“Jodi Are You Ready” டைட்டில் ஜெயித்ததும் வந்து விழுந்த வார்த்தை.. வீட்டில் மரணம்! கண் கலங்கிய தனுஷ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற தனுஷ் மற்றும் ஜஸ்டினா சமீபத்தில் பேட்டி ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றனர்.
அதில் பல வருடங்களாக போராடி இப்போதுதான் முதல்முறையாக ஒரு வெற்றி கிடைத்திருக்கிறது. அந்த வெற்றியை அனுபவிக்க விடாமல் சிலர் நீ டைட்டில் ஜெயித்து விட்டாலே காலி அவ்வளவுதான்னு சொல்றாங்க என்று உருக்கமாக தனுஷ் மற்றும் ஜஸ்டினா பேசியிருக்கிறார்கள். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெறுவது ஒன்றும் அவ்வளவு எளிமையானது கிடையாது. பல கட்டங்களாக நடக்கும் போட்டிகளில் தங்களுடைய மொத்த உழைப்பையும் போட்டு வெற்றிக்காக காத்திருக்கும் பலருக்கு நூல் இழையில் வாய்ப்பு பறிபோனது உண்டு. ஆனால் பல போராட்டங்களுக்குப் பிறகு தனுஷ் மற்றும் ஜஸ்டின் வெற்றி பெற்று இருக்கின்றனர்.
அது குறித்து ஜஸ்டின் பேசுகையில் நான் கிட்டத்தட்ட ஆறு ஏழு வருஷமா இதற்காக போராடினேன். இந்த வெற்றி மூன்று மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி. பல வருட போராட்டத்திற்கு கிடைத்த பலனாக தான் இன்று நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். இதற்கு வராதா மாஸ்டர் தான் காரணம் என்று சொல்லணும். இதுக்காக ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கோம். நான் டான்ஸ் ஆட போறேன்னு எங்க வீட்டில என்னை ஏத்துக்கவே இல்ல.
அப்பா என்கிட்ட பேசுவதையே நிறுத்திட்டாரு. ஆனா முதல் முறையை என்னுடைய பெர்ஃபார்மன்ஸ் பார்த்து அப்பா என்கரேஜ் பண்ணது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. இப்போ உன் பொண்ணு நல்லா பர்பாமன்ஸ் பண்ணுறாங்கன்னு சொந்தக்காரங்க அப்பா அம்மா கிட்ட சொல்ல ஆரம்பிச்சு இருக்காங்க. இந்த டான்ஸ்காக ஆடிக்கொண்டிருக்கும் போது மூக்கை எல்லாம் ஒடச்சிருக்கிறோம்.
என் கூட ஆடிக் கொண்டிருக்கும்போது தனுசுக்கு பல்லுல அடிபட்டு பல்லே வெளியே வந்துடுச்சு என்று கூறி இருக்கிறார். அது குறித்து தனுஷ் பேசுகையில் ஆமா லிப்ட் பண்ணி கீழே வரும் இப்போது ஒருத்தர் இடிச்சதில் பல்லில் அடிபட்டுருச்சு. கப்பு வாங்கின பிறகு அந்த வலியெல்லாம் போயிடுச்சு. கப்பை கையில் வாங்குனபோது பிறந்த குழந்தையை கையில் வாங்கின மாதிரி தான் உடம்பெல்லாம் சிலிர்த்திடுச்சு. செட்டில் எல்லாரும் உன்னுடைய வெற்றியை கொண்டாடுகிறார்கள் என்ற சொன்னபோது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது.
நம்மளை சுற்றி இத்தனை பேரை சம்பாதித்து இருக்கிறோம்னு பெருமையாகவும் இருந்துச்சு என்று கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து ஜஸ்டினா பேசுகையில் "உருகி உருகி போனதடி என் மனசு" என்ற பாடலுக்கு நாங்க டான்ஸ் ஆடினது பயங்கரமா கிட் ஆயிடுச்சு. அந்த பாட்டுக்கு ப்ராக்டிஸ் பண்ணிட்டு இருக்கும்போது எங்க பாட்டி இறந்துட்டாங்கன்னு எனக்கு போன் வந்துச்சு. ஒரு மணி நேரம் அவங்க கூட இருந்துட்டு இறுதி சடங்குல கூட கலந்துக்காம ப்ராக்டீஸ் வந்துட்டேன்.
அப்புறமா அந்த பாடல் எல்லாராலும் பாராட்டப்படும் போது பலர் உங்க பாட்டி உன் பின்னாடி இருந்து உனக்கு சப்போர்ட் பண்றாங்கன்னு சொன்னாங்க என்று கண் கலங்க பேசி இருக்கிறார். அதுபோல டைட்டில் வின் பண்ணிட்டாலே நீ காலி அவ்ளோதான்னு சொல்றாங்க. எல்லாருடைய மைண்ட் செட்டிலையும் அப்படித்தான் இருக்கு. அந்த மைண்ட் செட்டை உடைக்கணும் என்று தனுஷ் மற்றும் ஜஸ்டினா பேசியிருக்கின்றனர்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications