Jananayagan: ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு மகளாக நடித்தது யார் தெரியுமா? சன் டிவியுடன் இப்படி ஒரு தொடர்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம், வெளியாகும் முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அரசியல் பயணத்திற்கு முன் விஜய் நடிக்கும் கடைசி படம் என பேசப்பட்டு வரும் நிலையில், இப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் வைரலாகி வருகிறது.

அந்த வரிசையில், சமீபத்தில் வெளியான 'செல்ல மகளே' பாடல் ரசிகர்களை கவர்ந்துள்ளது. சோசியல் மீடியா முழுவதும் இந்த பாடல் தான் வைரல் ஆக வருகிறது. ப்பா-மகள் பாசத்தை வெளிப்படுத்தும் இந்த தாலாட்டு மெலோடி பாடலில், விஜய்க்கு மகளாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் யார் என்ற கேள்வி தற்போது பலரிடமும் எழுந்துள்ளது.

Jananayagan Vijay sun tv

விஜய்யின் மகளாக நடித்த குழந்தை

'ஜன நாயகன்' படத்தில் விஜய்யின் மகளாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரத்தின் பெயர் லிதன்யா சிவபாலன் தான். சிறு வயதிலேயே தொலைக்காட்சி மற்றும் சினிமா உலகில் கவனம் பெற்று வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான 'சுந்தரி' சீரியலில் கதாநாயகியாக நடித்த கேபிரில்லாவின் மகளாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே அறிமுகமான லிதன்யா, 'டாப் குக் டூப் குக்', 'நானும் ரவுடிதான்' போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாராட்டுகளை பெற்றுள்ளார்.

மேலும், ரவி மோகன் நடித்த 'சைரன்', 'பிரதர்' ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ள லிதன்யா, தற்போது விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தின் மூலம் மேலும் பெரிய கவனத்தை பெற்றுள்ளார். 'செல்ல மகளே' பாடலில் அவரது நடிப்பு பலரை நெகிழ வைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "கனவு நனவானது" என லிதன்யா பதிவிட்டிருந்தது ரசிகர்களிடையே வைரலானது.

அது மட்டுமல்லாமல் ஜனநாயகன் படத்தில் லிதன்யா நடித்திருப்பதற்காக சன் டிவி தரப்பில் அவருக்கு வாழ்த்து சொல்லி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு இருக்கின்றனர். இதுவும் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது.

Jananayagan Vijay sun tv

இன்று நடைபெறும் இசை வெளியீட்டு விழா

இதற்கிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெறுகிறது. 'தளபதி திருவிழா' என்ற பெயரில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட நிகழ்வு, புக்கிட் ஜலில் திறந்தவெளி மைதானத்தில் நடத்தப்படுகிறது. இந்திய நேரப்படி மாலை 3:30 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில், 80,000 முதல் 1 லட்சம் ரசிகர்கள் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏற்கனவே வெளியான 'தளபதி கச்சேரி', 'ஒரு பேரே வரலாறு', 'செல்ல மகளே' பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

Jananayagan Vijay sun tv

பொங்கலுக்கு ஜன நாயகன்

விஜயின் 69வது மற்றும் இறுதித் திரைப்படமாக கருதப்படும் 'ஜன நாயகன்', 2026 ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+