Aranmanai Kili Serial: வண்டு கடிச்ச்ச்சுகிட்டே இருக்குது...மருமகள் துயில் முக்கியமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியின் அரண்மனை கிளி சீரியலில் மாமியார் மீனாட்சி அம்மா மருமகள் ஜானு மடியில் தூங்கிக்கொண்டு இருப்பதால். முதுகில் வண்டு துளைப்பதை பொறுத்துக்கொண்டு, தூக்கம் கலைஞ்சுட கூடாதுன்னு உட்கார்ந்து இருக்காங்க.

கண்ணில் கட்டு போட்டு இருக்கும் சமயம்.. மீனாட்சி அம்மாகிட்டே போய் சேர்கிறாள் ஜானு. அவங்க அரண்மனை வாழ்க்கை வேணாம்... பாவத்தை போக்கிக்க சாதாரண மனுஷியா வாழ்ந்து பார்க்கலாம்னு காட்டு வேலை செய்து.. வயிற்றை கழுவிகிட்டு இருக்காங்க.

ஜானுவுக்கு மாமியார்னு இன்னும் தெரியலை.. அதான் கண்ணை கட்டி வச்சு இருக்காங்களே...மாமியாருக்கு ஜானுவைதான் தெரியுமே... மடியில் படுக்க வச்சு தூங்க வைக்கும்போதுதான் முதுகில் வண்டு துளைக்குது.

 ஜானு குரல் தெரியலையா?

ஜானு குரல் தெரியலையா?

அத்தை மீனாட்சி அம்மாவைத் தேடி ஜானு வரும்போது, பசங்க வெடிச்ச பட்டாசு ஜானுவின் கண்ணில் பட்டு காயமாயிருச்சு.டாக்டர்கிட்டே போயி கட்டுப் போட்டு அழைச்சுட்டு வர்றதே மாமியார் மீனாட்சி அம்மாள்தான். இது தெரியாம ஜானு என் அத்தையை தேடி வந்தேன்.. அப்படி இப்படின்னு சீன் போடறா. மாமியார் குரல் கூட தெரியலேன்னா அப்புறம் இவள் என்ன மருமகள்...

 ஜானு கர்ப்பம்

ஜானு கர்ப்பம்

ஜானு வாந்தி எடுக்கிறாள்.. மீனாட்சி அம்மா பதறி நிற்க..மலைக்காட்டில் நானும் அர்ஜுன் சாரும் வாழக்கையை துவங்கிட்டோம்னு சொல்றா. அப்போதுதான் மீனாட்சி அம்மாவுக்கு சேர்ந்து வாழ்ந்தாங்கன்னு தெரிய வருது..ஜானு கர்ப்பமாகி வாந்தி எடுக்கறா. அவங்க சந்தோஷப்படறாங்க.

 கோயிலுக்கு வேண்டுதல்

கோயிலுக்கு வேண்டுதல்

கோயிலில் வேண்டுதல் வைக்கும்போது கூட மாமியார் மீனாட்சி அம்மா நல்லாருக்கணும்னு வேண்டிக்கறா. கோயிலுக்கு வந்து உனக்காக வேண்டிக்க மாட்டியான்னு இதுக்கு ஒரு டயலாக் வேற வச்சு இருக்காங்க...ஒரு பொண்ணு என்னைக்கு தனக்கு வேண்டி இருக்கா? சீரியலில்தான் இதை அதிசயமா காண்பிப்பாங்க.

 வண்டு துளைக்குது

வண்டு துளைக்குது

இதெல்லாம் இருக்கட்டும்.. ஹைலைட் விஷயம் பாருங்க.. ஜானு மீனாட்சி அம்மா மடியில ஆசையா படுத்து இருக்கா. அந்த நேரம்.. என் அம்மாவின் மடியில் படுத்து இருக்கற மாதிரி இருக்குமான்னு சொல்லிகிட்டே ஜானு தூங்கிட்டா. இந்த நேரம் பார்த்து மீனாட்சி அம்மாவின் முதுகில் வண்டு கடிச்ச்ச்சுகிட்டே .இருக்குதுங்க.. இவங்க மருமகள் தூக்கத்தை கெடுக்கக் கூடாதுன்னு பொறுத்துகிட்டு உட்கார்ந்து இருக்காங்க. எப்பேர்ப்பட்ட மாமியார்....!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+