Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜயை விடுங்க.. அவர் மகன் யாரோட கூட்டணி வச்சு இருக்கிறார் பாருங்க..! நெகிழ்ந்து போன பிரபலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜயின் மகன் ஜோசன் சஞ்சய் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகிறார்.

அவரது பெயரின் இன்ஷியலை மாற்றியிருக்கிறார் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், தற்போது அவர் பிரபல பாடகர் உடன் சந்தித்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Jason Sanjay Vijay Anthony Daasan

சிக்மா படத்தின் மூலம் இயக்குநராகும் ஜேசன்

சினிமா இயக்கம் குறித்து வெளிநாட்டில் படித்துவிட்டு வந்த ஜேசன் சஞ்சய் தற்போது தனது முதல் திரைப்படத்தை இயக்கி வருகிறார். சிக்மா எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் நடிகர் சுதீப் (Sundeep Kishan) கதாநாயகனாக நடிக்கிறார். முதல் படமே என்பதால் அந்த படத்திற்கும் ஜேசன் சஞ்சய்க்கும் சினிமா ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இனிஷியல் குறித்து பரவும் பேச்சு

இதற்கிடையில் சமீபத்தில் ஜேசன் சஞ்சய் தனது பெயரின் முதல் எழுத்தை மாற்றியிருக்கிறார் என்ற பேச்சும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதனைத் தொடர்ந்து பலவிதமான யூகங்கள் சமூக வலைதளங்களில் பரவின.

அந்த சூழ்நிலையில் ஜேசன் சஞ்சய் தனது தந்தையின் பெயரின் தொடக்க எழுத்தை பயன்படுத்தாமல், தனது தாயின் பெயரின் முதல் எழுத்தை பயன்படுத்துகிறார் என்ற தகவலும் பரவி வருகிறது.

அந்தோணி தாசனை சந்தித்த ஜேசன்

இந்த நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய், பிரபல நாட்டுப்புற பாடகர் அந்தோணி தாசனை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை அந்தோணி தாசன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களில் இருவரும் சிரித்தபடி பேசிக் கொண்டிருக்கும் தருணங்கள் இடம்பெற்றுள்ளன.

Jason Sanjay Vijay Anthony Daasan

ரசிகர்கள் பல்வேறு கருத்துகள்

இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதே நேரத்தில் தேர்தல் அரசியல் குறித்து விஜய் யாருடன் கூட்டணி வைப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், "அவருடைய மகன் பாடகர் அந்தோணி தாசனுடன் கூட்டணி வைத்திருக்கிறாரே" என்று சிலர் நகைச்சுவையாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் ஜேசன் சஞ்சய் எப்போதும் எளிமையாக பழகும் குணம் கொண்டவர் என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தனக்கென பாதை அமைக்கும் ஜேசன்

சினிமா குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனது தந்தையின் புகழை பயன்படுத்தாமல் தனக்கென ஒரு பாதையை அமைத்து கொள்ள முயற்சி செய்து வருகிறார் ஜேசன் சஞ்சய். இப்போது அவர் இயக்கும் சிக்மா படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதே நேரத்தில் பாடகர் அந்தோணி தாசனுடன் அவர் சந்தித்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+