Jio Hotstar: ஹார்ட்பீட் 3 முதல் விஜய் சேதுபதியின் காட்டான் வரை.. ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான புதிய அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜியோ ஹாட்ஸ்டார் சவுத் அண்ட் பவுண்டு நிகழ்ச்சி சென்னையில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், விஜய் சேதுபதி, மோகன்லால், நாகார்ஜுனா உள்ளிட்ட பல நடிகர்களும் இயக்குனர்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் தமிழில் வெளியாக உள்ள சில முக்கிய படைப்புகள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

அப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியை மூன்று மொழிகளில் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் ஒன்றாக ஒரே மேடையில் கலந்து கொண்டனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழியை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி, மோகன்லால், மற்றும் நாக அர்ஜுனா என மூன்று பேரும் கலந்துகொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றியும், தங்களுடைய கருத்துகள் பற்றியும் பேசி இருந்தனர்.

Jio Hotstar ott Vijay Sethupathi

அதைத்தொடர்ந்து ஜியோ டிஸ்னி ஹாட்ஸ்டாரில் அடுத்ததாக வர இருக்கும் படைப்புகள் பற்றிய தகவலும் வெளியாகி இருக்கிறது. அதிலும் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான், யோகி பாபு நடிக்கும் கிணத்த காணோம், கதிர் நடிக்கும் லிங்கம், பிரியாமணி மற்றும் பிக் பாஸ் ஆரி நடிக்கும் குட்வைப் சீசன் 2 போன்ற வெப் சீரிஸ்களும் தமிழில் அதிகமான வரவேற்பு பெற்ற ஹார்ட் பீட் வெப் சீரிசின் மூன்றாவது சீசனும் விரைவில் வர இருக்கிறது.

அடுத்ததாக ஜிவி பிரகாஷ் நடிக்கும் லக்கி தி சூப்பர் ஸ்டார், எரும சாணி விஜய் குமார் நடிக்கும் ரிசார்ட், கௌரி கிஷன் நடிக்கும் லவ் ஆல்வேஸ் என்ற வெப்சீரிஸ்கள் மற்றும் படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இது மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு வெப் சீரிஸ்கள் படங்கள் குறித்து அறிவிப்பையும் ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டு இருக்கிறது. ஆனாலும் இந்த வெப் சீரிஸ் எல்லாம் எப்போது வெளியாகும்? இதன் தொழில்நுட்ப குழுவினர்கள் குறித்த தகவல்கள் எதுவும் சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வார இறுதி நாளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் எந்த வெப் சீரிஸ் வரப்போகிறது என்ற எதிர்பார்ப்போடு இருக்கும் ரசிகர்களுக்கு இனி என்டர்டைன்மெண்ட் தான்.

சின்னத்திரையில் சீரியல் பார்க்கும் ரசிகர்களை விடவும் இப்போது ஓடிடியில் வெப் சீரிஸ் பார்க்கும் ரசிகர்கள் அதிகமானோர் இருக்கிறார்கள் சமீபத்தில் கூட ஹார்ட் பீட் இரண்டாவது பாகம் திடீரென முடிவுக்கு வந்த போது அது குறித்த பேச்சு இணையத்தில் அதிகமாக இருந்தது. இப்போது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே மூன்றாவது சீசனும் தொடங்க போகிறது. இதற்கான போட்டோ சூட் கூட நேற்று நடைபெற்றது. அதில் ஹார்ட் பீட் வெப் சீரிஸ் நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். இதனால் இந்த சீரிஸ் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்போடு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+