கழுத்தில் சிலுவையுடன் கெத்தாக வந்த ஜேசன் சஞ்சய்.. அப்பா விஜய் வீடியோவை திரையில் பார்த்ததும் கொடுத்த ரியாக்ஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜேசன் சஞ்சய் என்றாலே இப்போது சிக்மா தான் நினைவுக்கு வருகிறது. விஜய்யின் மகன் என்ற அடையாளத்தை தாண்டி முதல் படத்திலேயே இயக்குனராக தன்னுடைய பாதையை தொடங்கி இருக்கிறார். இந்த நிலையில் இன்று சென்னையில் நடந்த சிக்மா படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஜேசன் சஞ்சய் வந்த விதமும் நிகழ்ச்சியில் நடந்த ஒரு சின்ன விஷயமும் இப்போது இணையத்தில் கவனம் பெற்று இருக்கிறது.

நிகழ்ச்சிக்கு ஜேசன் சஞ்சய் வந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் கெத்தாக இருக்கிறாரே என்று சொல்லிக் கொண்டிருக்கின்றனர். கழுத்தில் சிலுவையுடன் மிகவும் கேஷுவலாகவும் ஸ்டைலாகவும் அவர் நடந்துவரும் காட்சிகள் அவருடைய அப்பாவை நினைவு படுத்துகிறது. ஆனால் அவர் வந்த விதத்தை விட நிகழச்சியின் ஆரம்பத்தில் நடந்த ஒரு விஷயம் தான் ரசிகர்களுக்கு இன்னும் ஸ்பெஷலாக மாறி இருக்கிறது.

Jason Sanjay

திரையில் வந்த அப்பா விஜய்

சிக்மா படத்தை தயாரித்திருக்கும் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் பற்றி அறிமுக வீடியோ நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ஒளிபரப்பப்பட்டிருக்கிறது. அப்போது லைக்கா தயாரித்த படங்களின் காட்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்திருக்கின்றன. அதில் விஜய் நடித்த கத்தி படத்தின் காட்சிகள் தான் முதலில் காட்டப்பட்டது. அதை பார்த்துக் கொண்டிருந்த ஜேசன் சஞ்சய் முகத்தில் ஒரு சின்ன சிரிப்பு, அப்பா நடித்த படம் திரையில் ஓடிக் கொண்டிருக்க மகன் அதை பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தருணம் தான் இப்போ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

விஜய் மனைவி சங்கீதா வருகை

தன்னுடைய மகனுக்காக ஜேசனின் அம்மாவும் முதல்வர் விஜயின் மனைவியான சங்கீதாவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பல வருடங்களுக்கு பிறகு சங்கீதாவை தன்னுடைய மகன் இசை வெளியீட்டு விழாவில் பார்த்த ரசிகர்கள் அதைப் பற்றியும் பேசி வருகிறார்கள். ஏற்கனவே விஜய் குடும்பத்தை பற்றி பல்வேறு சர்ச்சைகள் பரவி வரும் நிலையில் இப்போது தன்னுடைய மகனுக்காக சங்கீதா மீண்டும் கேமரா முன்பு வந்திருக்கிறார்.

அப்பா மகனுக்கு சென்டிமென்ட்

லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்த முதல் தமிழ் படமே விஜய் நடித்த கத்தி. இப்போது அதே நிறுவனத்தின் தயாரிப்பில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகம் ஆகி இருக்கிறார். அதனால் இப்போது கத்தி காட்சிகள் திரையில் வரும் போது அதை ஜேசன் பார்த்துக் கொண்டிருந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு இவ்வளவு பிடித்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+