Jana Nayagan: ஜனநாயகன் மேடையில் பராசக்திக்கு பதிலடி கொடுத்த ஹெச் வினோத்.. இப்படி சொல்லிட்டாரே!
சென்னை: தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவாகி வரும் ஜனநாயகன் மீது கடந்த சில மாதங்களாக பல்வேறு வதந்திகள் பரவி வந்த நிலையில், மலேசியாவில் நடைபெற்ற இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா அந்த அனைத்து சர்ச்சைகளுக்கும் ஒரே மேடையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. குறிப்பாக, ஜனநாயகன் ரீமேக் படமா என்ற கேள்விக்கு, இயக்குநர் எச்.வினோத் நேரடியாக பதிலளித்துள்ளார்.

எச்.வினோத்தின் சினிமா பயணம்
விஜய் மில்டனிடம் உதவி இயக்குநராக சினிமா பயணத்தைத் தொடங்கிய எச்.வினோத், சதுரங்க வேட்டை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே வித்தியாசமான கதைகளத்தால் இவர்களுக்கு தனி மரியாதை பெயரும் கிடைத்தது அதற்குப் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று அஜித் நடித்த வலிமை துணிவு நேர்கொண்ட பார்வை என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கி வந்தார்
அந்த நேரத்தில் கமல்ஹாசனுடன் ஒரு படம் செய்யவிருந்த நிலையில் அது கைவிடப்பட்டதை தொடர்ந்து, தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
மலேசியாவில் உடைந்த அமைதி
ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல், படத்தைப் பற்றிய எந்தவித அப்டேட்டையும் வெளியிடாமல் மெளனம் காத்து வந்த எச்.வினோத், மலேசியாவில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் முதன்முறையாக மனம் திறந்து பேசினார். அந்த உரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இது ரீமேக் இல்லை
ஜனநாயகன் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்ற வதந்தி பரவலாக பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து ஆடியோ லாஞ்சில் பேசிய எச்.வினோத்,"நிறைய பேர் சொல்றாங்க ஜனநாயகன் ஒரு ரீமேக் படம்னு. சிலர் பாதி ரீமேக்னு கூட சொல்றாங்க. அவங்களுக்கெல்லாம் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒரே விஷயம் தான். இது 100 சதவீதம் தளபதி படம். முழுக்க முழுக்க ஒரிஜினல் படம்.
சுவாரஸ்யமான ஒரு படத்தை பார்க்கப் போகிறோம் என்ற மனநிலையோட வாங்க" என்று கூறி ரீமேக் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தொடர்ந்து பேசிய எச்.வினோத்,"ஜனநாயகன் படம் முன்ன பின்ன இல்லாம, உள்ள புகுந்து அடிச்சிடலாம்னு நினைக்குறவங்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒரே ஒரு விஷயம். அய்யா... இது தளபதி படம்" என்று கூறினார்.
இந்த வார்த்தைகள், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தை சூசகமாக தாக்கி பேசினார் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், படத்தில் ரசிகர்கள் ஆடி பாடி கொண்டாடும் தருணங்கள் நிறைய இருக்கும் என்பதையும் அவர் ஆக்ரோசமாக பேசியிருந்தார். இதுவரைக்கும் அமைதியாக இருந்த வினோத் இப்படி பேசியது பலரையும் வியக்க வைத்திருக்கிறது.
மேலும், ஜனநாயகன் விஜய்யின் ஃபேர்வெல் படம் என்பதால், கடைசி 15 நிமிடங்கள் அவருக்கான விடைபெறும் காட்சிகளாக இருக்கும் என்ற தகவல்கள் குறித்து விளக்கம் அளித்த எச்.வினோத், "அதெல்லாம் இல்லை. படத்தின் முடிவில் நம்பிக்கை தான் இருக்கும். தளபதிக்கு எண்டே கிடையாது. இதுதான் அவரோட பிகினிங். இந்தப் படத்தில் அமைதியாக உட்கார்ந்து யோசிக்க வைக்கும் தருணங்கள் நிறைய இருக்கும்" என்று கூறினார்.
ரசிகர்களிடையே உயரும் எதிர்பார்ப்பு
இயக்குநர் எச்.வினோத்தின் இந்த தெளிவான பேச்சு, ஜனநாயகன் குறித்த குழப்பங்களை நீக்கி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதாலும், சமூக மற்றும் அரசியல் பின்னணியில் உருவாகும் படம் என்பதாலும், ஜனநாயகன் மீது தமிழ் சினிமா வட்டாரத்தின் கவனம் முழுமையாக குவிந்துள்ளது.
-
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
விஜய்யை பார்க்க சென்று விபத்தில் சிக்கிய தஞ்சை கல்லூரி மாணவர் விக்னேஷ் 19 நாள் கழித்து உயிரிழப்பு -
தவெக மாய உலகத்தில் இருக்கிறது.. கிராமப்புறங்களில் காத்து வாங்கும் கட்சி! ஷாக் ரிப்போர்ட் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
விஜய்யால் தாமதமாகும் சிபிஎம்-திமுக தொகுதி பங்கீடு! பெ.சண்முகம் டிமாண்ட்! யோசிக்கும் ஸ்டாலின் -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
கேரளாவில் வீசும் விஜய் அலை? சர்வேயில் வெளியான அதிர்ச்சி தகவல்.. இதை யாருமே எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications