ஜெயம் ரவி செல்போன் சுவிட்ச் ஆஃப்? ஆர்த்தி வெளியிட்ட அறிக்கைக்கு விடை? விவாகரத்துக்கு காரணமே இதுதானா?
சென்னை: நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவியை விவாகரத்து செய்ய போவதாக அறிவித்திருந்தார். ஆனால் ஜெயம் ரவியின் மனைவி விவாகரத்து முடிவு என்னிடம் கலந்த ஆலோசிக்காமல் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் ஜெயம் ரவி ஆர்த்தி வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளித்து எந்த விளக்கமும் வெளியிடாமல் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. அது பற்றி பார்க்கலாம்.
சமீபத்தில் சில மாதங்களாகவே நாம் பார்த்து ரசித்த திரை பிரபலங்கள் அடுத்தடுத்து விவாகரத்து செய்தியை சொல்லி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் தன்னுடைய மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்திருந்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து கலந்து ஆலோசித்து இந்த முடிவை எடுப்பதாக வெளிப்படையாக அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

அவர்களை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து செய்தியை தெரிவித்து இருந்தார்கள். அவர்களும் இருவரும் மனம் ஒத்து இந்த முடிவு எடுத்ததாக கூறி இருந்தனர். அந்த வரிசையில் இப்போது ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி இணைந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் மூன்று மாதங்களுக்கு முன்பே விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்தது.
அந்த நேரத்தில் இதை உண்மை என்று சொல்லும் வகையில் தான் ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜெயம் ரவியோடு எடுத்த எல்லா புகைப்படங்களையும் டெலிட் செய்திருந்தார். அப்போது இது பற்றி பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜெயம் ரவி தான் தன்னை சார்ந்தவர்கள் நலனுக்காக விவாகரத்து முடிவு எடுத்ததாக தெரிவித்திருந்தார்.
அந்த அறிக்கையில் கூட நீண்ட கால யோசனை மற்றும் பல பரிசோதனைகளுக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்து இருக்கிறேன். இந்த முடிவு எளிமையாக எடுக்கப்பட்டது அல்ல. என்னை சார்ந்தவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்டது. இது என்னுடைய தனிப்பட்ட முடிவு என்றும் அதில் கூறி இருக்கிறார்.
அந்த பதிவில் என்னுடைய மனைவி என்று ஆர்த்தியை குறிப்பிடாமல் "ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுகிறேன்" என்று தான் குறிப்பிட்டு இருக்கிறார். அதனால் ஜெயம் ரவி மனதளவில் மிகவும் காயப்பட்டு இருக்கிறார் என்று தெரிகிறது. கணவன் மனைவி என்றாலே அங்கு பிரச்சனைகள் இல்லாமல் இருக்காது ஆனால் ஜெயம் ரவி "நீண்டகால யோசனை செய்து பல பரிசோதனைக்கு பிறகு தான் இந்த முடிவு எடுத்திருக்கிறேன்" என்றும் அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதனால் இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை பல மாதங்களாக இருக்கும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் கடந்த வருடத்தில் ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தி இருவரும் கலந்து கொண்ட பேட்டிகளில் கூட ஜெயம் ரவி பற்றி ஆர்த்தி அவ்வளவு உருக்கமாக பேசியிருந்தார். தன்னுடைய கர்ப்ப காலகட்டத்தில் தன்னை ஜெயம் ரவி பார்த்துக் கொண்டது பற்றி பெருமையாக பேசி இருந்தார்.
ஆனால் ஒரு இடத்தில் தன்னுடைய அம்மாவிடம் தான் பேசி சிரிப்பது தன்னுடைய கணவருக்கு பிடிக்காது. உனக்கு இவ்வளவு சிரிக்க தெரியுமா? என்பது உங்க அம்மாவிடம் நீ பேசும் போது தான் எனக்கே தெரிகிறது. உங்க அம்மாவிடம் மட்டும் நீ ரொம்ப சிரிச்சு பேசுற என்கிட்ட அப்படி எல்லாம் இல்லை.. என்று சொல்லி இருக்கிறார். இது கூட இவர்களுடைய பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம்.
ஆனால் ஆர்த்தி வெளியிட்ட பதிவில் ஜெயம் ரவியை நான் சந்தித்து பேச பல முயற்சி செய்தேன். அவரை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. சமூக வலைத்தளத்தில் வந்த பதிவை பார்த்து தான் அவருடைய முடிவை நான் தெரிந்து கொண்டேன். விவாகரத்து முடிவு அவருடைய தனிப்பட்ட முடிவு. நாங்கள் கலந்து ஆலோசித்து எடுத்த முடிவல்ல என்று கூறியிருக்கிறார்.
இதனால் ஜெயம் ரவி சில மாதங்களாகவே தனியாக தான் வாழ்ந்து வருகிறார் என்று தெரிகிறது. அதுபோல செல்போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. தொடர்ச்சியாக சில ஆண்டுகளாகவே ஜெயம் ரவி அவருடைய மனைவியின் அம்மா நிறுவனத்தில் தான் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் சில திரைப்படங்களில் தோல்வி ஏற்பட்ட போது அது பற்றி ஜெயம் ரவியிடம் நஷ்ட கணக்கு காட்டியதாகவும் அதனால் ஜெயம் ரவியின் மாமியாருக்கும் அவருக்கும் சிறு கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது அதை வைத்து தான் கணவன் மனைவிக்கு பிரச்சனை வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் ஜெயம் ரவியின் மனைவி ஆரம்பத்திலிருந்தே விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்தி பழக்கப்பட்டவர் என்பதால் அவருடைய ஆடம்பர வாழ்க்கைக்கு ஜெயம் ரவியால் ஈடு கொடுக்க முடியவில்லை என்பதாலும் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் குழந்தைகளின் நலம் கருதி இவர்கள் மனம் மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
ஜெயம் ரவியின் குடும்பத்தினர் ஆரம்பத்திலேயே கஷ்டப்பட்ட சூழ்நிலையில் இருந்து வளர்ந்து இன்று உச்சத்தில் இருக்கிறார்கள். அதே நேரத்தில் குடும்பத்தை அதிகமாக நேசிக்கும் இவர்கள் ஜெயம் ரவி அவருடைய மனைவியை பிரிந்து வாழ்வதை விரும்ப மாட்டார்கள். அவர்களுடைய குழந்தைகளுக்காக சேர்த்து வைக்க தான் முயற்சி செய்வார்கள்.
ஜெயம் ரவியின் அப்பாவும் அம்மாவும் பேட்டிகளில் கலந்து கொண்ட போது கூட தங்களுடைய பேரன் பேத்திகள் குறித்து ரொம்பவும் பெருமையாக பேசி இருக்கிறார்கள். ஆனால் இப்போது ஆர்த்தி வெளியிட்ட பதிவுக்கு ஜெயம் ரவி எந்த ரியாக்ஷனும் காட்டாமல் இருக்கிறார். தன்னுடைய பிறந்தநாளில் விவாகரத்துக்காக நீதிமன்றத்தை ஜெயம் ரவி நாடி இருக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications