பேச காத்திருக்கும் மனைவி.. ஆர்த்தி இறங்கி வருவது இதுக்கா? அட, ஜெயம் ரவி வேற ரூட்டில் இறங்கிட்டாராமே?
சென்னை: பிரபல நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி விவகாரம் பரபரத்து வரும்நிலையில், அடுத்தக்கட்ட முடிவை ஜெயம் ரவி எடுத்துவிட்டதாக கூறுகிறார்கள்.. இதுகுறித்த உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்தான் இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.. என்ன நடக்கிறது?
ஆர்த்தி - ஜெயம் ரவி குடும்ப விரிசல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு குற்றச்சாட்டுகளை ஜெயம் ரவி கடந்த வாரம் கூறியிருந்தார்.. சம்பளம், குடும்ப சூழல் உள்ளிட்ட தன்னுடைய பிரச்சனையை வெளிப்படுத்தியிருந்தார்..
ஆதரவுகள்: அதுவரை ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்து வந்த பலரும், ஜெயம் ரவியின் பக்கம் சாய துவங்கினார்கள்.. ஜெயம் ரவி பேசுவதிலும் நியாயம் உள்ளதாக கருத்துக்களை இணையவாசிகள் பதிவிடவும் துவங்கினார்கள்.

கடந்த சில தினங்களாகவே மவுனம் காத்து வந்த ஆர்த்தி, நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.. அதில், "தான் அமைதியாக இருப்பதற்கு குற்ற உணர்ச்சியோ, பலவீனமோ காரணம் இல்லை.. நீதித் துறை மீது நம்பிக்கை இருக்கிறது.. திருமணத்தைப் புனிதமாகக் கருதுவதால், இது தொடர்பாகப் பொதுவெளியில் விவாதிக்க விரும்பவில்லை" என்று கூறியிருந்தார் ஆர்த்தி.. அதாவது, ஜெயம் ரவியுடன் பேசக் காத்திருப்பதாகவும், அவர் மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாகவும் அந்த அறிக்கை இருப்பதாக தெரிகிறது.
நடவடிக்கை: ஆர்த்தியின் சமாதான நடவடிக்கைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.. ஆனால், சில தினங்களுக்கு முன்பு, மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ஜெயம் ரவியை சந்தித்து பேசியபோது அவர் சொன்ன தகவல்களையும் பகிர்ந்திருந்தார்.
"ஜெயம் ரவி பல விஷயங்களை சொல்ல மறுக்கிறார்.. ஆர்த்தியின் மூலம் தனக்கு பல மோசமான சம்பவங்கள் நடந்திருப்பதாக சொன்னார்.. ஜெயம் ரவி சம்பாதித்த பணம் முழுவதும் அவருடைய மாமியார் மற்றும் மனைவி ஆர்த்தியிடம் தான் உள்ளது. ஜெயம் ரவிக்கு சொந்த பேங்க் அக்கௌன்ட் கூட கிடையாது. அவரது உடமைகள் ஆர்த்தியிடம் தான் உள்ளது.
விவாகரத்து: விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பிறகு ஜெயம் ரவியை, ஆர்த்தி சந்தித்து பேச முயன்றார்.. ஆனால் ஜெயம் ரவி சந்திக்கவில்லை. இதற்கு காரணம் பொருளாதாரம் தான். ஜெயம் ரவி கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். மாமியார் சுஜாதாவிற்கு ஒரு பங்களா தான் உள்ளது. அது மேலேயும் 5 கேஸ் இருக்கு.. ஜெயம் ரவி தான் தங்க முட்டையிடும் வாத்தாக இருந்தார். அவரை பிரிந்தால் பொருளாதார ரீதியாக நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்பதால் கூட ஆர்த்தி பேச முயற்சி செய்திருக்கலாம்" என்று கூறியிருந்தார்.
பயில்வான் ரங்கநாதன் கடந்த வாரம் தந்த இந்த பேட்டிதான், தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. ஆர்த்தியின் சமாதான நடவடிக்கைக்கு பின்னணியில் "பொருளாதார" காரணம்தான் உள்ளதா? என்று நெட்டிசன்கள் சந்தேகங்களை எழுப்பி கொண்டிருக்கிறார்கள். ஆனால், நேற்று ஆர்த்தி வெளியிட்ட அறிக்கைக்கு, எந்த பதிலையும் இதுவரை ஜெயம் ரவி தரவில்லை.
பலே பிளான்: மாறாக, ஜெயம்ரவி மும்பைக்கு, தற்காலிகமாக இடம் பெயர்ந்துவிட்டதாக செய்திகள் வலம்வருகின்றன.. மும்பையில் புது ஆபீஸ் ஒன்றை நிறுவியுள்ள ஜெயம் ரவி, தன்னுடைய தமிழ் படங்களுக்கான பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறாராம்.. அதாவது, தன்னுடைய படங்களை பான் இந்திய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.. குடும்ப விவகாரம் ஒருபக்கம் பற்றிக்கொண்டு எரிய, பாலிவுட்டில் காலூன்றும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறாராம் ஜெயம் ரவி...!
ஆர்த்தி ரவி: இதனிடையே, நேற்றைய தினம் ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையை வைத்து, ஒரு ஆராய்ச்சியே சோஷியல் மீடியாவில் நடந்து கொண்டிருக்கிறது.. ஜெயம் ரவியோ விவாகரத்து வேண்டும் என்று உறுதியாக உள்ள நிலையில், ஆர்த்தியோ இன்ஸ்டாகிராமில் தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் ரவியை நீக்கவில்லை... ஜெயம் ரவியின் மனைவி என்கிற குறிப்பையும் நீக்கவில்லை. ஜெயம் ரவியின் போட்டோக்களை அவசர அவசரமாக நீக்கிவிட்ட நிலையில், ரவி என்ற பெயரை இன்னமும் நீக்காமல் இருப்பதால், இணையவாசிகள் குழம்பி போயிருக்கிறார்கள்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications