Jana Nayagan OTT: ஜனநாயகன் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. விஜய்யின் கடைசி படத்தை இனி வீட்டிலேயே பார்க்கலாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய் நடிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகளில் விஜய்யின் கடைசி படமாக ரசிகர்கள் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதனால் திரையரங்குகளில் படத்தை பார்க்க முடியாமல் போன விஜய் ரசிகர்களுக்கு தற்போது வீட்டிலேயே படத்தை பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹெச் வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் பல்வேறு தடைகளை கடந்து ஜூலை 23, 2026 அன்று திரையரங்குகளில் வெளியானது. விஜயின் 69 வது மற்றும் கடைசி திரைப்படம் என்பதால் படத்திற்கு ஆரம்பத்தில் இருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. விஜய்யுடன் பூஜா ஹெட்டே, பாபி தியோல், மமீதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தடைகளை தாண்டி சாதனை

அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கேவிஎன் ப்ரொடக்ஷன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்சார் தொடர்பான பிரச்சனையால் பல மாதங்களாக தாமதமானது. இதனால் படம் வெளியாகுமா? என்ற கேள்வி ஒரு கட்டத்தில் எழுந்தது. பல மாத காத்திருப்பதற்குப் பிறகு படம் வெளியான போது விஜய் ரசிகர்கள் திரையரங்குகளை திருவிழா போல மாற்றினார்கள்.

Jana Nayagan OTT vijay

ஜனநாயகன் பாக்ஸ் ஆபீஸ்

பாக்ஸ் ஆபிஸ் கணக்குகளின் படி முதல் நாளில் இந்தியாவில் சுமார் 42.70 கோடி நெட் வசூல் செய்ததாகவும், உலக அளவில் தொடக்க நாளிலேயே மிகப்பெரிய வசூலை பதிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின. அதற்கு பிறகு ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் 3வது வாரத்தை கடந்து படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஜனநாயகன் உலக அளவில் 320 கோடிக்கும் அதிகமான வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.

Jana Nayagan OTT vijay

ஜனநாயகன் ஓடிடி ரிலீஸ்

21வது நாளில் இந்தியா நெட் வசூல் 194.35 கோடி ஆகவும், உலக அளவில் வசூல் 319.57 கோடியாகவும் இருந்தது. அதன் பின்னர் வசூல் மேலும் அதிகரித்து 322 கோடியை கடந்ததாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை திரையரங்குகளில் மட்டுமே பார்க்க முடிந்த ஜனநாயகன் தற்போது ஓடிடி பயணத்தை தொடங்குகிறது. ஆகஸ்ட் 21ஆம் தேதி முதல் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Jana Nayagan OTT vijay

குறிப்பாக இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டிருப்பதால் குழந்தைகளுடன் இந்த படத்தை திரையரங்குகளில் பார்க்க போகாதவர்கள் இனி வீட்டிலேயே படத்தை பார்க்கலாம். ஜனநாயகன் படத்தில் மிகப்பெரிய சிறப்பு அதன் வசூலோ விமர்சனமோ மட்டும் கிடையாது. 33 வருஷங்களாக சினிமாவில் பயணித்த விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால்தான் இந்த படத்திற்கு தனி முக்கியத்துவத்தை கொடுத்திருக்கிறது. திரையரங்குகளில் விஜய்யை கடைசியாக பார்த்த ரசிகர்கள் இப்போது ஓடிடியில் அவருடைய கடைசி படத்தை பார்க்க தயாராகி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+