ஆர்த்தியாலதான் இப்படி ஆகிட்டான்னு நினைச்சோம்.. போட்டோவை பார்த்து கலங்கிட்டேன்.. ஜெயம் ரவி அப்பா ஓபன்
சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் அப்பாவான எடிட்டர் மோகன் பேட்டி ஒன்றில் தன்னுடைய குடும்பத்தோடு பேசிய வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் ஜெயம் ரவியின் காதல் விஷயம் தங்களுக்கு தெரிய வந்தபோது என்ன நடந்தது என்பது பற்றி பேசி இருக்கிறார்.
நடிகர் ஜெயம் ரவியின் அப்பா எடிட்டர் மோகன் பல வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். பல திரைப்படங்களை தயாரித்து, இயக்கி, எடிட்டும் செய்து இருக்கிறார். அதுபோல ஜெயம் ரவியின் அண்ணா ராஜாவும் இயக்குனராக இருக்கிறார். இது ஒரு பக்கம் இருந்தாலும் ஜெயம் ரவியின் விவாகரத்து பிரச்சனை இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவி அவருடைய மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார் என்ற செய்திகள் வைரலானது. அதுபோல ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை டெலிட் செய்திருந்தார். அதற்குப் பிறகு சில மாதங்களாக இந்த பிரச்சனை அமைதியாக இருந்த நிலையில் திடீரென்று சில வாரங்களுக்கு முன்பு ஜெயம் ரவி தான் ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார்.
அதற்கு ஆர்த்தி மறுப்பு தெரிவித்து இருந்தார். அதோடு ஜெயம் ரவி கெனிஷா என்ற பாடகியோடு தொடர்பில் இருக்கிறார் என்றும் வதந்திகள் பரவி வந்தது. இப்படியான பரபரப்புகளுக்கு மத்தியில் ஜெயம் ரவி உடைய காதல் அவருடைய குடும்பத்திற்கு தெரிய வந்தபோது என்ன நடந்தது என்பது குறித்து ஜெயம் ரவியின் அப்பாவான எடிட்டர் மோகன் பேட்டி ஒன்றில் பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில் மோகன் பேசுகையில், என்னுடைய மகன் பேராண்மை படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் ஆர்த்தியை காதலித்துக் கொண்டிருந்தான். அப்போது பேராண்மை படம் சூட்டிங்கிலிருந்து சில புகைப்படங்கள் வெளியாகி கொண்டிருந்தது. அந்த போட்டோவை பார்த்து நாங்கள் ரொம்பவே வருத்தப்பட்டோம். அதற்கு காரணம் அந்த போட்டோவில் ஜெயம் ரவி ரொம்பவே உடல் மெலிந்து போயிருந்தான்.
ஐயோ நம்ம மகன் ஆர்த்தி நெனப்புல தான் இப்படி உடல் மெலிஞ்சு இருக்கிறான் என்று நினைத்து என்னுடைய மகனை நேரில் சந்தித்து நீ கவலைப்படாத உன் மனசுக்கு சரின்னு பட்டதை நாங்க செய்றோம். நீ எந்த நேரத்திலும் கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. நீ ஆசைப்பட்ட மாதிரியே அந்த பொண்ணை நாங்க கல்யாணம் பண்ணி வைக்கிறோம் என்று சொன்னோம்.
அதற்கு ஜெயம் ரவியும் முகத்தை பாவமா வைத்துவிட்டு சரின்னு சொல்லிட்டு இருந்தான். ஆனால் அதற்கு பிறகு தான் தெரிந்தது அவன் பேராண்மை படத்திற்காக உடம்பை குறைத்து இருக்கான்னு ஆனா எங்க கிட்ட ஏதோ உண்மையா காதலால் உடல் குறைந்தது போல ரியாக்ஷன் கொடுத்து விட்டான். நாங்க எப்பவுமே எங்களுடைய குழந்தைகள் சந்தோஷமாக இருக்கணும் அவர்களுடைய கனவுகள் நிறைவேற வேண்டும் என்று தான் நாங்கள் ஆசைப்படுவோம்.
அதனால் அவருடைய காதல் எங்க வீட்டுக்கு தெரிய வந்தபோது உடனே ஓகே சொல்லி விட்டோம். அதுபோல ஆர்த்தி முதல் குழந்தை பிறக்கும்போது ஜெயம் ரவி எங்கேயும் எப்போதும் பட சூட்டிங்கில் இருந்தான். என்னதான் நாம கூட இருந்தாலும் ஆர்த்திக்கு துணையா இப்போ ஜெயம் ரவி பக்கத்தில் இல்லையே என்று நாங்க ரொம்ப வருத்தப்பட்டோம் என்று அந்த பேட்டியில் எடிட்டர் மோகன் பேசி இருக்கும் நிலையில் இவ்வளவு அழகான குடும்பத்திற்குள் எதனால் பிரச்சனை ஏற்பட்டது? ஏன் இவர்கள் விவாகரத்து முடிவை எடுத்தார்கள் என்று அதிகமான ரசிகர்கள் கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications