தாத்தா ஆன கோபி... கடுப்பில் ராதிகா எடுத்த முடிவு... கடைசியில் கோபிக்கு இப்படி ஒரு நிலைமை தேவைதான்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கர்ப்பமாக இருக்கும் செய்தி குடும்பத்திற்கு அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
ஜெனி கர்ப்பமாக இருப்பதை வைத்து ராமமூர்த்தி கோபியை பங்கமாக கலாய்த்து இருக்கிறார். அதை பார்த்து காண்டான ராதிகா கோபியிடம் சண்டையிட்டு இருக்கிறார்.

ஜெனிக்கு இருக்கும் சிம்டம்ஸ்
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில், ஜெனி காலையில் எழுந்ததும் வாமிட் பண்ணிக் கொண்டிருக்கிறார். செழியன் என்னாச்சு சாப்பிட்டது எதுவும் ஒத்துக்களையா என கேட்டு நான் சரி நான் பேஸ் வாஷ் பண்ணிட்டு வரேன் என பாத்ரூமுக்குள் செல்கிறார். அதற்குள் ஜெனி கீழே வந்து கிச்சனில் ஈஸ்வரி மற்றும் பாக்கியா இருக்க ஜெனி டல்லாக இருப்பதை பார்க்கும் ஈஸ்வரி என்ன ஆச்சு என கேட்கிறார். காலையில் இருந்து ஒரே வாமிட் ஆக இருக்கு மூணு நாளா வாந்தி வர மாதிரியே இருக்கிறது என சொல்லிக் கொண்டிருக்கிறார். இதை கேட்ட ஈஸ்வரி சந்தேகத்தில் டேட் தள்ளி போய் இருக்கா என கேட்க ஆமாம் என கூறுகிறார்.

அம்மாவாக போகும் ஜெனி
அப்போ எல்லாம் நல்ல விஷயமாகத்தான் இருக்கும் ஜெனியை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போய் செக் பண்ணுன பிறகு யாருக்கும் சொல்லுவோம் அதுவரைக்கும் யாரிடமும் சொல்ல வேண்டாம் என பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது செழியன் வந்து என்ன ஆச்சு என கேட்க செழியன் தலையில் ஈஸ்வரி செல்லமாக கொட்டுகிறார். செழியனுக்கு ஜெனி கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேட்டு சந்தோஷத்தில் குதிக்கிறார் .அடுத்து ஹாஸ்பிடலுக்கு சென்று கன்பார்ம் செய்து வந்த பிறகு ராமமூர்த்தி அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

கோபியை பங்கம் செய்த ராமமூர்த்தி
தெருவில் இருப்பவர்களுக்கு ஸ்வீட் கொடுத்து கொண்டு இருந்த ராமமூர்த்தி கோபியின் வீட்டிற்கு சென்று கோபி மற்றும் ராதிகாவுக்கு கொடுத்து நான் கொள்ளு தாத்தாவாக போறேன். நீ தாத்தாவாக போரா தாத்தா... தாத்தா என வெறுப்பேற்றுகிறார். ராமமூர்த்தி அங்கிருந்து கிளம்பியதும் ராதிகாவிடம் கோபி என்னை பார்த்த தாத்தா மாதிரியா இருக்கு என சொல்ல தாத்தங்கறது கொஞ்சம் ஓவர் தான். சரி, லட்டு சாப்பிட்டு போய் மாவு வாங்கிட்டு வாங்க என சொல்லி கடுப்பானபடியே அங்கிருந்து கிளம்புகிறார். அடுத்ததாக எழியன் ஆபீஸில் அமிர்தா, வர்ஷினி, எழியன் ஃபிரண்ட் என இருக்கும்போது இங்கே எதற்கு வேலைக்கு வந்தா என்று வர்ஷினி அமிர்தாவிடம் கேட்கிறார் அதற்கு அமிர்தா சிரித்துக் கொண்டிருப்பது பார்த்து நீ எழிலை காதலிக்கிறாயா? உங்க வீட்டில் எப்படி கல்யாணத்துக்கு சம்மதிப்பார்களா? என்று கடுப்போடு கேட்டு கொண்டிருக்கிறார்.

சந்தோஷத்தில் கோபி செய்த செயல்
எழில் ஆபீசுக்கு வந்து ஜெனி கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அனைவருக்கும் சொல்லி ஸ்வீட் கொடுத்து சந்தோஷப்படுகிறார். அடுத்து செழியன் ஆபீஸ் கிளம்பும் போது கோபி வந்து வீட்டு வாசலில் செழியனை கட்டிப்பிடித்து வாழ்த்து கூறி எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு என பேசுகிறார். எனக்கு வீட்டுக்குள்ளே வந்து உனக்கு வாழ்த்துக்கள் சொல்ல ஆசையாக இருக்கிறது. ஆனால், நிலைமை சரியில்லை என்று வாசலில் வைத்து செழியனுக்கு வாழ்த்து கூறி ஜெனியிடமும் நான் வாழ்த்து சொன்னதாக சொல்லிவிடு என்று கூறி சில அறிவுரைகளையும் கூறுகிறார். அப்புறம் மீட் பண்ணலாம். பாய் யாராவது பார்த்து விடுவார்கள் என சொல்லி கோபி கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் முடிவடைகிறது.
-
பிக் பாஸ் வீட்டுக்குள் இப்போது சாதாரண மக்கள்.. வெற்றியா? விபரீதமா? உண்மையான சவால் இதுதான்! -
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications