வாந்தி வாந்தியா ஸ்டெப்ஸ்.. ஐட்டம் டான்ஸ் தடை.. ஜெயமாலினி, சில்க் அழகு இந்த நடிகைக்கு வருமா: பிரபலம்
சென்னை : இப்போதெல்லாம் மலையாள படங்கள் வேற லெவலில் உள்ளன.. வளர்ச்சி என்பது இதுதான்.. சினிமா இப்படித்தான் இருக்கணும். வேட்டையன் படத்தில் மஞ்சுவாரியர் டான்ஸ் தேவையே இல்லையே? கதாநாயகிகளின் அறிமுக காட்சியில் டான்ஸ் கட்டாயம் ஆடணுமா என்ன? இன்னும் அந்த மாய உலகத்திலிருந்து சினிமா உலகம் மீளவே இல்லை" என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் சமீபத்தில் வெளியான சில பாடல்களில் உள்ள நடன அசைவுகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. சமீபத்தில், "டாகு மகாராஜ்" படத்தின் "தபிடி திபிடி" பாடலைத் தொடர்ந்து "ராபின்ஹுட்" படத்தின் "அதிதா சர்ப்ரைஸ்" என்ற லிரிக்கல் வீடியோவில் கெடிகா ஷர்மா ஆடிய நடன அசைவுகள் பலரது விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறது.

இதுபோன்று தொடர்ந்து நடன அசைவுகள் குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், தெலுங்கானா மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது.
அருவருப்பு நடன அசைவுகள்
அதன்படி, "திரைப்படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அருவருப்பாக காட்டுவது சரியல்ல. நடன இயக்குனர்கள், பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இந்த விஷயத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டும், இல்லையெனில் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெலுங்கானா மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ளார்.
அதில், "டெக்னாலஜி முன்னேறி வந்து கொண்டிருக்கும் சூழலில், அறிவு வளர்ச்சி உள்ள சூழலில், இன்னும் 30 வருடங்களுக்கு முன்பிருந்த குத்துப் பாட்டுகளையும், கவர்ச்சி நடனங்களையும் சேர்த்து, படங்களை தூக்கி நிறுத்த முயலுவதை இப்போதும் செய்யணுமா? புஷ்பா 1-ல் ஊ சொல்றியா மாமா, புஷ்பா 2-ல் ஃபீலிங்ஸ் பாட்டுக்கள் எதுக்கு? ஒரு கடத்தல்காரனை சீனில் காட்ட வேண்டுமானால் ஐட்டம் பாட்டு தேவையா?
காவாலா இங்கே எதுக்கு
ஜெயிலர் படத்திலும், எதுக்கு காவாலா டான்ஸ்? சம்பந்தமே இல்லாமல் செருகப்பட்ட பாடல் போல உள்ளது..
எவ்வளவு காலத்துக்கு இப்படியே எடுப்பாங்க? ஹாலிவுட்டில் அன்று ஜேம்ஸ் பாண்ட் படங்களில் உள்ள கிளப் டான்ஸ்களை இந்தியாவிலும் தங்கள் படங்களில் கொண்டு வந்தார்கள். பிறகு 80களில் ஜெயமாலினியை கவர்ச்சி டான்சுக்குள் அழைத்து வந்தார்கள். அவரை பலரும் தெலுங்கு என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்.. ஆனால், ஜெயமாலினி தஞ்சாவூரை சேர்ந்தவர்..
பிறகு சில்க் ஸ்மிதா வண்டிச்சக்கரம் வெளியாகி, கவர்ச்சி நடனங்களில் களமிறங்கினார்.. பெரிய ஹீரோக்கள் ரஜினி, கமல், சிரஞ்சிவி இவர்களெல்லாம் தங்களது பழிவாங்கும் படங்களில், ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா, அனுராதா, டிஸ்கோ சாந்தி என்று ஆடிவிட்டு போனார்கள். இந்த கவர்ச்சி நடனத்துக்கும், அந்த படங்களுக்கும் சம்பந்தமே இருக்காது.
டான்ஸ் மூவ்மென்ட்ஸ்
90களுக்கு பிறகு கவர்ச்சி நடிகைகளின் வேலையை, கதாநாயகிகளே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.. சமந்தா, தமன்னா எல்லாருமே ஆடைக்குறைப்பு நடனங்களை ஆட ஆரம்பித்துவிடடார்கள்.. டான்ஸ் மூவ்மென்ட்களை எல்லாம் ஆபாசமாக இருப்பதால்தான், இப்போது தெலுங்கானாவில் ஆப்பு அடிச்சிட்டாங்க. ஆபாச உடையணிந்து, ஆபாச நடன அசைவுகளுடன் படங்களில் திணிக்கப்படுவதால், அவைகளை சென்சார் செய்யணும் என்று தெலுங்கானா மகளிர் ஆணைய தலைவி அறிவித்திருக்கிறார்.
இப்போதெல்லாம் மலையாள படங்கள் வேற லெவலில் உள்ளன.. இதுதான் வளர்ச்சி.. இப்படித்தான் இருக்கணும். வேட்டையன் படத்தில் மஞ்சுவாரியர் டான்ஸ் தேவையே இல்லையே.. கதாநாயகிகள் அறிமுக காட்சியில் டான்ஸ் ஆடணுமா என்ன? இன்னும் அந்த மாய உலகத்திலிருந்து மீளவே இல்லை.
சினிமா ஒரு பொழுதுபோக்கு
இப்படியான அறிவிப்பு ஒட்டுமொத்த இந்தியா முழுக்க வரணும்.. திரைப்படங்கள் மேம்படணும்... சொல்லக்கூடிய நல்ல விஷயங்கள் எவ்வளவோ உள்ளன.. அதைவிட்டுட்டு இன்னமும் உடம்பை காட்டி டான்ஸ் ஆடிட்டிருந்தால்? சினிமா ஒரு பொழுதுபோக்கு என்றாலும், ஆக்கப்பூர்வமாக இருக்கணும்.
ஐட்டம் நடனங்கள் வந்தபிறகுதான், மோசமான காடசிகளை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.. அனுராதா, சில்க், டிஸ்கோ சாந்தி, ஜெயமாலினி போன்றோரின் நடனங்கள், அன்றைய சினிமாக்கள் வெற்றி பெற ஒரு ஃபார்முலாவாக இருந்தன.. அவ்வளவுதான்.. இத்தனைக்கும் அவர்களுக்கு 5 ஆயிரம், 10 ஆயிரம்தான் சொற்ப பணம் தரப்பட்டிருக்கும். இதே நடனத்தை இப்போதுள்ள நடிகைகள் ஆடும்போது கோடிக்கணக்கில் தருகிறார்கள்.
சில்க் ஸ்மிதா, ஜெயமாலினி நடனங்களில் ஆடை குறைப்பு இருக்கும் ஆனால், ஆபாச அசைவுகள் இருக்காது. இன்றைக்கு ஆடை குறைப்பு, ஆபாச அசைவுகள் இரண்டுமே உள்ளன.. இப்படி ஐட்டம் டான்ஸ் ஆடும் சமந்தா, தமன்னா இவங்கெல்லாம் என்ன அழகிகள்? ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா கிட்ட நிற்க முடியுமா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications