ஜெயலலிதாவின் கோடிக்கணக்கான சொத்து.. லேட்டஸ்ட் வரவு சுனிதா.. DNA ஒன்றே போதுமா? மோரில் விஷம்: பிரபலம்
சென்னை: மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை பலரும் சொந்தம் கொண்டாடி வருகின்றனா். பலரும், தாங்கள் தான் ஜெயலலிதாவின் மகள், மகன் என கூறி உரிமை கொண்டாடுகின்றனா். இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் கேரளாவை சேர்ந்த சுனிதா 37 வயது பெண், ஜெயலலிதாவின் மகள் என கூறி மனு தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ளார். அதில், இந்த விவகாரம் குறித்து விரிவாக பேசியிருக்கிறார்.
Puthiya Sinthanai என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்திருக்கும் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "யாராக இருந்தாலும், வாழ்க்கையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றால், இதுபோன்ற சிக்கல்கள் வரவே செய்யும்.. அல்லது பல கோடி சொத்து இருந்தாலும் இப்படியெல்லாம் சிக்கல்கள் வரக்கூடும்..

ஜெயலலிதா மகள்
நான்தான் ஜெயலலிதாவின் மகள், டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க ரெடி என்று மதுரையில் இருந்து மீனாட்சி என்ற பெண் முதன்முதலில் வந்தார்.. அவருக்கு முகமும், கலரும் கொஞ்சமும் மேட்ச் ஆகவில்லை.. பிரேமா என்கிற ஜெயலட்சுமி வந்தார்.. தேர்தலில் போட்டியிடுவதாகவும் சொன்னார். மூன்றாவதாக அமிர்தா என்பவர் டிஎன்ஏ டெஸ்ட், சுப்ரீம் கோர்ட் வரை சென்றார்..
இதற்கு நடுவில் இக்பால் என்பவர் கிளம்பி வந்து, நான் எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் பிறந்த மகன் என்றார்.. பிறகு சோபன்பாபுவுக்கும், ஜெயலலிதாவுக்கும் பிறந்தவர் என்று இன்னொருத்தர் வந்தார்.. அவர்கள் 2 பேரும் டைவர்ஸ் செய்து கொண்டனர், அதில் எம்ஜிஆரும் கையெழுத்து போட்டிருக்கிறார் என்று சொல்லி டாக்குமெண்ட்டுடன் வந்தார். ஆனால் உடனடியாக அவர் ஜெயிலுக்கே போய்விட்டார்.
எம்ஜிஆரின் வெளிப்படைத்தன்மை
எம்ஜிஆரின் வாழ்க்கையிலாவது ஓரளவு வெளிப்படைத்தன்மை இருந்தது.. நான் ஏன் பிறந்தேன் என்ற புத்தகத்தில் தன்னுடைய வாழ்க்கையின் பல விஷயங்களை வெளிப்படையாக எழுதியிருக்கிறார்.. ஆனால், ஜெயலலிதா வாழ்க்கையில் நிறைய மர்மங்களாகவே போய்விட்டன..
அவருக்கு ஒரு மகள் இருப்பதாக, அரசல்புரசலாக தகவல்கள் வந்தாலும், அதை பற்றி எதுவுமே சொல்லாமல் அல்லது மறுக்காமல் சென்றுவிட்டார் ஜெயலலிதா.. இதுதான் மற்றவர்களுக்கு சாதகமாகிவிட்டது.
இப்போது வரிசையாக, தான்தான் மகள் என்று வரத்துவங்கிவிட்டார்கள்.. இப்போதுகூட, தான்தான் மகள் என்று ஒருவர் நீதிமன்றத்துக்கே சென்றிருப்பதால், உச்சநீதிமன்றம் இதை எப்படி அணுக போகிறது? என்பதை எல்லாரும் கூர்ந்து கவனிக்கிறார்கள். இதற்கான ஆதாரம், சாட்சியம் இருந்தாலும்கூட, ஜெயலலிதா இறந்து இத்தனை வருடம் இவர் என்ன செய்தார்? என்ற கேள்வியும் எழுகிறது..
சுனிதா என்பவர் பின்புலம் என்ன
சுனிதா என்பவர் பின்புலம் என்ன? அதையும் விசாரிக்க வேண்டும்.. ஆனால், குற்றச்சாட்டை யார் மீதும் வைக்கலாம்.. அன்று எம்ஜிஆர் இறந்தபோது, மோரில் விஷம் கலந்து தந்துவிட்டதாக சொன்னார்.. எந்த தலைவர் இறந்தாலும், அவருடன் இருந்தவர்கள்மீதுதான் பழி, குற்றச்சாட்டு வரும்..
ஏற்கனவே ஜெயலட்சுமி, டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு வந்துள்ள நிலையில், இந்த சுனிதா யார்? அவர்கள் எல்லாம் தாங்கள்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள் என்று கிளம்பி வந்தபோதே, இந்த சுனிதா ஏன் வரவில்லை? அவர்களுக்கெல்லாம் ஏன் மறுப்பு சொல்லவில்லை?
டிஎன்ஏ மூலம் உரிமையை நிலைநாட்ட வருகிறார்.. ஆனால், இது சாதாரணமாக முடியாது.. டிஎன்ஏ என்றால், மரபணு சம்பந்தப்பட்டது.. ஏழாம் அறிவு படத்தில் வருவதுபோல, ஜெயலலிதாவின் பரம்பரையில் பிறந்தவர்கள், உடன்பிறந்தவர்களின பரம்பரையை சேர்ந்தவர்கள், வேதவல்லி முன்னோர்களை சார்ந்தவர்கள் என அந்த வகையிலும் டிஎன்ஏ வரக்கூடும்.. இவைகளை வைத்தெல்லாம் டிஎன்ஏ பொருத்தம் என்று சொல்ல முடியாது.
நேரடியாக ஜெயலலிதாவே வந்து, இன்னார்தான் தன்னுடைய மகள் என்று சொன்னால்தான் இதற்கு தீர்வு" என்று தெரிவித்துள்ளார்..
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications