மாதம்பட்டி ரங்கராஜுடன் திருமண நாள்.. ஜாய் கிரிஸில்டா போட்ட போஸ்ட் வைரல்! அடுத்த சம்பவம் லோடிங்
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் உடன் தனக்கு கல்யாணம் முடிந்து ஒரு வருடம் ஆகிவிட்டது என்று ஜாய் கிரிஸில்டா என்று போஸ்ட் போட்டு இருக்கிறார். அதோடு தன்னுடைய கணவர் என்று சொல்லி மாதம்பட்டி ரங்கராஜுக்கு அவர் ஸ்பெஷலான வாழ்த்துக்களையும் சொல்லி இருக்கிறார். இது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மாதம்பட்டி ரங்கராஜ் சோசியல் மீடியா பயன்படுத்தும் பலருக்கும் பரீட்சையமானவர் நாவல் பழ சட்னி, கொய்யாக்கா சட்னி என்று விதவிதமான சமையல் செய்து சோசியல் மீடியாக்களில் இவர் வெளியிட அதுவே அவருக்கு பெயர் வாங்கி கொடுத்தது. மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் கலைஞராகவும் பல பிரபலங்கள் வீட்டு பங்க்ஷனில் ஈவண்டுகளை நடத்துபவராகவும் இருக்கிறார். அதுபோல மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.

போதாத குறைக்கு இவருக்கு விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சின்னத்திரையிலும் பிரபலமாகிவிட்டார். இந்த நிலையில் தான் சில மாதங்களுக்கு முன்பு ஜாய் கிரிஸில்டா என்ற ஆடை வடிவமைப்பாளர் தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜனுக்கும் திருமணம் ஆகவிட்டது என்று ஒரு போஸ்ட் போட அது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதோடு தான் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்திருந்தார். இதனால் இது பற்றிய பேச்சு அதிகமாக எழுந்து வந்தது. அந்த நேரத்தில் ஜாய் மாதம்பட்டி ரங்கராஜ் மீது போலீஸில் புகார் கொடுத்து இருந்தார். அதில் தன்னை திருமணம் செய்து தான் கர்ப்பமாக இருந்த நேரத்தில் தன்னை ஏமாற்றி விட்டதாக மாதம்பட்டி ரங்கராஜன் மீது ஜாய் குற்ற சாட்டுகள் வைத்திருந்தார்.
ஆரம்பத்தில் அமைதியாக இருந்த ரங்கராஜ் பிறகு ஜாய் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வீடியோக்களை பகிர்ந்து வந்ததால், தான் மிரட்டலினால் தான் ஜாய் கிரிஸில்டாவை திருமணம் செய்து கொண்டேன் என்றும், அவருடைய குழந்தை என்னுடையது என்று டிஎன்ஏ டெஸ்டில் நிரூபணம் ஆனால் அந்த குழந்தைக்கான செலவை தான் கவனித்துக் கொள்வதாகவும் ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.
ஆனால் மாதம்பட்டி ரங்கராஜ் போஸ்ட் போட்டு ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையிலும் டிஎன்ஏ டெஸ்ட்டுக்கு ரங்கராஜ் வராமல் ஒளிந்துக் கொண்டிருக்கிறார் என்று ஜாய் போஸ்ட் போட்டுக் கொண்டே இருந்தார். நிலைமை இப்படி இருக்கும் போது , மாதம்பட்டி ரங்கராஜன் முதல் மனைவி ஸ்ருதி ஆரம்பத்தில் இருந்து தன்னுடைய கணவருக்கு சப்போர்ட் செய்து கொண்டிருக்கிறார் .
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு கூட ஜாய் மாதம்பட்டி ரங்கராஜ் மீது மீண்டும் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாமீனில் வெளியே வராதபடி வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதுபோல தன் தான் வசித்து வரும் வீட்டின் ஒப்பந்தமும் பிப்ரவரி மாதத்துடன் முடிவுக்கு வருவதால் தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்ள தனக்கு அவரிடம் இருந்து பணம் பெற்று தர வேண்டும் என்று கூட அதில் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் ஜாய் இன்று மாதம்பட்டி ரங்கராஜ் தனக்கு தாலி கட்டும் புகைப்படத்தை பகிர்ந்து "திருமண நாள் வாழ்த்துக்கள் மை சோ ஹால்ட் கணவர்" என போஸ்ட் போட்டு இருக்கிறார். அதோடு அந்த பதிவில் "அவளை உடைக்க நினைத்த எல்லாவற்றுக்கும் ஒரே பதில் அவளுடன் தைரியம்" என்று தெரிவித்திருக்கிறார்.
-
வாழ்க்கையிலேயே கொடுமையான விஷயம் இதுதான்.. இதை மட்டும் யாரும் பண்ணாதீங்க! உருக்கமாக பேசிய செல்வராகவன் -
அப்துல் கலாம் சொன்ன ஒரு விஷயத்தை பாரதிராஜா செய்திருந்தால்.. இந்த பிரச்சனை வந்திருக்காதோ? ரசிகர்கள் உருக்கம் -
சிறகடிக்க ஆசை: ஆந்திரா வரை சென்று ரேகாவை மீட்ட முத்து! உயிரை பணயம் வைத்த மீனா... அதிரடி திருப்பம் -
வீடியோ எடுத்து மிரட்டுகிறார்.. நாஞ்சில் விஜயன் மீது புகார் கொடுத்த டிக் டாக் பிரபலம்.. அடுத்த பஞ்சாயத்து -
சிறகடிக்க ஆசை: மனோஜ் சொன்னதை கேட்டு கோபப்பட்ட விஜயா.. உயிரை பணயம் வைக்கும் முத்து! கதையே மாறிப்போச்சு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை












Click it and Unblock the Notifications