ராஜீ தாளம் போட...ஐக்கி பாட்டுப்பாட..குத்தாட்டம் போட்ட பாவனி..இது வேற லெவல் தான் கொண்டாடும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் ரசிகர்களுக்கு பல நாட்களுக்கு பிறகு அன்சீனில் என்டர்டைன்மென்ட் சீன் கிடைத்திருக்கிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சண்டை சச்சரவுகளை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அன்சீனில் தற்போது ஆட்டம் பாட்டு தோடு கலக்கவும் போட்டியாளர்களை பார்த்து ரசித்து வருகின்றனர்.

பல நாட்களுக்குப் பிறகு பாவனி போட்ட ஆட்டம் ரசிகர்களை எனர்ஜி அடைய வைத்திருக்கிறதாம்.

ரசிகர்களை கவர்ந்த பிக் பாஸ்

ரசிகர்களை கவர்ந்த பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்டார் விஜய் டிவியில் இரவு 10 மணி முதல் 11 மணி வரைக்கும் சனி மற்றும் ஞாயிறு இரவு ஒன்பதரை மணி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் இதில் காட்டப்படாத அன்சீன் வீடியோக்கள் ஸ்டார் மியூசிக் டிவியில் இரவு 11 மணிக்கும் மறுநாள் பதினோரு மணிக்கும் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு நாளில் 24 மணி நேரமும் எடுக்கும் வீடியோக்களை அதிகமாக ஒளிபரப்ப முடியவில்லை என்பதால் இப்படி இரண்டு நேரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் விஜய் டிவியில் பரபரப்பாக எபிசோடுகள் காட்டப்படுவதுபோல ஸ்டார் மியூசிகில் கலகலப்பான நிகழ்ச்சிகள் காட்டப்பட்டு வருகிறது.

மனதைக் கவர்ந்த அன்சீன்

மனதைக் கவர்ந்த அன்சீன்

தற்போது பல ரசிகர்கள் அன் சீன் பிக்பாஸ் பார்த்ததற்கு தொடங்கிவிட்டனர். அதிலேயே அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த மாதிரிதான் தற்போது கூட கலகலப்பான ஒரு எபிசோட்டை பார்த்ததும் ரசிகர்கள் உச்சுக்கொட்டி ரசித்து வருகின்றனர். இந்த மாதிரி ஜாலியாக இருந்தாலே நிகழ்ச்சி சுவாரஸ்யம் கூடி விடுகிறது என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அடித்துக் கொண்டிருக்கும் எபிசோடு களையும் சண்டை சச்சரவுகளையும் பார்த்த ரசிகர்களுக்கு அன் சீன் வீடியோஸ் மாறுதலை கொடுத்து வருகிறது.

மோதிக் கொண்ட நிரூப் மற்றும் பிரியங்கா

மோதிக் கொண்ட நிரூப் மற்றும் பிரியங்கா

நேற்றைய எபிசோடில் பிரியங்கா மற்றும் நிரூப் இடையே காரசாரமான போட்டி நிலவி வந்தது. இதுவரை இல்லாத வகையில் நிரூப் மற்றும் பிரியங்கா இருவரும் மோதிக்கொண்டது ரசிகர்கள் இந்த வார தலைவர் பதவிக்காக இப்படி மோதிக் கொள்கிறார்களே என்று யோசித்துக்கொண்டிருந்த நிலையில், அதில் சுவாரசியம் இல்லாமல் நிகழ்ச்சி இருந்ததாக ரசிகர்கள் பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனாலேயே பலர் அன்சீன் பார்க்கலாம் என்று தங்களுடைய விருப்பங்களை தெரிவித்து வருகின்றனர். அதுபோலத்தான் நேற்றைய எபிசோட் ஜாலியாகவும் இருந்திருக்கின்றது.

கலக்கலான கச்சேரி

கலக்கலான கச்சேரி

இந்த வாரம் ஆகாயத்தின் ஆற்றல் பாவனியிடம் இருப்பதால் அவர் தான் பிக்பாஸ் வீட்டை ஆட்சி செய்து வருகிறார். ஆனாலும் நேற்றைய அன் சீன் எபிசோட்டில் டைனிங் ஹாலில் ராஜு, அண்ணாச்சி, ஐக்கி, நிரூப், சிபி போன்றோர் அமர்ந்திருக்க அதில் கச்சேரி தொடங்கியிருக்கின்றனர். ஐக்கி 'நாட்டு சரக்கு நச்சுனு தான் இருக்கு' என்னும் பாடலை பாடிக் கொண்டிருக்கிறார்.அதற்க்கு ராஜூ தாளம் இசை இசைத்துக் கொண்டிருக்கிறார். இவர்களின் கச்சேரியில் பங்கு பெற்று கலக்கல் டான்ஸ் போட்டுக் கொண்டிருக்கிறார் பாவனி. இதை பார்த்ததும பாவனியின் ரசிகர்கள் ரொம்ப நாளுக்கு பிறகு இப்படி ஒரு ஜாலியான எபிசோடு பார்ப்பது கலக்கலாக இருக்கிறது என்று கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+