ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி திடீர் போஸ்ட்.. விவாகரத்து பற்றி தனக்கு தெரியாது என குமுறல்
சென்னை: நடிகர் ஜெயம் ரவி நேற்று முன்தினம் தன்னுடைய மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய போவதாக நீண்ட பதிவு ஒன்று வெளியிட்டு இருந்தார். அதைத் தொடர்ந்து இன்று அவருடைய மனைவி Aarti Ravi, தன்மீது தவறான குற்றச்சாட்டை ஜெயம் ரவி வைத்ததாகவும், தான் தன்னுடைய கணவரிடம் மனம் விட்டு பேச முயற்சி செய்தேன் ஆனால் நடந்தது வேறு என்று நீண்ட ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகர் ஜெயம் ரவி அவருடைய மனைவியை விவாகரத்து செய்யப் போகிறார் என்று சில மாதங்களுக்கு முன்பே செய்திகள் பரவி வந்த நிலையில் நேற்று முன்தினம் நடிகர் ஜெயம் ரவி தான் தன்னுடைய மனைவி ஆர்த்தி விவாகரத்து செய்யப் போகிறேன் தன்னுடைய குடும்ப நலனுக்காக தான் இந்த முடிவு எடுத்ததாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதை தொடர்ந்து இன்று ஜெயம் ரவியின் மனைவி சமூக வலைத்தளத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.

அதில் சமீபத்தில் ஊடகங்களிலும், சமூக வலைத்தளத்திலும் எங்கள் திருமண வாழ்க்கை குறித்து வெளியான அறிக்கையை பார்த்து நான் கவலையும் மன வேதனையும் அடைந்தேன். இது முழுக்க முழுக்க என் கவனத்திற்கு வராமலும் என் ஒப்புதல் இல்லாமலும் வெளியான ஒன்று என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையுடன் கடந்த 18 வருடங்களாக நான் வாழ்ந்த வாழ்க்கை இந்த அறிக்கையின் மூலம் அதற்குரிய கௌரவம் கண்ணியம் மற்றும் தனித்தன்மையை இழந்து விட்டதாக உணர்கிறேன்.
என் கணவரிடம் மனம் விட்டு பேச என் கணவரை சந்திக்க வேண்டும் என்று நான் சமீபகாலமாக பலவித முயற்சிகள் செய்தேன். ஆனால் அதற்கான வாய்ப்பு எனக்கு மறுக்கப்பட்டது. நானும் என் இரண்டு குழந்தைகளும் எதுவும் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். திருமண பந்தத்தில் இருந்து விலக வேண்டும் என்ற இந்த முடிவு முழுக்க முழுக்க சொந்த விருப்பத்தை சார்ந்து அவராகவே எடுத்த முடிவு தான். குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல.
ஆழ்ந்த மனவேதனையில் இருக்கின்ற நிலையிலும் நான் பொதுவெளியில் இது குறித்து கருத்து தெரிவிப்பதை தவிர்க்கவே இப்போதும் விரும்புகிறேன். ஆனால் என் மீது குற்றம்சாட்டியும் என் நடத்தையின் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலும் பொதுவெளியில் மறைமுகமாக நடத்தப்படும் தாக்குதல்களை மிகுந்த சிறந்த சிரமத்துடன் எதிர் கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தாயாக எனக்கு எப்போதும் என் குழந்தைகளின் நலனும் எதிர்காலமும் முதல் முக்கியத்துவம் வாய்ந்தது.
எந்த ஆதாரம் அற்ற குற்றச்சாட்டுகளும், என் குழந்தைகளை காயப்படுத்துவதை என்னால் அனுமதிக்க இயலாது. மறுக்கப்படாத பொய்கள் காலப்போக்கில் உண்மையாக நம்பப்படும் என்பதால் இவற்றை மறுப்பதும் என் முதல் கடமையாகிறது. தற்போது இந்த கடினமான காலகட்டத்தில் என் குழந்தைகளுக்கு தேவைப்படும் தைரியத்தையும் மனதிடத்தையும் அவர்களுடன் ஒரு தியாக நின்று அவர்களுக்கு வழங்குவதே என் தலையாய கடமை.

காலம் கடந்த உண்மைகளை எந்த பாரபட்சமும் இன்றி உணர்த்தும் என்பதை முழுமையாக நம்புகிறேன். இந்த கடின காலத்தை நானும் என் குழந்தைகளும் கடக்கும் வரை எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். இத்தனை காலமாக எங்களுக்கு ஆதரவு மட்டுமின்றி நல்வழி காட்டி வரும் பத்திரிக்கை ஊடக மற்றும் ரசிக பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
உங்கள் அன்பும் ஆதரவும் மட்டுமே என்னையும் என் குழந்தைகளையும் இந்த காலகட்டத்தில் தூணாக காத்து நிற்கும். இந்த சோதனையில் இருந்து நாங்கள் மீண்டு வர உங்கள் பிரார்த்தனைகள் துணை நிற்க வேண்டும் என்று உங்களை வேண்டி விரும்பி கொள்கிறேன் என்று அந்த பதிவில் ஆர்த்தி தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications