ஏன் இந்த பாகுபாடு? ஜோடி ஆர் யூ ரெடியில் unfair eviction.. இதை கவனிக்கலையா? ரசிகர்கள் அதிருப்தி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வாரத்தில் ரேஷ்மா முரளிதரன் மற்றும் சுபன் ஜோடி எலிமினேஷன் ஆகி இருந்தது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது ரேஷ்மா மற்றும் சுபன் ஜோடி நன்றாகவே டான்ஸ் ஆடி இருந்தனர் ஆனால் அவர்களை எவிக்ஷன் செய்தது சரி இல்லை என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனாலையே புதியது புதியதாக பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு வருகிறது. அதிலும் டேன்ஸ் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வரிசையில் இப்போது ஜோடி ஆர் யூ ரெடி என்ற ஒரு நிகழ்ச்சி தொடங்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே டான்ஸ் ஜோடி, ஜோடி நம்பர் 1 என பல நடன நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்த நிலையில் இப்போது ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சி ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் 11 வது சீசன் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை ரியோ மற்றும் ஏஞ்சலின் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
அதுபோல இந்த நிகழ்ச்சிக்கு நடிகை மீனா, ஸ்ரீதேவி விஜயகுமார், டான்ஸ் மாஸ்டர் சாண்டி போன்றோர் நடுவர்களாக பங்கேற்று இருக்கின்றனர். கடந்த ஜனவரி மாதம் இந்த நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அதுபோல 20 போட்டியாளர்களோடு இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இதில் நடன கலைஞர்களோடு சேர்ந்து தொலைக்காட்சி பிரபலங்கள் ஜோடியாக டான்ஸ் ஆடுகின்றனர். அதுபோல இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கான்செப்ட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கிருஷ்ணா- சில்பா, வினித்- ரம்யா கோல், ரவீனா- விக்னேஷ், தர்ஷிகா -பிரியதர்ஷினி ஆகியோர் சிறந்த ஜோடிகளாக அடுத்த கட்டத்திற்கு தேர்வாகி இருக்கின்றனர். இப்படியான நிலையில் இந்த வாரம் எலிமினேஷன் சுற்று நடைபெற்று இருந்தது.
அதில் யாருக்கும் எதிர்பார்க்காத வகையில் ரேஷ்மா முரளிதரன் மற்றும் சுபன் ஜோடி எலிமினேட் ஆகியிருக்கின்றனர். இதுதான் இணையத்தில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இவர்கள் ஆரம்பத்தில் இருந்தே நன்றாகத்தான் டான்ஸ் ஆடி வருகிறார்கள். ஆனால் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்கள். ரேஷ்மா வெளியேறியது அவருடைய ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தொடர்ந்த இது குறித்து இது unfair eviction என்று கருத்து கூறி வருகிறார்கள்.
அடிக்கடி விஜய் டிவியில் இந்த மாதிரி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிரச்சனை வருவதை காண முடிகிறது. அதுவும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் பல நேரங்களில் unfair eviction கூறப்படுகிறது. அது போல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கூட சிலருடைய எலிமினேஷன் பார்த்து ரசிகர்கள் unfair என்று சொல்லி இருக்கின்றனர். அந்த வகையில் இப்போது ரேஷ்மா மற்றும் சுபன் ஜோடிக்கு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
ரேஷ்மா விஜய் டிவியில் கிழக்கு வாசல் என்ற சீரியலில் இப்போது நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் ஜீ தமிழில் டான்ஸ் நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகம் ஆகி இருந்திருந்தார். அதற்குப் பிறகு ஜீ தமிழில் பூவே பூச்சூடவா என்ற சீரியல் மூலமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்த நிலையில் இப்போது ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியில் இருந்து இவர் வெளியேறியது குறித்து அதிகமான மீம்ஸ்கள் இணையத்தில் பரவி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications