பிரதீப்பை விடுங்க.. இன்று அதிரடியாக பிக் பாஸ் வீட்டிற்குள் போகும் ஜெயம் ரவி.. களைக்கட்டும் பிரச்சனை
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிரதீப் அதிரடியாக வெளியேற்றப்பட்டு இருந்த நிலையில் இன்று அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வரப்போகிறாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.
அதே நேரத்தில் இன்று கமல்ஹாசன் மாயா மற்றும் பூர்ணிமா குரூப் எதிராக கேள்வி கேட்க வேண்டும் என்றும் அதிகமான ரசிகர்கள் ஆர்வத்தோடு காத்திருக்கின்றனர்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி என்ட்ரி கொடுக்கப் போகிறார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி இப்போது பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பிரபலமாகி கொண்டிருக்கும் நிலையில் நடிகர் ஜெயம் ரவி நவம்பர் 11ஆம் தேதி ஆன இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஜெயம் ரவி நடிப்பில் அகிலன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.
அதை தொடர்ந்து வெளியான இறைவன் திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் இருந்த நிலையில் இப்போது வருகிற 2024 ஆம் ஆண்டு பிரதர், சைரன், ஜெனி மற்றும் கமல்ஹாசனோடு தக் லைப் உட்பட நான்கு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இப்படியாக இருக்கும் நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் சைரன் திரைப்படம் வெளிவர இருக்கிறது. இந்த படத்தினை ஆண்டனி பாக்யராஜ் இயக்க பிரபல இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இதற்கான டீசர் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. எனவே தற்போது வெளியான தகவலின்படி நடிகர் ஜெயம் ரவி நவம்பர் 11ஆம் தேதி ஆன இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று கமல்ஹாசன் ஜெயம் ரவியின் சைரன் திரைப்படத்தின் டீசரை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஏற்கனவே இந்த வாரம் பூர்ணிமா பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவாரா? அல்லது ஐசு வெளியேறப் போகிறாரா? என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருக்கும் நிலையில் இந்த வார டிஆர்பி அதிகமாகவே இருக்கும் அப்போது இன்று திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவை வைத்துக்கொள்ள வேண்டும் என்று பக்காவாக ப்ளான் போட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில் இதுபோன்று ஒவ்வொரு சீசனிலும் பல திரைப்படங்களின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றிருக்கும் நிலையில் இன்று ஜெயம் ரவியின் திரைப்படத்திற்கான டீசர் விழா குறித்து ரசிகர்களின் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications