங்கள் கழித்து ட்ரெண்டாகி விடுகிறது. அந்த மாதிரி தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அஜய் கிருஷ்ணாவின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அஜய் கிருஷ்ணாவை ஜேம்ஸ் வசந்தன் அஜய் கிருஷ்ணா பாடும் முறை தவறாக இருக்கிறது என்று விமர்சித்திருக்கிறார்.

அதாவது ஜெயா டிவியில் சில வருடங்களுக்கு முன்பு ஹரியுடன் நான் என்ற ஒரு பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் மூலம் பாடும் திறமையுள்ள பாடகர்களை அறிமுகம் செய்திருந்தனர். அதில் போட்டியாளராக அஜய் கிருஷ்ணா கலந்து கொண்டிருந்தபோது அப்போது நடுவராக இருந்த ஜேம்ஸ் வசந்தன் அஜய் கிருஷ்ணாவை குறித்து விமர்சித்து பேசிய வீடியோ கிளிப்ஸ் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

James Vasanthan criticized Ajay Krishna in hariyudan naan shaw

அந்த வகையில் ஜெயா டிவியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஹரியுடன் நான் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஜேம்ஸ் வசந்தன், திப்பு, ஹரிணி போன்றோர் இதில் நடுவர்களாக இருந்தனர். இதில் சரிகமப மற்றும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை போன்று போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்களுக்குள் இருக்கும் பாடல் திறமையை உலகெங்கும் அறிய செய்து கொண்டிருந்தனர்.

ஆனால் இந்த நிகழ்ச்சியில் நடுவர்கள் கடுமையாக நடந்து கொண்டதாக பல வருடங்கள் கழித்து இப்போது ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு வீடியோ இப்போது ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. அந்த வீடியோவில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி 2கே கிட்ஸ்களின் ஃபேவரைட் பாடகராக இருக்கும் அஜய் கிருஷ்ணா அந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

அதில் அஜய் கிருஷ்ணா," சங்கீத மேகம் தேன் சிந்தும் வேலை" என்ற எஸ்பிபி பாடிய பாடலை பாட அதில் திருப்தி அடையாத ஜேம்ஸ் வசந்தன் இந்த மாதிரி பாட்டை எடுத்து பாடும் போது ரொம்ப கவனமா இருக்கணும். நல்ல பாட்டு என்பதற்கு ஒரு பாட்டை எடுத்து பாட முடியாது. அந்த பாட்டு எனக்கு பொருத்தமா இருக்கா என்பது ஃபர்ஸ்ட் பாயிண்ட், அதற்குப் பிறகு அதில் இருக்கும் சங்கதி எல்லாம் நம்மளால பாட முடியுமா என்பதை பார்க்கணும்.

இந்த ரெண்டும் இல்லன்னா எந்தப் பாட்டையும் எடுக்காதீங்க. இப்போ நீங்க இந்த பாடலில் சங்கதி பாடும் போது மாட்டிக்கிட்டீங்க, அதை வச்சு நான் உங்களை டிஸ்குவாலி பண்ணட்டுமா? சில இடத்தில் உன்னுடைய ஒரிஜினல் பல இடத்தில் வருகிறது. அது சந்தோஷம்தான். ஆனால், அந்தப் பாடலில் கடைசி இடத்தில் தான் எல்லா பாடகர்களும் மாட்டுவாங்க, அந்த லைன் பாடும் போது தான் தெரியும் ஒரிஜினல் பாடகர்களாக இல்லையா என்பது நீ அந்த இடத்துல தான் வழிக்கு போக பார்த்திருக்க என்று பேசியிருக்கிறார்.

தற்போது பல வருடங்களுக்குப் பிறகு இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் ஜேம்ஸ் வசந்தை கலாய்த்து வருகிறார்கள். ஏற்கனவே ஒரு வீடியோவில் ஜேம்ஸ் வசந்த் இசையமைப்பாளர் இளையராஜாவை கலாய்த்து இருப்பார். அதாவது இளையராஜா ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் போது அந்த மேடையில் ஸ்ரேயா கோஷல் ஒரு பாடலை பாடினாராம். ஆனால் அந்த பாடலில் தமிழில் சரியாக அர்த்தம் தெரியாமல் அவர் தவறாக பாட அதற்கு இளையராஜா திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று திமிராக பேசியிருந்தார்,

ஒரு பாடலின் அர்த்தம் தெரியாமல் ஒரு வெளிநாட்டு பெண் பாடுகிறார் என்றால் அவருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் அதற்கு போய் இப்படி பெரிய வார்த்தை எல்லாம் பேசலாமா? என்று ஜேம்ஸ் வசந்தன் கேள்வி கேட்டிருந்தார். தற்போது இந்த வீடியோவை, அஜய் கிருஷ்ணாவின் வீடியோவில் இணைத்து ரசிகர்கள் இளையராஜாவுக்கு அட்வைஸ் செய்த ஜேம்ஸ் வசந்த் அவர் நடுவராக இருக்கும்போது பல பாடகர்களை அவமானப்படுத்தி இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+