பிரச்சனைகளுக்கு மத்தியில் ரவி மோகன் வெளியிட்ட திடீர் போஸ்ட்.. 22 வருஷம் ஆகிடுச்சு என நெகிழ்ச்சி
சென்னை: நடிகர் ரவி மோகன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. சில நாட்களாகவே அவர் போட்டோ சூட் எடுத்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தான் நடித்த திரைப்படம் வெளியாகி 22 வருடம் ஆகிவிட்டது என்று நெகிழ்ச்சியாக பகிர்ந்து இருக்கிறார்.
சில நடிகர்கள் தாங்கள் அறிமுகமாகும் திரைப்படத்தின் பெயரை தங்களுடைய பெயராக வைத்துக் கொள்கிறார்கள். அந்த வரிசையில் தான் ஜெயம் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான நடிகர் ரவி தன்னுடைய பெயரை ஜெயம் ரவி என்று வைத்திருந்தார். ஜெயம் படம் மூலமாகத்தான் சினிமாவில் பிரபலமான ரவி மோகன் அந்தப் படத்திற்கு பிறகு பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தார். ஆனால் சமீபத்தில் அவர் நடிக்கும் திரைப்படங்கள் பெரிய அளவில் அவருக்கு வெற்றியை கொடுக்காமல் இருக்கிறது.

குடும்ப பிரச்சனை
அதுபோல ரவி மோகனுக்கு குடும்ப பிரச்சனையும் பரபரப்பு ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. கடந்த வருடத்தில் தான் தன்னுடைய மனைவியை பிரிவதாக ரவி மோகன் அறிவித்திருந்தார். இந்த செய்தி அந்த நேரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. ரவி மோகன் அவருடைய மனைவியும் அதற்கு சில மாதங்களுக்கு முன்புவரைக்கும் பேட்டி கொடுத்திருந்தனர். அது போல சோசியல் மீடியா பக்கங்களிலும் அடிக்கடி பேமிலி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.
ரவி மோகன் விவாகரத்து பிரச்சனை
ஆனால் இவர்களுடைய விவாகரத்து செய்தியை எதிர்பார்க்காத பலரும் என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில் ரவி மோகன் தன்னுடைய மனைவி ஆர்த்தி மீது சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். அதுபோல ஆர்த்தியும் ரவி மோகன் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார். இருவரும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.
கெனிஷாவின் ஆல்பம் பாடல்
ஆனால் கடந்த மாதத்தில் நீதிமன்றத்தில் இவர்கள் இருவரும் வெளியிட்டு அறிக்கைகளை டெலிட் செய்ய சொல்லி அறிவுறுத்தப்பட்டது. அதனால் பதிவுகள் எல்லாம் டெலிட் செய்யப்பட்டிருக்கிறது. அதுபோல ரவி மோகன் மற்றும் அவருடைய தோழி கெனிஷா பற்றியும் பல சர்ச்சைகள் பரவி வந்தது. அதற்கெல்லாம் ரவி மோகன் மறுப்பு தெரிவித்திருந்தார். கெனிஷா சமீபத்தில் தான் அன்றும் இன்றும் என்ற ஆல்பம் பாடலை வெளியிட்டு இருந்தார். இந்த பாடல் வெற்றி பெற்றிருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு திரை பிரபலங்கள் பலருக்கும் விருந்து வைத்திருந்தார்.

ரவி மோகன் இன்ஸ்டா பதிவு
அப்போது ரவி மோகனுடன் எடுத்த புகைப்படங்களையும் சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருந்தார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ரவி மோகன் இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதாவது தான் நடித்து ஹிட்டான "ஜெயம்" திரைப்படம் வெளியாகி 22 வருடம் ஆகிவிட்டது என்று அந்த பதிவில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து இருக்கிறார் அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அந்த பதிவிற்கு "ஜெயம் படம் வெளியாகி 22 வருடங்கள் ஆகும் நிலையில் கடவுளுக்கு நன்றி" என்று ரவி மோகன் குறிப்பிட்டிருக்கிறார். அதுபோல தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரெசார்ட் ஒன்றில் தான் இருக்கும் சில புகைப்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார். அதுவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications